அண்டர்-19 உ.கோ 2024 : இந்தியா சாம்பியன் பட்டம் வெல்லுமா? வரலாற்று புள்ளிவிவரம்.. பிட்ச் – வெதர் ரிப்போர்ட்

- Advertisement -

தென்னாபிரிக்காவில் நடைபெற்று வரும் ஐசிசி 2024 அண்டர்-19 உலகக் கோப்பையின் மாபெரும் இறுதி போட்டி பிப்ரவரி 11ஆம் தேதி நடைபெற உள்ளது. வருங்காலத்துக்கு தேவையான தரமான வீரர்களை முன்கூட்டியே அடையாளப்படுத்தும் இந்த தொடரில் உதய் சகரன் தலைமையில் களமிறங்கிய சாம்பியன் இந்தியா தங்களுடைய லீக் மற்றும் சூப்பர் 6 சுற்றில் தேவையான வெற்றிகளை பெற்று செமி ஃபைனலில் தென்னாப்பிரிக்காவை அதனுடைய சொந்த மண்ணில் தோற்கடித்து ஃபைனலுக்கு தகுதி பெற்றது.

அதே போல தங்களுடைய லீக் மற்றும் சூப்பர் 6 சுற்றில் தேவையான வெற்றிகளை பெற்ற ஆஸ்திரேலியா செமி ஃபைனலில் பாகிஸ்தானை 1 விக்கெட் வித்தியாசத்தில் தோற்கடித்து ஃபைனலுக்கு வந்தது. இதை தொடர்ந்து பெனோனி நகரில் உள்ள வில்லோமோர் பார்க் கிரிக்கெட் மைதானத்தில் இந்திய நேரப்படி மதியம் 1.30 மணிக்கு இத்தொடரின் மாபெரும் இறுதிப் போட்டி நடைபெற உள்ளது.

- Advertisement -

வரலாற்று புள்ளிவிவரம்:
அதில் ஆஸ்திரேலியா 4வது முறையாக கோப்பையை வெல்வதற்கு போராட உள்ளது. அதே போல முகமது கைஃப், விராட் கோலி, உன்முக்த் சந்த், பிரிதிவி ஷா, யாஷ் துள் தலைமையில் முறையே 2000, 2008, 2012, 2018, 2022 வருடங்களில் ஏற்கனவே 5 கோப்பைகளை வென்ற இந்தியா 6வது முறையாக கோப்பையை வென்று சாம்பியன் பட்டத்தை தக்க வைப்பதற்கு போராட உள்ளது. குறிப்பாக 2023 டெஸ்ட் சாம்பியன்ஷிப் மற்றும் உலகக்கோப்பை ஃபைனலில் தோல்வியை கொடுத்த ஆஸ்திரேலியாவை இப்போட்டியிலாவது இந்தியா வீழ்த்துமா என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் இருக்கிறது.

அண்டர்-19 உலகக்கோப்பை வரலாற்றில் இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் 3 முறை மோதியுள்ளன. அதில் இந்தியா 2, ஆஸ்திரேலியா 1 வெற்றியை பதிவு செய்துள்ளது. குறிப்பாக 2012, 2018 ஆண்டுகளில் நடைபெற்ற இறுதிப் போட்டிகளில் ஆஸ்திரேலியாவை உன்முக்த் சந்த், பிரிதிவி ஷா தலைமையில் தோற்கடித்த இந்தியா 2 கோப்பைகளை வென்றுள்ளது.

- Advertisement -

வெதர் ரிப்போர்ட்:
பேனோனி நகரில் பிப்ரவரி 11ஆம் தேதி 40% மழை பெய்வதற்கான வாய்ப்புள்ளதாக அங்குள்ள வானிலை மையம் தெரிவிக்கிறது. எனவே லேசான மழையுடன் இப்போட்டி முடிவு கிடைக்கும் அளவுக்கு நடைபெறும் என்று நம்பலாம்.

பிட்ச் ரிப்போர்ட்:
வெள்ளைப்பந்து கிரிக்கெட்டில் வில்லோமோர் பார்க் மைதானம் வேகப்பந்து வீச்சாளர்களுக்கு அதிக ஆதரவை கொடுத்து வருகிறது. எனவே இங்கு நல்ல பவுன்ஸ் மற்றும் வேகம் ஆகியவை இருக்கும் என்பதால் அதை சமாளித்து விளையாடினால் மட்டுமே பேட்ஸ்மேன்கள் பெரிய ரன்கள் குவிக்க முடியும். ஸ்பின்னர்கள் கணிசமான தாக்கத்தை ஏற்படுத்துவார்கள்.

இதையும் படிங்க: அதுக்கு நேரமிருக்கு.. ஆனா இந்திய அணிக்கு விளையாட மனமில்லையா? முக்கிய வீரரை விளாசிய இர்பான் பதான்

வரலாற்றில் இங்கு நடைபெற்ற 27 ஒருநாள் 17 முறை முதலில் பேட்டிங் செய்த அணிகள் வென்றுள்ளது. 8 முறை சேசிங் செய்த அணிகள் வென்றுள்ளன. எனவே இப்போட்டியில் டாஸ் வெல்லும் கேப்டன் முதலில் பேட்டிங் செய்து பெரிய ரன்கள் குவிப்பது வெற்றிக்கு வித்திடலாம்.

Advertisement