அபாரமான ரெகார்ட் வெச்சுருக்கும்.. அவர் சாதாரண பிளேயர் இல்ல.. அறிமுகமாக இறக்குங்க.. ஏபிடி ஆதரவு

AB De Villiers 2
- Advertisement -

இந்தியா மற்றும் இங்கிலாந்து கிரிக்கெட் அணிகள் மோதும் 2வது டெஸ்ட் போட்டி விசாகப்பட்டினத்தில் நடைபெற உள்ளது. பிப்ரவரி 2ஆம் தேதி துவங்கும் அந்த போட்டியில் இங்கிலாந்தை தோற்கடித்து வெற்றிப் பாதைக்கு திரும்ப வேண்டிய கட்டாயத்தில் இந்தியா களமிறங்குகிறது. ஏனெனில் ஹைதராபாத் நகரில் நடைபெற்ற முதல் போட்டியில் 28 ரன்கள் வித்தியாசத்தில் தோற்ற இந்தியா வெற்றியை எதிரணிக்கு தாரை வார்த்தது.

அதை விட அப்போட்டியில் சந்தித்த காயத்தால் கேஎல் ராகுல் மற்றும் ரவீந்திர ஜடேஜா ஆகியோர் 2வது போட்டியில் விலகுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ஏற்கனவே முதலிரண்டு போட்டிகளில் விராட் கோலி சொந்த காரணங்களுக்காக விளையாட மாட்டார் என்பதும் இந்தியாவுக்கு பெரிய பின்னடைவை கொடுத்துள்ளது. இருப்பினும் இவர்கள் விலகியுள்ளதால் ரஜத் படிடார் மற்றும் சர்பராஸ் கான் ஆகிய 2 இளம் வீரர்களில் ஒருவருக்கு இந்தியாவுக்காக விளையாடும் வாய்ப்பு கிடைத்துள்ளது.

- Advertisement -

ஏபிடி ஆதரவு:
இருப்பினும் அந்த இருவருமே உள்ளூர் கிரிக்கெட்டில் நன்றாக செயல்பட்டு நல்ல ஃபார்மில் இருப்பதால் யாரை தேர்வு செய்வது என்பது குழப்பமாக இருக்கிறது என்றே சொல்லலாம். அதில் மத்திய பிரதேசத்தைச் சேர்ந்த ரஜத் படிடார் 55 உள்ளூர் போட்டிகளில் 4000 ரன்களை 45.97 என்ற சராசரியில் அடித்து சமீபத்திய இங்கிலாந்து லயன்ஸ் அணிக்கு எதிரான முயற்சி டெஸ்ட் போட்டியில் சதமும் அடித்து நல்ல ஃபார்மில் உள்ளார்.

ஆனால் அவரை மிஞ்சும் அளவுக்கு உள்ளூர் கிரிக்கெட்டில் 66 இன்னிங்ஸில் 3912 ரன்களை 69.85 என்ற அபாரமான சராசரியில் குவித்துள்ள சர்பராஸ் கானும் சமீபத்திய இங்கிலாந்து லயன்ஸ்க்கு எதிரான பயிற்சி போட்டியில் சதமடித்து சிறப்பான ஃபார்மில் இருக்கிறார். இந்நிலையில் உள்ளூர் கிரிக்கெட்டில் அபாரமான புள்ளிவிவரத்தை வைத்துள்ள சர்ப்ராஸ் கான் சாதாரண வீரர் அல்ல என்று தென்னாப்பிரிக்க ஜாம்பவான் ஏபி டீ வில்லியர்ஸ் பாராட்டியுள்ளார்.

- Advertisement -

எனவே சர்பராஸ் 2வது போட்டியில் அறிமுகமாக களமிறங்க சரியானவர் என்று தெரிவிக்கும் அவர் இது பற்றி தன்னுடைய யூடியூப் பக்கத்தில் பேசியது பின்வருமாறு. “இது ஆர்வமாக இருக்கிறது. உள்ளூர் கிரிக்கெட்டில் அவருடைய புள்ளி விவரங்கள் அபாரமாக இருக்கிறது. எனவே இந்திய அணிக்காக விளையாட தகுதியான ஒரு வீரர் தேவை என்றால் அது அவராக இருப்பார். ஏனெனில் 66 இன்னிங்ஸில் விளையாடியுள்ள அவர் 3912 ரன்களை 69.85 என்ற சராசரியில் குவித்துள்ளார்”

இதையும் படிங்க: ஹிட்மேனுக்கு மறுவாழ்வு கொடுத்த விசாகப்பட்டினம்.. கோட்டையில் இந்தியாவை மீட்பாரா ரோஹித் சர்மா

“அதில் அவர் 14 சதங்கள் மற்றும் 11 அரை சதங்கள் அடித்துள்ள்ளார். நண்பர்களே இது சாதாரணமல்ல. முதல் தர கிரிக்கெட்டில் இது மிகவும் சிறந்த ரெக்கார்ட். இங்கிலாந்துக்கு எதிராக சர்வதேச கிரிக்கெட்டில் அவருக்கு வாய்ப்பு கொடுப்பது பெரியது என்பதை நான் அறிவேன். இருப்பினும் தரமான அவருக்கு வாய்ப்பு கிடைக்கும் என்று நம்புகிறேன்” என கூறினார்.

Advertisement