தலைவலியா இருக்கு.. முதல் டெஸ்டில் அக்சர் – குல்தீப் ஆகியோரில் விளையாடப்போவது யார்? கேப்டன் ரோஹித் பதில்

- Advertisement -

ஹைதராபாத் நகரில் இங்கிலாந்துக்கு எதிராக இந்திய கிரிக்கெட் அணி விளையாடும் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல் போட்டி துவங்குகிறது. ஜனவரி 25ஆம் தேதி துவங்கும் இந்த தொடரில் இந்தியாவை 12 வருடங்கள் கழித்து அதன் சொந்த மண்ணில் தோற்கடிக்கும் முனைப்புடன் இங்கிலாந்து விளையாட உள்ளது. ஆனால் சுழலுக்கு சாதகமான மைதானங்களில் இந்தியாவை சாய்ப்பது இங்கிலாந்துக்கு குதிரைக்கொம்பாக இருக்கும் என்றே சொல்லலாம்.

ஏனெனில் ரவிச்சந்திரன் அஸ்வின் மற்றும் ரவீந்திர ஜடேஜா ஆகிய தரமான ஸ்பின்னர்கள் சுழலுக்கு சாதகமான மைதானங்களில் இங்கிலாந்தை திணறடிக்க அதிக வாய்ப்புள்ளது. சொல்லப்போனால் அவர்களுடைய ஆதிக்கத்தால் தான் கடந்த 12 வருடங்களாக சொந்த மண்ணில் உலகில் எந்த அணிக்கு எதிராகவும் இந்தியா ஒரு தொடரில் கூட தோற்றதில்லை என்ற சாதனையை படைத்து வருகிறது.

- Advertisement -

3வது ஸ்பின்னர்:
இருப்பினும் அவர்களுடன் சேர்ந்து இங்கிலாந்தை திணறடிக்கப் போகும் 3வது ஸ்பின்னர் அக்சர் பட்டேலா அல்லது குல்தீப் யாதவா என்பது கேள்விக்குறியாக இருக்கிறது. ஏனெனில் அக்சர் படேல் பேட்டிங்கில் முக்கிய ரன்களை எடுத்து வெற்றில் பங்காற்றக் கூடியவராக உள்ளார். மறுபுறம் குல்தீப் யாதவ் 2023 ஆசிய மற்றும் உலகக்கோப்பையில் சிறப்பாக விளையாடி இந்தியாவின் வெற்றிகளில் பங்காற்றி நல்ல ஃபார்மில் இருக்கிறார்.

இந்நிலையில் அந்த இருவரில் 3வது ஸ்பின்னராக விளையாடப் போகும் வீரர் யார் என்பதை தேர்வு செய்வதில் பெரிய சவால் ஏற்பட்டுள்ளதாக கேப்டன் ரோகித் சர்மா தெரிவித்துள்ளார். இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு. “ஒருவேளை பிட்ச்சில் பவுன்ஸ் இருந்தாலும் இல்லை என்றாலும் அது போன்ற சூழ்நிலைகளில் குல்தீப் யாதவ் சிறப்பாக செயல்படக் கூடியவர். ஏனெனில் அவர்களிடம் சூப்பரான வேரியசன்கள் இருக்கிறது. கடந்த சில வருடங்களை விட தற்போது அவர் ஒரு பவுலராக நல்ல முதிர்ச்சியை கண்டுள்ளார்”

- Advertisement -

“அஸ்வின் மற்றும் ஜடேஜா இருப்பதால் இந்தியாவில் நடைபெறும் டெஸ்ட் போட்டிகளில் அவர் பெரிய அளவில் விளையாடியதில்லை. சொல்லப்போனால் பேட்டிங் துறையிலும் எங்களைப் போன்ற வீரர்களுக்கு தாமதமாகவே வாய்ப்பு கிடைத்தது. இருப்பினும் அந்த நிதர்சனத்தை நீங்கள் மறைக்க முடியாது. ஆம் அவரை நாங்கள் தேர்வு செய்ய ஆர்வமாக இருக்கிறோம். மறுபுறம் அக்சர் படேல் பேட்டிங் துறையில் ஆழத்தை ஏற்படுத்தக் கூடியவர் என்பதை நீங்கள் அறிவீர்கள்”

இதையும் படிங்க: தப்பு பண்ணிட்டாங்க? முதல் இந்திய டெஸ்ட் போட்டிக்கான இங்கிலாந்து பிளேயிங் லெவன் குறித்து.. பீட்டர்சன் கவலை

“டெஸ்ட் கிரிக்கெட்டில் இது போன்ற சூழ்நிலைகளில் அவரும் எங்களுடைய முக்கிய வீரர். எனவே முதல் போட்டியில் அவர்களில் யாரை தேர்வு செய்வது என்பதை முடிவு செய்வது எங்களுக்கு மிகப்பெரிய தலைவலியாக இருக்கிறது. ஆனால் இப்போதே நான் அதைப் பற்றி சொல்ல மாட்டேன்” என்று கூறினார். இருப்பினும் பேட்டிங்கில் ரன்கள் எடுக்கக்கூடிய அக்சருக்கு தான் வாய்ப்பு கிடைக்கும் என்பதே ரசிகர்களின் எதிர்பார்ப்பாக இருக்கிறது.

Advertisement