சுழலும் பிட்ச் வைத்து இந்தியா ஜெயிப்பது தப்பில்ல.. ஆனா அவங்கள நினச்சா கவலையா இருக்கு.. சைமன் டௌல்

- Advertisement -

இங்கிலாந்துக்கு எதிராக தங்களுடைய சொந்த மண்ணில் இந்தியா விளையாடும் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடர் ஜனவரி 25ஆம் தேதி ஹைதராபாத் நகரில் துவங்கியது. இந்த தொடரில் பெரும்பாலான மைதானங்கள் சுழலுக்கு சாதகமாக இருந்தாலும் இந்தியாவை அதன் சொந்த மண்ணில் அடித்து நொறுக்கி 12 வருடங்களுக்கு பின் வெற்றி காண்போம் என்று இங்கிலாந்து அணியினர் சவால் விட்டு வருகின்றனர்.

முன்னதாக சமீப காலங்களாக இந்தியா தங்களுடைய சொந்த மண்ணில் வெல்வதற்காக வேண்டுமென்றே சுழலுக்கு சாதகமாக இருக்கக்கூடிய பிட்சுகளை அமைத்து வருவதாக வெளிநாட்டவர்கள் விமர்சித்து வருகிறார்கள். அதற்கு இங்கிலாந்தில் ஸ்விங், ஆஸ்திரேலியாவில் பவுன்ஸ், தென்னாப்பிரிக்காவில் வேகத்துக்கு சாதகமான மைதானங்கள் இருப்பது மட்டும் இயற்கை எங்கள் நாட்டில் சுழலுக்கு சாதகமான மைதானங்கள் இருந்தால் மட்டும் செயற்கையா என இந்தியர்கள் பதிலடி கொடுத்து வருகின்றனர்.

- Advertisement -

தப்பில்ல ஆனால்:
இந்நிலையில் சுழலுக்கு சாதகமான மைதானங்களை வைத்து இந்தியா வெல்வதில் தவறில்லை என முன்னாள் நியூசிலாந்து வீரர் சைமன் டௌல் ஆதரவு தெரிவித்துள்ளார். ஆனால் அது போன்ற மைதானங்களில் கில், ஜெய்ஸ்வால் போன்ற இளம் பேட்ஸ்மேன்கள் இரட்டை சதமடிப்பதை பார்ப்பது கடினம் என்று தெரிவிக்கும் அவர் இது பற்றி சமீபத்தில் பேட்டியில் பேசியது பின்வருமாறு.

“இந்திய மைதானங்களை பற்றி விமர்சிப்பது நியாயம் என்று நான் கருதவில்லை. நியூசிலாந்தில் ஒவ்வொரு டெஸ்ட் போட்டியிலும் 15 – 18 மி.மீ பச்சை புற்களுடன் கூடிய பிட்ச் இருக்கும். அதில் 1 முதல் ஒன்றரை நாள் பந்து வேகமாக செல்லும். அப்படி தான் நியூசிலாந்து தங்களுடைய சொந்த மண்ணில் வெல்கிறது. எனவே சொந்த மண்ணில் இந்தியா தாங்கள் விரும்பும் பிட்ச்களில் விளையாடுவதைப் பற்றி எனக்கு எந்த பிரச்சனையும் கிடையாது”

- Advertisement -

“குறிப்பாக முதல் நாளிலிருந்தே பந்து சுழன்றால் நான் கவலைப்பட மாட்டேன். ஆனால் அந்த சூழ்நிலைகளில் நவீன பேட்ஸ்மேன்கள் எப்படி அசத்துவார்கள் என்று மட்டுமே நான் சொல்வேன். குறிப்பாக ஜெய்ஸ்வால், கில் போன்றவர்கள் டெஸ்ட் போட்டிகளில் இரட்டை சதமடிப்பார்களா? அப்போதைய காலங்களில் விளையாடிய சச்சின், டிராவிட், சேவாக் மற்றும் லஷ்மண் ஆகியோர் 55, 54, 53 என்ற அளவில் கொண்டிருந்த சிறந்த சராசரியை இப்போதுள்ள இந்திய பேட்ஸ்மேன்கள் கொண்டிருக்க முடியாது”

இதையும் படிங்க: முதல் டெஸ்ட் போட்டிக்கான இங்கிலாந்து அணியில் ஜேம்ஸ் ஆண்டர்சன் இடம்பெறாதது ஏன்? – பென் ஸ்டோக்ஸ் விளக்கம்

“ஏனெனில் அவர்கள் முதல் நாளிலிருந்தே சுழலுக்கு சாதகமான மைதானங்களில் விளையாடுவார்கள்” என்று கூறினார். மேலும் இந்த தொடரில் இங்கிலாந்து தங்களுடைய அதிரடியான அணுகு முறையை பயன்படுத்தி ஓரிரு போட்டிகளில் வேண்டுமானால் வெற்றிகரமாக செயல்பட முடியும் என்று தெரிவித்த அவர் அனைத்து போட்டிகளிலும் அசத்த முடியாது என கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement