
ஐசிசி 2025 சாம்பியன்ஸ் ட்ராபி கிரிக்கெட் தொடரில் இந்திய அணி சிறப்பாக விளையாடிய ஃபைனலுக்கு தகுதிப் பெற்றுள்ளது. இதை அடுத்து மார்ச் 9ஆம் தேதி துபாயில் நடைபெறும் மாபெரும் இறுதிப் போட்டியில் நியூசிலாந்து அணியுடன் இந்தியா விளையாட உள்ளது. முன்னதாக இந்திய அணியின் நம்பிக்கை நட்சத்திரம் விராட் கோலி சமீப காலங்களில் சுமாரான ஃபார்மில் இருந்ததால் விமர்சனங்களை சந்தித்தார்.
இருப்பினும் தற்போதைய சாம்பியன்ஸ் டிராபி தொடரில் பாகிஸ்தானுக்கு எதிராக சதத்தை அடித்து அசத்திய அவர் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 84 ரன்கள் குவித்து இந்தியாவின் வெற்றியில் பங்காற்றினார். அதனால் கிங் என்ற தன்னுடைய பட்டத்தை மீண்டும் பெற்றுள்ள விராட் கோலி சாம்பியன் பிளேயர் என்பதையும் நிரூபித்துள்ளார். இந்நிலையில் ஐபிஎல் தொடருக்கு முன்பாக விராட் கோலி ஃபார்முக்கு வந்துள்ளது மகிழ்ச்சி அளிப்பதாக ஏபி டீ வில்லியர்ஸ் தெரிவித்துள்ளார்.
மேலும் ஆர்சிபி அணிக்காக ஐபிஎல் கோப்பையை வெல்வது விராட் கோலியின் அற்புதமான கேரியருக்கு நல்ல ஃபினிசிங்காக இருக்கும் என்றும் அவர் கூறியுள்ளார். அத்துடன் விராட் கோலியின் ஸ்ட்ரைக் ரேட் பற்றி சிலர் விமர்சிப்பது வேடிக்கையானது என்று தெரிவிக்கும் அவர் இது பற்றி பேசியது பின்வருமாறு. “தனது கச்சிதமான ஆட்டத்திற்குள் இருந்து வெளியே வந்து விராட் கோலி புதிய ஷாட்டுகளை அடிக்க முயற்சிப்பதைப் பார்ப்பது நன்றாக இருக்கிறது”
“அவர் எப்போதும் அந்தத் திறனை தனக்குள் கொண்டுள்ளார். பெங்களூரு அணிக்காக ஐபிஎல் கோப்பையை வெல்வது ஏற்கனவே கொண்டிருக்கும் அவரது அற்புதமான கேரியருக்கு சிறந்த ஃபினிஷிங் ஆக இருக்கும். கடந்த வருடம் அபாரமாக விளையாடிய அவருடைய ஸ்ட்ரைக் ரேட் பிரச்சனை கிடையாது. அவர் அணியில் தமக்கான வேலையை செய்தார்”
“டெல்லி அணியின் ஜேக் பிரேசர் போன்ற ஒருவர் அதிரடியாக விளையாடும் வரை விராட் கோலி நங்கூரமாக பொறுப்பாக விளையாட வேண்டியவர். கடந்த வருடம் அப்படியே விளையாடிய அவர் ஆர்சிபி பிளே ஆஃப் சுற்றுக்குச் செல்ல முக்கிய பங்காற்றினார். அவருடைய ஸ்ட்ரைக் ரேட் பற்றி விமர்சனங்கள் இருப்பது வேடிக்கையானது”
இதையும் படிங்க: பாவங்க ராகுல் இந்தியாவுக்காக ஃஸ்டெப்னி டயர் மாதிரி சுயநலமின்றி இந்த 4 வேலை செய்றாரு.. சித்து பாராட்டு
“தனது அணிக்கு தேவையான நேரத்தில் என்ன செய்ய வேண்டுமோ அதையே விராட் கோலி செய்தார். அவை அனைத்தும் சூழ்நிலையைப் பொறுத்து விளையாடுவதைப் பற்றியதாகும். அதே சமயம் மறுபுறம் வேறு பேட்ஸ்மேன் அதைச் செய்தால் அவர் சுதந்திரமாக விளையாடுவதையும் நீங்கள் பார்க்க முடியும். எனவே அணிக்காக தேவைப்படும் போது நங்கூரமாக விளையாடுவதே விராட் கோலியின் இயற்கையான ஆட்டமாகும்” என்று கூறினார்.