பாவங்க ராகுல் இந்தியாவுக்காக ஃஸ்டெப்னி டயர் மாதிரி சுயநலமின்றி இந்த 4 வேலை செய்றாரு.. சித்து பாராட்டு

Navjot Sidhu
- Advertisement -

ஐசிசி 2025 சாம்பியன்ஸ் ட்ராபி கிரிக்கெட் தொடரில் இந்திய அணி சிறப்பாக விளையாடி ஃபைனலுக்கு தகுதி பெற்றுள்ளது. இதைத்தொடர்ந்து இறுதிப்போட்டியில் ஞாயிற்றுக்கிழமை வலுவான நியூசிலாந்து அணியை இந்தியா சந்திக்க உள்ளது. முன்னதாக இந்தத் தொடரில் பேட்டிங் துறையில் விராட் கோலி ஃபார்முக்கு வந்து சிறப்பாக விளையாடி இந்தியாவின் வெற்றிகளில் பங்காற்றி வருகிறார்.

அதே போல ஸ்ரேயாஸ் ஐயர், கேஎல் ராகுல், அக்சர் படேல் ஆகியோரும் மிடில் ஆர்டரில் சிறப்பாக விளையாடி வெற்றிகளில் பங்காற்றி வருகிறார்கள். அதில் விக்கெட் கீப்பராக விளையாடும் ராகுல் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 42* ரன்கள் குவித்து நல்ல ஃபினிஷிங் கொடுத்து இந்தியாவை வெற்றி பெற வைக்க உதவினார். பொதுவாக டாப் ஆர்டரில் விளையாடும் அவர் இத்தொடரில் மிடில் ஆர்டரில் கீப்பராக விளையாடி வருகிறார்.

- Advertisement -

சுயநலமற்ற ராகுல்:

ஆனால் அந்த வாய்ப்பிலும் இடதுகை பேட்ஸ்மேன் வேண்டும் என்ற காரணத்தால் அக்சர் பட்டேலை மேலே களமிறக்கியுள்ள கௌதம் கம்பீர் அவரை 6வது இடத்தில் விளையாட வைத்துள்ளார். அந்த வாய்ப்பிலும் ராகுல் தம்மால் முடிந்த நல்ல செயல்பாடுகளை வெளிப்படுத்தி வருகிறார். இந்நிலையில் ஃஸ்டெப்னி டயர் போல ராகுலை இந்திய அணி நிர்வாகம் பயன்படுத்துவதாக முன்னாள் வீரர் நவ்ஜோத் சித்து ஆதங்கத்துடன் பாராட்டியுள்ளார்.

ஏனெனில் பேட்டிங்கில் ஓப்பனிங், மூன்றாவது இடம், ஐந்தாவது இடம், ஆறாவது இடம் ஆகிய இடங்களில் விளையாடும் ராகுல் கீப்பராகவும் செயல்படுவதாக சித்து தெரிவித்துள்ளார். இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு. “கேஎல் ராகுல் அளவுக்கு ஃஸ்டெப்னி டயரைக் கூட பயன்படுத்த மாட்டார்கள். ஏனெனில் விக்கெட் கீப்பராக அவரை விளையாட வைக்கும் நீங்கள் தற்போது ஆறாவது இடத்தில் பேட்டிங் செய்ய வைத்துள்ளீர்கள்”

- Advertisement -

சித்து பாராட்டு:

“கடந்த ஆஸ்திரேலிய டெஸ்ட் தொடரில் துவக்க வீரராக விளையாட வைத்த நீங்கள் மூன்றாவது இடத்தில் களமிறக்க வைத்து மீண்டும் ஓப்பனிங் செய்ய வைத்தீர்கள். உங்களுக்கு உங்களுக்கு ஒரு விஷயத்தை சொல்கிறேன். ஒருநாள் கிரிக்கெட்டில் ஓப்பனிங் செய்வது எளிது. ஆனால் டெஸ்ட் கிரிக்கெட்டில் அதை செய்வது கடினம். அந்த அனைத்தையும் செய்யும் ராகுல் சுயநலமற்ற வீரர்” என்று கூறினார்.

இதையும் படிங்க: ஐ.சி.சி தரும் பிரைஸ் மணியை விடுங்க.. இந்தியா ஜெயிச்சா பி.சி.சி.ஐ கொடுக்கப்போகும் தொகை – எவ்வளவு தெரியுமா?

மொத்தத்தில் டிராவிட் போல ராகுல் என்ற பெயரைக் கொண்டிருப்பதால் அனைத்து வேலைகளையும் செய்ய வேண்டி உள்ளதாக ரசிகர்களும் ஏற்கனவே சமூக வலைதளங்களில் கலகலப்பாக பேசினார்கள். போட்டி மிகுந்த இந்திய அணியில் தமக்குக் கிடைக்கும் வாய்ப்பில் ராகுல் சிறப்பாக செயல்பட்டு வருகிறார். ஏற்கனவே மெதுவாக விளையாடியதால் அவர் டி20 அணியில் இடத்தை இழந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement