ரோஹித்துக்கு விழுந்த அடுத்த அடி.. ஹார்டிக் பாண்டியாவிற்கு அடித்த அடுத்த ஜாக்பாட் – சூடுபிடிக்கும் இந்திய கிரிக்கெட்

Pandya-and-Rohit
- Advertisement -

மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டன் பொறுப்பில் இருந்து ரோகித் சர்மா வெளியேற்றப்பட்டு புதிய கேப்டனாக ஹார்திக் பாண்டியா அறிவிக்கப்பட்ட செய்திதான் தற்போது பலரது மத்தியிலும் பேசப்படும் விடயமாக மாறியுள்ளது. அடுத்த ஆண்டு நடைபெற இருக்கும் ஐபிஎல் கிரிக்கெட் தொடருக்கு முன்னதாக டிரேடிங் முறையில் பாண்டியாவை மும்பை அணி வாங்கியிருந்த வேளையில் அவரையே புதிய கேப்டனாகவும் அறிவித்து அதிரடி காட்டியுள்ளது.

2024 ஆம் ஆண்டு ஐபிஎல் மினி ஏலத்திற்கு இன்னும் நான்கு நாள்களே எஞ்சியுள்ள வேளையில் நேற்று மும்பை இந்தியன்ஸ் அணியின் நிர்வாகம் 10 ஆண்டுகால கேப்டன்சி பயணத்திற்காக ரோகித் சர்மாவுக்கு நன்றியை தெரிவித்து ஒரு பதிவை வெளியிட்டதோடு ஹார்டிக் பாண்டியாவை புதிய கேப்டனாக அறிவித்தும் ஒரு பதிவை வெளியிட்டு இருந்தது.

- Advertisement -

கடந்த 2013-ஆம் ஆண்டு நடைபெற்ற ஐபிஎல் தொடரில் ரிக்கி பாண்டிங் கேப்டன் பொறுப்பில் இருந்தபோது பாதி சீசனில் பொறுப்பேற்ற ரோஹித் சர்மா 2023-வரை 10 ஆண்டுகள் அந்த அணியை தலைமை தாங்கி ஐந்து கோப்பைகளை பெற்றுத்தந்துள்ளார்.

இந்நிலையில் அடுத்த 5-6 ஆண்டுகளை கணக்கில் கொண்டு ஹார்டிக் பாண்டியாவை மும்பை இந்தியன்ஸ் அணி கேப்டனாக நியமித்துள்ளது. இப்படி மும்பை அணியின் கேப்டனாக நியமிக்கப்பட்டதை அடுத்து தற்போது ஹார்டிக் பாண்டியாவுக்கு மேலும் ஒரு ஜாக்பாட்டாக 2024-ஆம் ஆண்டு டி20 உலக கோப்பை தொடருக்கான இந்திய அணியின் கேப்டனாகவும் அவர் அறிவிக்கப்பட இருக்கிறார் என்ற தகவல் வெளியாகியுள்ளது.

- Advertisement -

அதன்படி விரைவில் அவர் இந்திய டி20 அணிக்கு கேப்டனாக கம்பேக் கொடுப்பார் என்றும் அவரது தலைமையிலேயே டி20 உலககோப்பை அணியை தயார் செய்யவும் பி.சி.சி.ஐ முடிவெடுத்துள்ளதாக ஒரு தகவல் வெளியாகி உள்ளது. இதன் காரணமாக ரோகித் சர்மா இந்திய டி20 அணியின் கேப்டன் பதவியில் இருந்தும் வெளியேற்றப்படுவார் என்று கூறப்படுகிறது.

இதையும் படிங்க : ரோஹித்தை நீக்கி பாண்டியாவை மும்பை அணி கேப்டனாக்க இதுதான் காரணம்னு நெனைக்குறேன் – மார்டின் குப்தில் கருத்து

அதோடு ஒருவேளை 2024-ஆம் ஆண்டு ஐபிஎல் தொடரில் ரோஹித் சர்மாவின் பேட்டிங் சொதப்பினால் அவரால் டி20 அணியில் ஒரு சாதாரண வீரராக கூட இடம்பெற முடியாமல் போகலாம் என்றும் கூறப்படுகிறது. இதன் காரணமாக ரோகித் சர்மாவிற்கு அடி மேல் அடி விழும் இந்த நேரத்தில் பாண்டியாவிற்கு அடுத்தடுத்த கேப்டன்சி பதவிகள் தேடி வந்திருப்பது அவருக்கான ஜாக்பாட் என்றே கூறலாம்.

Advertisement