WTC Final : புதிய பந்துக்கு முன் அந்த ஒரு ஆஸி பவுலரை அட்டாக் செஞ்சா இந்தியா ஜெயிக்க வாய்ப்பிருக்கு – ஏபிடி கொடுத்த பிளான் இதோ

ABD
- Advertisement -

ஆஸ்திரேலியாவுக்கு எதிராக இங்கிலாந்தின் லண்டன் ஓவல் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்று வரும் ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் கோப்பையின் மாபெரும் இறுதி போட்டியில் 444 என்ற சரித்திரத்தில் எட்டப்படாத மிகப்பெரிய இலக்கை வெற்றிக்காக இந்தியா துரத்தி வருகிறது. ஜூன் 7ஆம் தேதி துவங்கி அந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலியா டிராவிஸ் ஹெட் 163 ரன்களும் ஸ்டீவ் ஸ்மித் 121 ரன்களும் எடுத்த உதவியுடன் 469 ரன்கள் குவித்து வலுவான துவக்கத்தை பெற்ற நிலையில் இந்தியா சார்பில் அதிகபட்சமாக முகமது சிராஜ் 4 விக்கெட் எடுத்தார். அதன் பின் களமிறங்கிய இந்தியா சுமாரான பேட்டிங்கை வெளிப்படுத்தி வெறும் 296 ரன்களுக்கு சுருண்டது.

அதிகபட்சமாக ரகானே 89, ரவீந்திர ஜடேஜா 48, தாக்கூர் 51 என மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் முக்கிய ரன்களை எடுத்து பாலோ ஆன் அவமானத்திலிருந்து காப்பாற்ற நிலையில் ஆஸ்திரேலியா சார்பில் அதிகபட்சமாக கேப்டன் பட் கமின்ஸ் 3 விக்கெட்டுகளை சாய்த்தார். அதைத்தொடர்ந்து 173 ரன்கள் முன்னிலையுடன் களமிறங்கிய ஆஸ்திரேலியா 270/8 ரன்கள் குவித்த டிக்ளர் செய்து இந்தியாவுக்கு பெரிய இலக்கை நிர்ணயித்தது. அதிகபட்சமாக அலெக்ஸ் ஸ்கேரி 66* ரன்கள் எடுக்க இந்தியா சார்பில் அதிகபட்சமாக ரவீந்திர ஜடேஜா 3 விக்கெட்டுகளை எடுத்தார்.

- Advertisement -

ஏபிடி ஆலோசனை:
அதை தொடர்ந்து களமிறங்கிய இந்தியாவுக்கு சுப்மன் கில் சர்ச்சைக்குரிய தீர்ப்பால் 18 ரன்களில் பெவிலியன் திரும்பிய நிலையில் கேப்டன் ரோஹித் சர்மா 43, புஜாரா 18 என முக்கிய வீரர்கள் நல்ல ரன்களை எடுத்து நல்ல துவக்கத்தை பெற்றும் சுமாரான ஷாட்டை தேவையின்றி அடித்து அவுட்டானது ரசிகர்களை கடுப்பேற்றியது. அதனால் 93/3 என சரிந்த இந்தியாவை அடுத்ததாக ஜோடி சேர்ந்த நம்பிக்கை நட்சத்திரங்கள் விராட் கோலி மற்றும் அஜிங்க்ய ரகானே ஆகியோர் நிதான பேட்டிங்கை வெளிப்படுத்தி காப்பாற்ற போராடி வருகிறார்கள்.

குறிப்பாக 4வது விக்கெட்டுக்கு 71* ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து வெற்றிக்கு போராடும் அவர்களில் களத்தில் விராட் கோலி 44* ரன்கள் ரகானே 20* ரன்களுடன் உள்ள நிலையில் 4வது நாள் முடிவில் 164/3 ரன்கள் எடுத்துள்ள இந்தியாவுக்கு இன்றைய கடைசி நாளில் 280 ரன்கள் தேவைப்படுகிறது. இருப்பினும் பொதுவாகவே சாதாரண போட்டிகளில் 200 ரன்களை 4வது இன்னிங்ஸில் சேசிங் செய்வதை கடினமாக பார்க்கப்படும் நிலையில் இந்த உலக சாதனை இலக்கை இந்தியா எட்டிப்பிடித்து சரித்திரம் படைத்து கோப்பையை வெல்லுமா என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் ஏற்பட்டுள்ளது.

- Advertisement -

ஆனால் 5வது நாளில் பிட்ச் இன்னும் பேட்டிங் செய்வதற்கு சவாலாக மாறும் என்பதால் ஆஸ்திரேலியாவின் தரமான பவுலர்களை 97 ஓவர்கள் எதிர்கொண்டு குறைந்தபட்சம் போட்டியை டிரா செய்து கோப்பையை பகிர்ந்து கொண்டு வாருங்கள் என்பதே இந்திய அணிக்கு ரசிகர்களின் கோரிக்கையாக இருக்கிறது. இந்நிலையில் இன்றைய கடைசி நாளில் ஆஸ்திரேலியாவின் தரமான ஸ்பின்னரான நேத்தன் லயனை சிறப்பாக எதிர்கொள்ளும் பட்சத்தில் இந்தியாவுக்கு வெற்றி வாய்ப்பு இருப்பதாக தென்னாபிரிக்க ஜாம்பவான் ஏபி டீ வில்லியர்ஸ் கூறியுள்ளார்.

குறிப்பாக இன்னும் 40 ஓவர்களுக்கு பின் தயாராக இருக்கும் புதிய பந்தை எடுப்பதற்கு முன்பாக அதிகபட்சம் ஒரு விக்கெட்டை மட்டும் இழந்து நங்கூரமாக பேட்டிங் செய்தால் இந்தியா மிகப்பெரிய இலக்கை எட்டிப் பிடிக்க வாய்ப்புள்ளதாக கூறும் அவர் இது பற்றி ட்விட்டரில் கூறியுள்ளது பின்வருமாறு. “லயனை அடிக்கும் வழியை கண்டுபிடித்தால் 5வது நாளில் இந்தியாவுக்கு வாய்ப்புள்ளது. மேலும் புதிய பந்துக்கு முன்பாக அதிகபட்சம் 1 விக்கெட்டை மட்டுமே இழந்திருந்தால் என்ன நடக்கும் என்பது உங்களுக்கு தெரியாது”

- Advertisement -

“உண்மையில் உறுதியுடன் போராடினால் அது சில வேலைகளை செய்யும். எப்படியாக இருந்தாலும் லயனுக்கு எதிராக அட்டாக் செய்து விளையாட வேண்டும்” என்று கூறினார். அவர் கூறுவது போல 5வது நாளில் இதர வேகப்பந்து வீச்சாளர்களை காட்டிலும் பிட்ச் சுழலுக்கு சாதகமாக இருக்கும் என்பதால் ஏற்கனவே ரோகித் சர்மாவை அவுட்டாக்கிய லயன் அச்சுறுத்தலாக இருப்பார்.

இதையும் படிங்க: WTC Final : நியாயமாக சுப்மன் கில் அவுட்டா? இல்லையா? – எந்த ரூல்ஸ் படி இந்த முடிவு எடுக்கப்பட்டது தெரியுமா?

எனவே அவரை அதிரடியாக எதிர்கொண்டால் வெற்றிக்கு வாய்ப்பிருக்கிறது. குறிப்பாக அதை ஏற்கனவே கடந்த காலங்களில் செய்து காட்டியுள்ள ரிஷப் பண்ட் போல ஒருவர் இன்று விளையாட வேண்டும்.

Advertisement