அதை சூரியகுமார் திருடுவதை நினச்சா சோகமா இருக்கு.. சீக்கிரமா அந்த பரிசு கொடுப்பேன்.. ஏபிடி ஓப்பன்டாக்

AB De Villiers 2
- Advertisement -

தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக நடைபெற்ற முடிந்த 3 போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடரை 1 – 1 என்ற கணக்கில் இந்தியா சமன் செய்தது. குறிப்பாக முதல் போட்டி மழையால் கைவிடப்பட்ட நிலையில் 2வது போட்டியில் வென்ற தென்னாப்பிரிக்காவை 3வது போட்டியில் தோற்கடித்த சூர்யகுமார் யாதவ் தலைமையிலான இளம் இந்திய அணி தங்களை நம்பர் ஒன் அணி என்பதை நிரூபித்து கோப்பையை பகிர்ந்து கொண்டது.

முன்னதாக ஜோஹன்ஸ்பர்க் நகரில் டிசம்பர் 14ஆம் தேதி நடைபெற்ற 3வது போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்தியா கேப்டன் சூரியகுமார் யாதவ் 100, ஜெய்ஸ்வால் 60 ரன்கள் எடுத்த உதவியுடன் 202 ரன்களை இலக்காக நிர்ணயித்தது. ஆனால் அதைத் துரத்திய தென்னாப்பிரிக்காவை 95 ரன்களுக்கு சுருட்டி இந்தியா 106 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவதற்கு குல்தீப் யாதவ் தம்முடைய பிறந்தநாளில் 5 விக்கெட்டுகள் எடுத்து உதவினார்.

- Advertisement -

ஏபிடி பாராட்டு:
அந்த வெற்றிக்கு 7 பவுண்டரி 8 சிக்ஸருடன் 100 (56) ரன்கள் விளாசி முக்கிய பங்காற்றிய சூரியகுமார் யாதவ் ஆட்டநாயகன் மற்றும் தொடர் நாயகன் விருதுகளை தட்டிச் சென்றார். 2023 உலகக் கோப்பை ஃபைனல் உட்பட ஒருநாள் கிரிக்கெட்டில் சுமாராக செயல்பட்டு வரும் அவர் டி20 கிரிக்கெட்டில் அதற்கு நேர்மாறாக எதிரணி பவுலர்கள் எப்படி பந்து வீசினாலும் மைதானத்தின் அனைத்து திசைகளிலும் அடித்து நொறுக்கி நிறைய வெற்றிகளை பெற்றுக் கொடுத்து வருகிறார்.

அதனால் தரவரிசையில் நம்பர் ஒன் டி20 பேட்ஸ்மேனாக இருக்கும் அவரை இந்தியாவின் மிஸ்டர் 360 டிகிரி பேட்ஸ்மேன் என்று அனைவரும் பாராட்டி வருகின்றனர். இந்நிலையில் தம்முடைய 360 டிகிரி பிளேயர் எனும் பட்டத்தை சூரியகுமார் யாதவ் திருட முயற்சிப்பது சோகத்தை கொடுப்பதாக ஜாம்பவான் ஏபி டீ வில்லியர்ஸ் நகைச்சுவையாக பேசியுள்ளார். இருப்பினும் தம்மை விட சிறப்பாக செயல்படும் சூரியகுமாருக்கு விரைவில் ஒரு பேட்டை தயார் செய்து பரிசளிக்க உள்ளதாக தெரிவிக்கும் அவர் இது பற்றி தனது யூடியூப் பக்கத்தில் பேசியது பின்வருமாறு.

- Advertisement -

“நான் சூரியகுமார் பேட்டிங் செய்வதை பார்க்க விரும்புகிறேன். நாங்கள் அவருடைய பேட்டை 360 டிகிரி பேட்டாக மாற்ற வேண்டும் என்று நினைக்கிறேன். நாங்கள் பார்ட்னர்ஷிப்பில் வேலை செய்வோம். அப்போது தான் உண்மையான மிஸ்டர் 360 டிகிரி வீரர் யார் என்று நாங்கள் வாதிட வேண்டியதில்லை. நான் ஒரு பேட்டை வடிவமைத்து அதில் சூரியகுமார் பேட்டிங் செய்வதை விரும்புகிறேன்”

இதையும் படிங்க: ரோஹித்துக்கு விழுந்த அடுத்த அடி.. ஹார்டிக் பாண்டியாவிற்கு அடித்த அடுத்த ஜாக்பாட் – சூடுபிடிக்கும் இந்திய கிரிக்கெட்

“அவருக்கு டி20 கிரிக்கெட்டில் விளையாடுவது மிகவும் பிடிக்கிறது. அவரை அனைவரும் தற்போது மிஸ்டர் 360 டிகிரி பேட்ஸ்மேன் என்று அழைக்கிறார்கள். அந்த வகையில் என்னுடைய பட்டப் பெயரை அவர் திருட முயற்சிப்பது எனக்கு சோகத்தை கொடுக்கிறது. இருப்பினும் மிகச் சிறந்த வீரரான அவர் 56 பந்துகளில் சதமடித்து அற்புதமான இன்னிங்ஸ் விளையாடினார்” என்று கூறினார்.

Advertisement