- Advertisement -
இந்திய கிரிக்கெட்

வேணாம் விட்ருங்க.. இந்திய அணிக்கு பிசிசிஐ கொண்டு வரும் ஃபிட்னெஸ் டெஸ்ட் மோசமானது.. ஏபிடி எச்சரிக்கை

இந்திய கிரிக்கெட் அணி சர்வதேச அரங்கில் டாப் அணிகளில் ஒன்றாக செயல்பட்டு வருகிறது. சர்வதேச அரங்கில் எதிரணிகளுக்கு சவாலைக் கொடுத்து வெற்றி பெறுவதற்கு இந்திய வீரர்கள் ஃபிட்டாக இருப்பது அவசியமாகிறது. அதற்காக இந்திய வீரர்கள் மிகவும் கடினமான யோயோ சோதனைகள் தேர்ச்சி பெற்றால் மட்டுமே அணியில் இடம் கிடைக்கும் என்ற கட்டுப்பாட்டை பிசிசிஐ வைத்துள்ளது.

இப்படிப்பட்ட சூழ்நிலையில் பிரான்கோ என்ற பெயரில் பிசிசிஐ இந்திய அணிக்கு புதிதாக ஒரு ஃபிட்னஸ் சோதனையை அறிமுகப்படுத்தியுள்ளது. அந்த சோதனையில் வீரர்கள் மொத்தம் 1200 மீட்டர்கள் ஓட வேண்டும். அதற்குள் 20 மீட்டர், 40 மீட்டர், 60 மீட்டர் என 5 வெவ்வேறு படிநிலைகளை கொண்ட சோதனைகள் அடங்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

- Advertisement -

வேணாம் விட்ருங்க:

இந்நிலையில் தங்களுடைய நாட்டில் அந்த சோதனை ஏற்கனவே நடைமுறையில் இருந்ததாக தெனாப்பிரிக்க ஜாம்பவான் ஏபி டீ வில்லியர்ஸ் தெரிவித்துள்ளார். ஆனால் அது உடல் நலத்திற்கு பாதிப்பை ஏற்படுத்தக்கூடிய மிகவும் மோசமான ஃபிட்னஸ் சோதனை என்று அவர் கூறியுள்ளார். எனவே இந்திய அணியில் அதை அறிமுகப்படுத்துவதை கைவிட வேண்டும் என்று அவர் மறைமுகமாக எச்சரித்துள்ளார்.

இது பற்றி அவர் தன்னுடைய யூடியூப் பக்கத்தில் பேசியது பின்ருமாறு. “எங்களுடைய அணி அது பற்றி தெரிவித்த போது உண்மையில் அதைப் பற்றி எனக்கு எதுவும் தெரியாது. அதைக் கேட்ட போது பிரான்கோ டெஸ்ட் என்றால் என்ன? என்று நான் கேட்டேன். பின்னர் அவர்கள் அதை விளக்கிய போது அதனுடைய பின்னணியில் இருக்கும் விஷயங்களை தெரிந்து கொண்டேன்”

- Advertisement -

எச்சரிக்கும் ஏபிடி:

“அதை நான் 16 வயதிலிருந்தே செய்து வருகிறேன். தென்னாப்பிரிக்காவில் நாங்கள் அதை தடைகளை தாண்டி ஓடுதல் (ஸ்பிரிண்டட் ஃரிப்பீட்டபிலிட்டி) என்று அழைப்போம். அது நீங்கள் செய்யக்கூடிய மிகவும் மோசமான ஒரு விஷயங்களில் ஒன்றாகும். பிரிட்டோரியா யூனிவர்சிட்டி மற்றும் சூப்பர்ஸ்போர்ட் பார்க் ஆகிய மைதானங்களில் அதை நான் செய்தது இன்றும் தெளிவாக நினைவிருக்கிறது”

இதையும் படிங்க: சச்சின், கங்குலியை பாத்து நான் காப்பியடிக்கல.. அந்த மரியாதையை சம்பாரிக்க நிச்சேன்.. ட்ராவிட் வெளிப்படை

“குறிப்பாக தென் ஆப்பிரிக்காவின் குளிர்ச்சியான குளிர்காலத்தின் காலையில் கடல் மட்டத்திற்கு 1500 மீட்டருக்கு மேல் நிறைய ஆக்ஸிஜன் இருக்காது. அப்படி ஆக்ஸிஜன் இல்லாத சூழ்நிலையில் அந்த சோதனையை செய்வதால் நுரையீரல் எரியும்” என்று கூறினார். இது போக இந்திய வீரர் ரவிச்சந்திரன் அஸ்வினும் அந்த சோதனை வீரர்களுக்கு காயத்தை ஏற்படுத்தும் என்று சமீபத்தில் எச்சரித்தது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -