இந்தியாவுக்கு டஃப் கொடுக்க எங்களோட அந்த ஒரு பவுலரே போதும்.. இங்கிலாந்து கேப்டன் பென் ஸ்டோக்ஸ்

- Advertisement -

இந்தியா மற்றும் இங்கிலாந்து கிரிக்கெட் அணிகள் மோதும் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் ஹைதராபாத் நகரில் ஜனவரி 25ஆம் தேதி துவங்குகிறது. 2025 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் கோப்பையின் ஒரு பகுதியாக நடைபெற உள்ள இத்தொடரில் 2012க்குப்பின் 12 வருடங்கள் கழித்து இந்தியாவை அதன் சொந்த மண்ணில் தோற்கடிப்போம் என்று இங்கிலாந்து அணியினர் சவால் விடுத்து வருகின்றனர்.

குறிப்பாக டெஸ்ட் கிரிக்கெட்டில் டி20 போல விளையாடும் தங்களுடைய புதிய அணுகுமுறையை பயன்படுத்தி இந்தியாவை வீழ்த்துவோம் என்று ஜேம்ஸ் ஆண்டர்சன், மார்க் வுட் போன்ற இங்கிலாந்து வீரர்கள் சமீபத்தில் தெரிவித்திருந்தார்கள். இந்த சூழ்நிலையில் ஹைதராபாத் நகரில் நடைபெறும் முதல் போட்டிக்கான தங்களுடைய விளையாடும் 11 பேர் அணியில் ரெஹன் அஹ்மது, டாம் ஹார்ட்லி, ஜேக் லீச் ஆகிய 2 ஸ்பின்னர்களை இங்கிலாந்து தேர்ந்தெடுத்துள்ளது.

- Advertisement -

ஒருத்தர் போதும்:
அதை விட அனுபவம் மிகுந்த ஜேம்ஸ் ஆண்டர்சனை கழற்றி விட்டுள்ள இங்கிலாந்து மார்க் வுட்டை மட்டும் ஒரே ஒரு வேகப்பந்து வீச்சாளராக தேர்வு செய்துள்ளது. ஆனால் ஒருவேளை ஹைதராபாத் மைதானம் ஆரம்பகட்ட நாட்களில் சுழலுக்கு சாதகமாக இல்லாமல் போனால் வெறும் ஒரு வேகப்பந்து வீச்சாளரை வைத்து இங்கிலாந்து வெல்ல முடியுமா என்பது அந்நாட்டு ரசிகர்களின் கவலையாக இருக்கிறது.

இந்நிலையில் 150 கி.மீ வேகத்தில் ஸ்விங் செய்து வீசக்கூடிய மார்க் வுட் இந்தியாவை தோற்கடிக்க போதுமானவர் என்று இங்கிலாந்து கேப்டன் பென் ஸ்டோக்ஸ் தெரிவித்துள்ளார். இது பற்றி போட்டிக்கு முந்தைய செய்தியாளர்கள் சந்திப்பில் அவர் பேசியது பின்வருமாறு. “அவர் அதிகமான வேகத்தை கொண்டு வருவார். அவர் உண்மையாக தாக்கத்தை ஏற்படுத்தக் கூடியவர்”

- Advertisement -

“ஒரு மணி நேரத்திற்கு 90 மைல் வேகத்தில் பந்தை ரிவர்ஸ் செய்யக்கூடிய அவருக்கு எதிராக விளையாடுவது மிகவும் கடினமாகும். இந்திய மைதானங்களில் குறுகிய நேரத்தில் சிறிய ஸ்பெல்லில் அவர் தம்மால் முடிந்த அளவுக்கு அதிரடியான வேகத்தில் வீசக்கூடியவர். தேவைப்பட்டால் பெரிய ஸ்பெல்லை வீசுவதிலும் கவலை இல்லை. ஏனெனில் அவரை இந்த வாரம் நாங்கள் அப்படித்தான் பயன்படுத்த உள்ளோம்”

இதையும் படிங்க: தலைவலியா இருக்கு.. முதல் டெஸ்டில் அக்சர் – குல்தீப் ஆகியோரில் விளையாடப்போவது யார்? கேப்டன் ரோஹித் பதில்

“ஜேம்ஸ் ஆண்டர்சன் தரமானவர். இருப்பினும் சூழ்நிலைகள் எப்படி மாறும், உங்களுடைய அணிக்கு எந்த மாதிரியான செட்டப் தேவைப்படும் என்பது தெரியாது. அதற்காக அவருடைய பணிச்சுமையை நாங்கள் நிரூபிக்கிறோம் என்று அர்த்தமல்ல. ஏனெனில் அவர் எங்களுக்காக சிறப்பாக செயல்படக்கூடிய பவுலர்களில் ஒருவர்” என்று கூறினார். இந்த நிலையில் முழங்கால் அறுவை சிகிச்சை காரணமாக தேவைப்படும் போது பந்து வீச முடியாத சூழ்நிலைக்கு பென் ஸ்டோக்ஸ் தள்ளப்பட்டுள்ளதும் இங்கிலாந்துக்கு பின்னடைவாக அமைந்துள்ளது.

Advertisement