அண்டர்-19 உலகக் கோப்பையை இந்தியா நடத்தாதது ஏன்? உண்மையை உடைத்த முன்னாள் பிசிசிஐ தலைவர் கங்குலி

- Advertisement -

சர்வதேச கிரிக்கெட்டில் வருங்காலத்தில் அசத்தப் போகும் தரமான வீரர்களை முன்கூட்டியே அடையாளப்படுத்துவதற்காக ஐசிசி கடந்த 1988 முதல் 19 வயதுக்குட்பட்ட வீரர்களுக்கான உலகக் கோப்பையை நடத்தி வருகிறது. இந்த தொடரில் தான் கடந்த பல வருடங்களாக விராட் கோலி, ஜோ ரூட், ரவீந்திர ஜடேஜா, கேன் வில்லியம்சன், ரிஷப் பண்ட், ஜெயிஸ்வால் உட்பட நிறைய வீரர்கள் சர்வதேச கிரிக்கெட்டுக்கு கிடைத்துள்ளனர்.

மேலும் வரலாற்றில் இதுவரை இந்த உலகக் கோப்பை மொத்தம் 14 முறை நடைபெற்றுள்ளது. அதில் முகமது கைஃப், விராட் கோலி, உன்முக்த் சந்த், பிரிதிவி ஷா, யாஷ் துள் தலைமையில் 2000, 2008, 2012, 2018, 2022 வருடங்களில் 5 கோப்பைகளை ஏற்கனவே வென்றுள்ள இந்தியா உலகின் வெற்றிகரமான அணியாக சாதனை படைத்துள்ளது.

- Advertisement -

கங்குலியின் பதில்:
அந்த வரிசையில் இம்முறை உதய் சகரன் தலைமையில் களமிறங்கிய இந்தியா தங்களுடைய லீக் மற்றும் சூப்பர் 6 சுற்றில் தோல்வியை சந்திக்காமல் செமி ஃபைனலில் தென்னாப்பிரிக்காவை அதன் சொந்த மண்ணில் தோற்கடித்தது. இதைத் தொடர்ந்து பிப்ரவரி 11ஆம் தேதி நடைபெறும் மாபெரும் இறுதிப்போட்டியில் ஆஸ்திரேலியாவை எதிர்கொள்ளும் இந்தியா 6வது கோப்பையை வெல்லுமா என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் காணப்படுகிறது.

முன்னதாக தரமும் வருங்கால நட்சத்திரங்களை அடையாளப்படுத்தும் இந்த தொடர் ரசிகர்களிடம் சீனியர் உலகக் கோப்பைக்கு நிகரான புகழ்பெற்றுள்ளது என்றால் மிகையாகாது. இருப்பினும் இந்த உலகக் கோப்பை வரலாற்றில் ஒருமுறை கூட இந்தியாவில் நடைபெற்றதில்லை என்பது ஆச்சரியமாகவே இருந்து வருகிறது. அதற்கான காரணம் என்ன? என்று முன்னாள் பிசிசிஐ தலைவர் சௌரவ் கங்குலியிடம் கேட்கப்பட்டது.

- Advertisement -

அதற்கு அத்தொடரை நடத்துவதால் வருமானம் கிடைக்காமல் நஷ்டம் ஏற்படுவதாலேயே இந்தியா அண்டர்-19 உலகக் கோப்பையை நடத்தாமல் இருந்திருக்கலாம் என கங்குலி உண்மையை உடைத்து பேசியுள்ளது பின்வருமாறு. “இந்தியா அத்தொடரை நடத்தாமல் இருப்பதில் எந்த குறிப்பிட்ட காரணமும் இல்லை. மற்ற உலகக் கோப்பைகள் இந்தியாவில் நடைபெறுகிறது. சீனியர் உலகக் கோப்பைகள் அடிக்கடி நடக்காத இடங்களில் இது விளையாடினால் என்ன தவறு”

இதையும் படிங்க: அண்டர்-19 உ.கோ 2024 : இந்தியா சாம்பியன் பட்டம் வெல்லுமா? வரலாற்று புள்ளிவிவரம்.. பிட்ச் – வெதர் ரிப்போர்ட்

“கிரிக்கெட்டை மற்றும் நாடுகளுக்கு எடுத்துச் செல்ல இது ஒரு வழி. நீங்கள் இது நஷ்டத்தை ஏற்படுத்தும் தொடர் என்று சொல்லலாம். குறிப்பாக சீனியர் அணிகள் விளையாடாத பெரும்பாலான உலகக் கோப்பைகள் வருமானத்தை கொடுப்பதில்லை. இருப்பினும் இந்தியாவில் அந்த உலகக் கோப்பை நடக்காமல் இருப்பதற்கு அது ஒரு காரணம் கிடையாது. விரைவில் அது இந்தியாவில் நடக்கும் என்று நினைக்கிறேன்” எனக் கூறினார்.

Advertisement