தப்பு பண்ணிட்டாங்க? முதல் இந்திய டெஸ்ட் போட்டிக்கான இங்கிலாந்து பிளேயிங் லெவன் குறித்து.. பீட்டர்சன் கவலை

- Advertisement -

இந்திய கிரிக்கெட் அணிக்கு எதிராக இங்கிலாந்து விளையாடும் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் ஜனவரி 25ஆம் தேதி துவங்குகிறது. 2025 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் கோப்பையின் ஒரு பகுதியாக நடைபெற உள்ள இத்தொடரில் 2012இல் அலெஸ்டர் குக் தலைமையில் இந்தியாவை அதன் சொந்த மண்ணில் தோற்கடித்தது போல் இம்முறை பென் ஸ்டோக்ஸ் தலைமையில் தோற்கடிக்க இங்கிலாந்து தயாராகியுள்ளது.

அதற்கு தக்க பதிலடி கொடுத்து இங்கிலாந்தை வீழ்த்தி 12 வருடங்களாக சொந்த மண்ணில் ஒரு தொடரில் தோற்காமல் இருந்து வரும் கௌரவத்தை தக்க வைத்துக்கொள்ள இந்தியாவும் போராட உள்ளது. அந்த நிலையில் ஹைதராபாத் நகரில் துவங்கும் இத்தொடரின் முதல் போட்டிக்கான தங்களுடைய 11 பேர் கொண்ட அணியை இங்கிலாந்து நிர்வாகம் ஜனவரி 24ஆம் தேதி ஒரு நாள் முன்பாகவே அதிரடியாக வெளியிட்டது.

- Advertisement -

தப்பு பண்றாங்க:
அதில் நட்சத்திர அனுபவ வேகப்பந்து வீச்சாளர் ஜேம்ஸ் ஆண்டர்சன் தேர்வு செய்யப்படாதது இங்கிலாந்து ரசிகர்களுக்கு ஏமாற்றமாக அமைந்துள்ளது. அதை விட இந்தியாவில் அனைத்து மைதானங்களும் முதல் நாளிலிருந்தே சுழலுக்கு சாதகமாக இருக்கும் என்பது வெளிநாட்டவர்களின் கருத்தாகும். இருப்பினும் இந்தியாவின் மற்ற மைதானங்களை காட்டிலும் ஹைதராபாத் சற்று பேட்டிங் மற்றும் வேகத்துக்கு சாதகமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஆனாலும் இப்போட்டியில் ஜேக் லீச், டாம் ஹார்ட்லி, ரெஹன் அஹ்மத் ஆகிய 3 ஸ்பின்னர்களை தேர்வு செய்துள்ள இங்கிலாந்து மார்க் வுட்டை மட்டும் ஒரே ஒரு வேகப்பந்து வீச்சாளராக தேர்ந்தெடுத்துள்ளது. அதில் டாம் ஹார்ட்லி அறிமுக வீரராக களமிறங்க உள்ள நிலையில் இளம் வீரர் ரெஹன் அஹ்மத் பெரிய அளவில் அனுபவமற்றவர். இங்கே கேப்டன் பென் ஸ்டோக்ஸ் முழங்கால் அறுவை சிகிச்சையால் பந்து வீசாமல் ஸ்பெஷலிஸ்ட் பேட்ஸ்மேனாக மட்டும் விளையாடுவார் என்பது இங்கிலாந்துக்கு மற்றுமொரு பின்னடைவாகும்.

- Advertisement -

இந்நிலையில் முதல் போட்டியில் வெறும் ஒரே ஒரு வேகப்பந்து வீச்சாளரை தேர்வு செய்து இங்கிலாந்து தவறு செய்வதாக முன்னாள் வீரர் கெவின் பீட்டர்சன் கவலை தெரிவித்துள்ளார். இது பற்றி ட்விட்டரில் அவர் பதிவிட்டுள்ளது பின்வருமாறு. “முதல் போட்டிக்கு ஒரு வேகப்பந்து வீச்சாளரை மட்டும் இங்கிலாந்து தேர்ந்தெடுத்துள்ளது. இதுவரை பிட்ச்சை நான் பார்க்கவில்லை. எனவே அதை பார்த்து விட்டு திங்கள்கிழமை ட்வீட் போடுவேன்”

இதையும் படிங்க: சுழலும் பிட்ச் வைத்து இந்தியா ஜெயிப்பது தப்பில்ல.. ஆனா அவங்கள நினச்சா கவலையா இருக்கு.. சைமன் டௌல்

“ஒருவேளை அது முதல் நாளிலிருந்தே சுழலுக்கு கை கொடுக்காமல் போனால் நான் ஆச்சரியப்படுவேன்” என்று கூறியுள்ளார். அதாவது ஒருவேளை ஹைதராபாத் மைதானம் முதல் நாளிலிருந்து சுழலுக்கு சாதகமாக இல்லாமல் போனால் ஒரு வேகப்பந்து வீச்சாளரை மட்டுமே தேர்வு செய்துள்ள இங்கிலாந்தின் இந்த முடிவு தவறாக அமையும் என்று பீட்டர்சன் கவலையை தெரிவித்துள்ளார்.

Advertisement