IND vs ENG : நான் பார்த்ததிலேயே மாஸ் கம்பேக் – இந்தியாவை பாராட்டிய தெ.ஆ ஜாம்பவான், கூறியது இதோ

Rishabh-Pant-and-Ravindra-Jadeja
- Advertisement -

இங்கிலாந்துக்கு எதிராக பர்மிங்காம் மைதானத்தில் கடந்த ஜூலை 1-ஆம் தேதியன்று துவங்கிய 5-வது போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்தியா போராடி 416 ரன்கள் சேர்த்தது. இந்தியாவுக்கு அதிக பட்சமாக அதிரடியாக பேட்டிங் செய்த ரிஷப் பண்ட் சதமடித்து 146 (111) ரன்களும் அவருடன் நங்கூரமாக பேட்டிங் செய்த ரவீந்திர ஜடேஜா சதமடித்து 104 ரன்களும் குவித்தனர். அதைவிட கடைசி நேரத்தில் ஸ்டூவர்ட் பிராட் வீசிய ஒரே ஓவரில் 35 ரன்களை தெறிக்கவிட்ட இந்திய கேப்டன் ஜஸ்பிரித் பும்ரா உலக சாதனை படைத்தார். இங்கிலாந்து சார்பில் பந்துவீச்சில் அதிகபட்சமாக ஜேம்ஸ் ஆண்டர்சன் 5 விக்கெட்டுகளை எடுத்தார்.

அதை தொடர்ந்து தனது முதல் இன்னிங்சை தொடங்கிய இங்கிலாந்து ஆரம்பம் முதலே இந்தியாவின் தரமான பந்துவீச்சில் சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. அந்த அணிக்கு ஜோ ரூட் கேப்டன், பென் ஸ்டோக்ஸ் போன்ற முக்கிய பேட்ஸ்மேன்கள் சொற்ப ரன்களில் அவுட்டான நிலையில் அதிகபட்சமாக அதிரடியாக விளையாடிய ஜானி பேர்ஸ்டோ சதமடித்து 106 ரன்கள் குவித்தார். இந்தியா சார்பில் அதிகபட்சமாக முகமது சிராஜ் 4 விக்கெட்கள் எடுத்தார்.

- Advertisement -

வெல்லுமா இந்தியா:
அதனால் 132 ரன்கள் முன்னிலை பெற்ற இந்தியாவுக்கு 2-வது இன்னிங்சில் பொறுப்பை காட்டவேண்டிய கில் 4, விராட் கோலி 20, விஹாரி 11, ஷ்ரேயஸ் ஐயர் 19 என முக்கிய பேட்ஸ்மேன்கள் மீண்டும் இங்கிலாந்தின் சிறப்பான பந்து வீச்சில் சொற்ப ரன்களில் பெவிலியன் திரும்பிய மாற்றமளித்தனர். இருப்பினும் இம்முறை தனது அனுபவத்தை காட்டிய தொடக்க வீரர் புஜாரா 8 பவுண்டரியுடன் அரைசதமடித்து 66 ரன்களில் ஆட்டமிழந்தார். அவருடன் பொறுப்பை காட்டிய ரிஷப் பண்ட் மீண்டும் சிறப்பாக விளையாடி அரைசதம் கடந்து 57 ரன்களில் அவுட்டானார். எஞ்சிய வீரர்கள் சொற்ப ரன்களில் அவுட்டானதால் இந்தியா தனது 2-வது இன்னிங்சில் 245 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.

இங்கிலாந்து சார்பில் அதிகபட்சமாக கேப்டன் பென் ஸ்டோக்ஸ் 4 விக்கெட்டுகளை எடுத்தார். இதனால் 378 என்ற இலக்கைத் துரத்தி வரும் இங்கிலாந்து சற்று முன்வரை விக்கெட் இழப்பிற்கு 100/0 ரன்கள் எடுத்து நல்ல நிலையில் விளையாடி வருகிறது. ஏற்கனவே நடந்த முதல் 4 போட்டிகளின் முடிவில் 2 – 1* என்ற கணக்கில் முன்னிலை வகிக்கும் இந்தியா இப்போட்டியில் எப்படியாவது வென்று 3 – 1 என்ற கணக்கில் தொடரை சமன் செய்யுமா என்ற எதிர்பார்ப்பு இந்திய ரசிகர்களிடம் காணப்படுகிறது. அல்லது குறைந்தது இப்போட்டியை டிரா செய்தால் கூட 2007க்கு பின் 15 வருடங்கள் கழித்து இங்கிலாந்து மண்ணில் டெஸ்ட் தொடரை வென்று சரித்திரத்தை இந்தியா படைக்க அற்புதமான வாய்ப்புள்ளது.

- Advertisement -

திருப்புமுனை பார்ட்னர்ஷிப்:
இப்போட்டியில் 2-வது இன்னிங்சில் இந்தியா பேட்டிங் செய்ததை பார்த்தால் முதல் இன்னிங்சில் அற்புதமாக விளையாடிய ரிஷப் பண்ட் மற்றும் ரவீந்திர ஜடேஜா ஆகியோர் அமைத்த அபார பார்ட்னர்ஷிப் தான் இந்தியாவின் கையை ஓங்க வைத்துள்ளதை காட்டுகிறது. ஏனெனில் வெற்றியாளரை தீர்மானிக்கும் இந்த முக்கிய போட்டியில் புஜாரா 17, கில் 13, விஹாரி 20, விராட் கோலி 11, ஷ்ரேயஸ் ஐயர் 15 என டாப் 5 பேட்ஸ்மேன்கள் அடுத்தடுத்து இங்கிலாந்தின் தரமான பந்துவீச்சில் வரிசையாக பெவிலியன் திரும்பினார்.

அதனால் 98/5 என தடுமாறிய இந்தியா 200 ரன்களை தாண்டாது என்று ரசிகர்கள் கவலையடைந்த போது ஜோடி சேர்ந்த பண்ட் – ஜடேஜா மேலும் சரிய விடாமல் நங்கூரத்தை போட்டு 6-வது விக்கெட்டுக்கு 222 ரன்கள் மெகா பார்ட்னர்ஷிப் அமைத்து மூழ்கிய இந்தியாவை செங்குத்தாக தூக்கி நிறுத்தினார்கள். அதில் ஒருபுறம் ஜடேஜா கம்பெனி கொடுக்கும் வகையில் மெதுவாக பேட்டிங் செய்ய மறுபுறம் ஜேம்ஸ் ஆண்டர்சன் போன்ற ஜாம்பவான் பவுலரை ரிவர்ஸ் ஸ்வீப் அடித்த ரிஷப் பண்ட் ஸ்பின்னர் ஜேக் லீச்சை ஜாம்பவான் கங்குலியை போல் இறங்கி இறங்கி சிக்ஸர்களை பறக்க விட்டு வெறும் 89 பந்துகளில் சதத்தை விளாசினார்.

- Advertisement -

ஏபிடி பாராட்டு:
கடைசிவரை அதிரடியை கைவிடாத அவர் டி20 இன்னிங்ஸ் போல 19 பவுண்டரி 4 சிக்சர்களுடன் 146 (111) ரன்களை 131.53 என்ற மிரட்டலான ஸ்டிரைக் ரேட்டில் தெறிக்கவிட்ட ஆட்டமிழந்தார். அவருடன் பொறுமையின் சிகரமாக பேட்டிங் செய்த ஜடேஜா தனது பங்கிற்கு 13 பவுண்டரியுடன் வெளிநாட்டு மண்ணில் தனது முதல் சதத்தை அடித்து 104 ரன்கள் குவித்து இந்தியாவைக் காப்பாற்றினார்.

இந்நிலையில் வீட்டில் இல்லாததால் இந்த போட்டியை நேரடியாக பார்க்க முடியவில்லை என்று தெரிவித்துள்ள தென் ஆப்பிரிக்க ஜாம்பவான் ஏபி டிவில்லியர்ஸ் பண்ட் – ஜடேஜா ஆகியோரின் பார்ட்னர்ஷிப் தமது வாழ்நாளில் பார்த்த மிகச்சிறந்த பார்ட்னர்ஷிப் என்று பாராட்டியுள்ளார்.

இதையும் படிங்க : IND vs ENG : டெஸ்ட் போட்டியின் நேரலை வர்ணனையில் பீட்டர்சனுக்கு கொட்டு வைத்த ரவி சாஸ்திரி – எதற்குனு பாருங்க

இது பற்றி தனது ட்விட்டரில் அவர் பதிவிட்டுள்ளது பின்வருமாறு. “வீட்டில் இல்லாததால் பெரும்பாலான கிரிக்கெட் போட்டிகளைப் பார்க்க முடியவில்லை. அதனால் இப்போது தான் ஹைலைட்ஸ் பார்த்து முடித்தேன். மிரட்டிய இங்கிலாந்துக்கு எதிராக பதிலடி கொடுக்கும் வகையில் ரிஷப் பண்ட் ரவீந்திர ஜடேஜா அமைத்த பதில் தாக்குதல் பார்ட்னர்ஷிப் டெஸ்ட் கிரிக்கெட்டில் நான் பார்த்த மிகச்சிறந்த ஒன்றாகும்” என்று கூறியுள்ளார்.

Advertisement