விராட் கோலியிடம் மன்னிப்பு கேட்குறேன்.. உருக்கமாக பேசிய ஏபிடி.. ரசிகர்களுக்கு முக்கிய கோரிக்கை

- Advertisement -

இங்கிலாந்துக்கு எதிராக நடைபெற்று வரும் டெஸ்ட் கிரிக்கெட் தொடரின் முதல் போட்டியில் தோல்வியை சந்தித்த இந்தியா இரண்டாவது போட்டியில் வென்று தொடரை சமன் செய்துள்ளது. முன்னதாக இந்த தொடரின் முதலிரண்டு போட்டிகளில் இந்தியாவின் நம்பிக்கை நட்சத்திரம் விராட் கோலி சொந்த காரணங்களுக்காக விளையாடாமல் வெளியேறினார். அப்போது அவருடைய சொந்த விவகாரத்தில் தலையிடாமல் ரசிகர்களும் ஊடகங்களும் அமைதி காக்குமாறு பிசிசிஐ கேட்டுக் கொண்டது.

இருப்பினும் விரைவில் இரண்டாவது குழந்தை பிறக்க உள்ளதால் தன்னுடைய மனைவியுடன் விரும்பிய காரணத்தாலேயே விராட் கோலி இங்கிலாந்து தொடரிலிருந்து விலகியதாக ஏபி டீ வில்லியர்ஸ் தன்னுடைய யூடியூப் பக்கத்தில் ரசிகரின் கேள்விக்கு பதிலளித்திருந்தார். ஆனால் ஐபிஎல் தொடரில் பெங்களூரு அணிக்காக விளையாடி நண்பராக இருப்பதால் விராட் கோலி சொன்ன விஷயத்தை அவர் இப்படி வெளியில் சொன்னது பலரிடம் அதிருப்தியை ஏற்படுத்தியது.

- Advertisement -

ஏபிடி நேரடி மன்னிப்பு:
மேலும் அவர் சொன்ன தகவல் சமூக வலைதளங்கள் முதல் ஊடகங்கள் வரை வைரலானது. இந்நிலையில் விராட் கோலி எதற்காக இங்கிலாந்து தொடரில் வெளியேறினார் என்பது பற்றி உண்மையை தெரிந்து கொள்ளாமல் தாம் தவறான தகவலை கொடுத்து விட்டதாக ஏபி டீ வில்லியர்ஸ் கூறியுள்ளார்.

எனவே அதற்காக விராட் கோலியிடம் வெளிப்படையாக அவர் மன்னிப்பு கேட்டுள்ளார். மேலும் இந்த விவகாரத்தில் ரசிகர்கள் மேற்கொண்டு விராட் கோலியின் சொந்த விஷயத்தில் தலையிடாமல் அமைதி காக்குமாறு கேட்டுக் கொள்ளும் அவர் இது பற்றி தன்னுடைய யூடியூப் பக்கத்தில் மீண்டும் பேசியது பின்வருமாறு. “என்னுடைய நண்பர் விராட் கோலி இன்னும் அணிக்கு திரும்பவில்லை. இந்த நேரத்தில் அவருக்கு தகுதியான தனி உரிமையை வழங்குமாறு அனைவரிடமும் நான் அழுகிறேன்”

- Advertisement -

“அனைவருக்கும் குடும்பம் முதலிடம். அங்கே என்ன நடக்கிறது என்பது யாருக்கும் தெரியாது. அதை நாம் அனைவரும் மதிக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். என்னுடைய முந்தைய நிகழ்ச்சியில் நான் தவறு செய்து விட்டேன். அதற்காக விராட் கோலி குடும்பத்தினரிடம் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன். குறிப்பாக உறுதியாக தெரியாத தகவலை நான் முந்தைய பதிவில் தெரிவித்தேன்”

இதையும் படிங்க: அண்டர்-19 உலகக் கோப்பையை இந்தியா நடத்தாதது ஏன்? உண்மையை உடைத்த முன்னாள் பிசிசிஐ தலைவர் கங்குலி

“எனவே அவரையும் அவரது குடும்பத்தினரையும் தனிப்பட்ட நேரத்தையும் அனைவரும் மதிக்குமாறு நான் கேட்டுக்கொள்கிறேன். விராட் கோலி எப்போது போல மகிழ்ச்சியாக ரன்கள் குவிப்பதை நாம் மீண்டும் காண்போம் என்று நம்புகிறேன்” என தெரிவித்துள்ளார். இந்த சூழ்நிலையில் இங்கிலாந்துக்கு எதிரான கடைசி 3 டெஸ்ட் போட்டிகளிலும் விராட் கோலி விளையாட மாட்டார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement