
ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக நடைபெற்று முடிந்த ஐந்து போட்டிகள் கொண்ட பார்டர் கவாஸ்கர் டெஸ்ட் கிரிக்கெட் தொடரில் இந்திய அணியின் நட்சத்திர வீரரான விராத் கோலி பெர்த் நகரில் நடைபெற்ற முதல் போட்டியின் இரண்டாவது இன்னிங்ஸில் சதம் அடித்து அசத்தியிருந்தார். அதை தவிர்த்து மற்ற அனைத்து இன்னிங்ஸ்களிலும் ஒரே மாதிரியான பந்துகளுக்கு ஆட்டமிழந்தது ரசிகர் மத்தியில் வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது.
மேலும் தனது கரியரின் கடைசி கட்டத்தில் இருக்கும் விராட் கோலி இப்படி ஆஸ்திரேலியா தொடரில் சொதப்பியதன் காரணமாக இனிவரும் தொடர்களில் அவருக்கு வாய்ப்பு கிடைக்குமா? என்ற நிலைக்கும் தள்ளப்பட்டுள்ளார்.
மேலும் ஏற்கனவே சீனியர் வீரர்களை ஓய்வுபெற சொல்லி அழுத்தங்கள் நிலவி வரும் வேளையில் விராட் கோலியின் இந்த செயல்பாடு ரசிகர்களை கவலையடைய வைத்துள்ளது. இந்நிலையில் விராட் கோலி இந்த பேட்டிங் பிரச்சனைகளில் இருந்து மீண்டு வர என்ன செய்ய வேண்டும்? என்பது குறித்து முன்னாள் பெங்களூர் வீரரும், விராட் கோலியின் நண்பருமான ஏபிடி வில்லியர்ஸ் சில கருத்துக்களை பகிர்ந்துள்ளார்.
இது குறித்து பேசிய அவர் கூறுகையில் : ஒவ்வொரு வீரருக்கும் ஒவ்வொரு பலவீனம் இருக்கிறது. என்னை பொறுத்தவரை ஆரம்பகட்டத்தில் நேராக வரும் வந்து ஆரம்ப கட்டத்தில் பேடில் அடித்தது. அதுதான் என்னுடைய பலவீனமாகவும் இருந்தது. பின்னர் நான் அதை டெக்னிக்கலாக சரி செய்து கொண்டு எப்படி பங்கு வந்தாலும் அதை அனைத்து திசைகளிலும் அடிக்கும் வழியை கண்டுபிடித்தேன்.
அதே போன்று விராட் கோலி தற்போது ஒரு போரில் ஈடுபட்டு வருகிறார். அதுதான் அவருடைய பலமாக இருக்கிறது. எந்த போட்டியாக இருந்தாலும் அவர் ஒரு போர் போன்ற நினைத்து அதில் போராடி வருகின்றார். ஆனால் இனி அப்படியே அந்த மனநிலையில் இருக்கக்கூடாது. ஒவ்வொரு பந்தையும் புதிய பந்தாக நினைத்து பழைய பந்தை மறந்து விட வேண்டும்.
இதையும் படிங்க : பாகிஸ்தானை சாய்ச்சா போதுமா? ஒயிட்பால் புலி இந்தியா இதை செய்யலன்னா ஜெய்க்கவே முடியாது.. கைப்
கோலி கிரிக்கெட்டில் எவ்வளவு ஈடுபடாக ஆர்வமாக இருக்கிறார் என்பது நமக்கு தெரியும். ஆனால் டெஸ்ட் கிரிக்கெட்டை பொருத்தவரை அதிக மணி நேரம் செலவு செய்து மனரீதியாக அவரை மாற்றிக்கொண்டு ஒவ்வொரு பந்திற்கும் அவர் கவனம் செலுத்தினால் நிச்சயம் நல்ல பார்முக்கு திரும்பலாம் என ஏபிடி கூறியது குறிப்பிடத்தக்கது.