நான் முதல் முறையா யாஷஸ்வி ஜெய்ஸ்வாலை பாக்கும்போதே எனக்கு தெரிஞ்சிபோச்சி – ஏ.பி.டி மனம்திறந்த பாராட்டு

ABD-and-Jaiswal
- Advertisement -

இந்தியா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையே நடைபெற்று முடிந்த முதலாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி ஒரு இன்னிங்ஸ் மற்றும் 141 ரன்கள் வித்தியாசத்தில் அசத்தலான வெற்றியை பதிவு செய்திருந்தது. இந்த முதல் போட்டியின் போது இந்திய அணிக்காக சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் அறிமுகமான 21 வயதான இளம் வீரர் யாஷஸ்வி ஜெய்ஸ்வால் 387 பந்துகளை சந்தித்து 171 ரன்கள் குவித்து அறிமுக போட்டியிலேயே சதம் அடித்த மூன்றாவது இந்திய துவக்க வீரர் என்ற சாதனையை படைத்தார்.

Jaiswal

- Advertisement -

அதோடு அறிமுக போட்டியிலேயே மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய அவருக்கு ஆட்டநாயகன் விருதும் வழங்கப்பட்டது. இப்படி அறிமுகப் போட்டியிலேயே ஆட்டநாயகன் விருது பெற்ற எட்டாவது இந்திய வீரராகவும் அவர் சாதனை படைத்தார். அவரது இந்த சிறப்பான செயல்பாடு அனைவரது மத்தியிலும் பாராட்டுகளை பெற்றுள்ளது.

ஏனெனில் ஐபிஎல் தொடரில் அசத்தலான ஆட்டத்தை வெளிப்படுத்திய அவர் சர்வதேச கிரிக்கெட்டில் எவ்வாறு செயல்படப்போகிறார் என்ற எதிர்பார்ப்பு அனைவரது மத்தியிலும் அதிகளவில் இருந்த வேளையில் முதல் போட்டியிலேயே அவர் எப்பேர்பட்ட வீரர் என்பதை நிரூபித்து காட்டியிருக்கிறார். இந்நிலையில் அவரது இந்த சிறப்பான ஆட்டத்தை பாராட்டி பேசியுள்ள தென்னாப்பிரிக்க அணியின் முன்னாள் வீரரான ஏபிடி வில்லியர்ஸ் கூறுகையில் :

Jaiswal

நான் முதல் முறை ஐபிஎல் போட்டிகளின் போது யாஷஸ்வி ஜெய்ஸ்வாலை பார்க்கும்போதே அவர் ஒரு “ஸ்பெஷல் டேலண்ட்” என்பதை புரிந்து கொண்டேன். அதோடு நிச்சயம் அவர் இந்திய கிரிக்கெட்டின் வருங்காலமாக இருப்பார் என்றும் கணித்தேன். அவருடைய செயல்பாடும், ஆட்டமும் அந்த அளவிற்கு இருந்தது.

- Advertisement -

ஒரு இளம் வீரர் அறிமுகப் போட்டியில் சதம் அடிப்பது என்பது எளிதான காரியம் கிடையாது. அதிலும் சர்வதேச கிரிக்கெட்டில் எந்த ஒரு பதட்டமும் இன்றி பெரிய இன்னிங்ஸ் விளையாடும் இவர் ஒரு ஸ்பெஷல் டேலண்ட் தான். இந்த போட்டியில் அவர் மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியிருந்தார். இன்னும் அவருக்கு நெடுந்தோறும் இருக்கிறது.

இதையும் படிங்க : ஆசிய கோப்பை 2023 : அதிகாரப்பூர்வமாக வெளியிட்ட ஜெய் ஷா, இந்தியா – பாக் மோதல் எப்போது? முழு அட்டவணை இதோ

அவர் முதல் போட்டியிலேயே சதம் அடித்ததை பார்த்ததில் மகிழ்ச்சியாக இருந்தது. நிச்சயம் இந்திய கிரிக்கெட்டின் அடுத்த தலைமுறை சூப்பர் ஸ்டார் வீரராக வருவதற்கான அனைத்து செயல்பாடுகளையும் அவரிடம் பார்ப்பதாக ஏ.பி.டி தனது பாராட்டினை தெரிவித்து இருந்தார். இந்தியா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டியானது ஜூலை 20-ஆம் தேதி டிரினிடாட் நகரில் நடைபெறவுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement