ஆசிய கிரிக்கெட்டின் சாம்பியனை தீர்மானிக்கும் ஆசிய கோப்பை 2023 தொடர் வரும் செப்டம்பர் மாதம் பாகிஸ்தானில் நடத்துவதற்கு ஆசிய கிரிக்கெட் கவுன்சில் ஏற்கனவே அனுமதி வழங்கியது. இருப்பினும் பாதுகாப்பு காரணங்களால் அந்நாட்டுக்கு பயணித்து விளையாடாது என்று அறிவித்த பிசிசிஐ செயலாளர் மற்றும் ஆசிய கவுன்சில் தலைவர் ஜெய் ஷா அத்தொடரை பொதுவான இடத்தில் நடத்துவதற்கு தேவையான அழுத்தம் கொடுப்போம் என்று கூறினார். அதற்கு பதிலடியாக எங்கள் நாட்டுக்கு வராமல் போனால் உங்கள் நாட்டில் வரும் அக்டோபர் மாதம் நடைபெறும் 50 ஓவர் ஐசிசி உலகக் கோப்பையில் பங்கேற்க நாங்களும் வரமாட்டோம் என்று பாகிஸ்தான் அறிவித்தது.
அப்போதிருந்து இந்த விவகாரம் பற்றி காரசாரமான விவாதங்கள் நடைபெற்று வந்த நிலையில் தொடரை நடத்தும் உரிமையை கொடுத்து விட்ட காரணத்தால் வேறு வழியின்றி பாகிஸ்தான் பங்கேற்கும் லீக் போட்டிகளை அந்நாட்டிலும் இந்தியா மட்டுமின்றி ஃபைனல் உட்பட எஞ்சிய அனைத்து போட்டிகளையும் இலங்கை நடத்துவதற்கு ஆசிய கவுன்சில் அனுமதி கொடுத்தது. இந்நிலையில் இத்தொடரை நடத்தும் பாகிஸ்தான் வாரிய மற்றும் ஆசிய கவுன்சில் தலைவர் ஜெய் ஷா அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளார்.
முழுமையான அட்டவணை:
அந்த வகையில் வரும் ஆகஸ்ட் 30ஆம் தேதி பாகிஸ்தானில் இருக்கும் முல்தான் நகரில் துவங்கும் இந்த தொடர் வரும் செப்டம்பர் 17ஆம் தேதி இலங்கையில் இருக்கும் கொழும்புவில் நிறைவு பெறுகிறது. முதல் போட்டியில் தொடரை நடத்தும் பாகிஸ்தான் மற்றும் நேபாளம் அணிகள் முல்தான் நகரில் மோத உள்ளன. மேலும் இந்தியா தன்னுடைய முதல் போட்டியில் பாகிஸ்தானை வரும் செப்டம்பர் 2ஆம் தேதி இலங்கையில் இருக்கும் கண்டி நகரில் எதிர்கொள்ள உள்ளது.
மேலும் லீக் சுற்றின் முடிவில் எத்தனை வெற்றிகளை பெறுகிறார்கள் என்பதை தாண்டி குரூப் ஏ பிரிவில் பாகிஸ்தான் முதல் இடத்திலும் இந்தியா 2வது இடத்தையும் பிடிக்கும் என்று ஆசிய கவுன்சில் அறிவித்துள்ளது. ஒருவேளை அந்த 2 அணிகளில் ஏதேனும் ஒன்று சூப்பர் 4 சுற்றுக்கு தகுதி பெறாமல் போனால் நேபாள் அந்த இடத்தை பிடிக்கும் என ஆசிய கவுன்சில் தெரிவிக்கின்றது.
அதே போல குரூப் பி பிரிவில் எத்தனை வெற்றி பெறுகிறார்கள் என்பதை தாண்டி இலங்கை மற்றும் வங்கதேசம் ஆகிய அணிகள் முதல் மற்றும் 2வது இடத்தை பிடிக்கும் என்று தெரிவித்துள்ள ஆசிய கவுன்சில் ஒருவேளை அந்த 2 அணிகளில் ஏதேனும் ஒன்று சூப்பர் 4 சுற்றுக்கு தகுதி பெறாமல் போனால் அந்த இடத்தை ஆப்கானிஸ்தான் பிடிக்கும் என கூறியுள்ளது. மொத்தத்தில் இந்தியாவில் அக்டோபர் மாதம் நடைபெறும் 50 ஓவர் உலகக் கோப்பைக்கு தயாராகும் வகையில் நடைபெறும் இந்த ஆசிய கோப்பை ஒருநாள் தொடராக நடைபெற உள்ளது.
அதில் குரூப் ஏ பிரிவில் பாகிஸ்தான், இந்தியா மற்றும் நேபாள் ஆகிய அணிகளும் குரூப் பி பிரிவில் இலங்கை, வங்கதேசம் மற்றும் ஆப்கானிஸ்தான் ஆகிய அணிகளும் இடம் பிடித்துள்ளன. அந்த வகையில் லீக் சுற்றில் புள்ளி பட்டியலில் முதல் 2 இடங்களை பிடிக்கும் அணிகள் சூப்பர் 4 சுற்றுக்கு தகுதி பெறும். அதில் முதலிரண்டு இடங்களை பிடிக்கும் அணிகள் செப்டம்பர் 17ஆம் தேதி நடைபெறும் மாபெரும் இறுதிப் போட்டியில் கோப்பைக்காக மோத உள்ளன.
ஆசிய கோப்பை 2023 தொடருக்கான முழு அட்டவணை இதோ:
ஆகஸ்ட் 30 : பாகிஸ்தான் – நேபாள், முல்தான்
ஆகஸ்ட் 31 : பங்களாதேஷ் – இலங்கை , கண்டி
செப்டம்பர் 2 : பாகிஸ்தான் – இந்தியா, கண்டி
செப்டம்பர் 3 : பங்களாதேஷ் – ஆப்கானிஸ்தான், லாகூர்
செப்டம்பர் 4 : இந்தியா – நேபாள், கண்டி
செப்டம்பர் 5 : இலங்கை – ஆப்கானிஸ்தான், லாகூர்
இதையும் படிங்க:வீடியோ : ஒரே ஓவரில் 2 டக், வளரும் ஆசிய கோப்பையில் பாகிஸ்தானை ஏ அணியை தெறிக்க விட்ட சிஎஸ்கே இந்திய வீரர்
செப்டம்பர் 6 (சூப்பர் 4) : ஏ1 – பி2, லாகூர்
செப்டம்பர் 9 : பி1 – பி2 – கொழும்பு
செப்டம்பர் 10 : ஏ1 – ஏ2, கொழும்பு
செப்டம்பர் 12 : ஏ2 – பி 1, கொழும்பு
செப்டம்பர் 14 : ஏ1 – பி1, கொழும்பு
செப்டம்பர் 15 : ஏ2 – பி2, கொழும்பு
செப்டம்பர் 17 : ஃபைனல், கொழும்பு