வேணும்னா அந்த பதவி கிடைக்கும்.. ஆனா 2023 உ.கோ இந்திய அணியில் அஷ்வினுக்கு சான்ஸ் கிடைக்காது.. ஆரோன் பின்ச் ஓப்பன்டாக்

Aaron Finch
- Advertisement -

ஆஸ்திரேலியாவுக்கு எதிராக சொந்த மண்ணில் நடைபெற்று வரும் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடரின் முதலிரண்டு போட்டிகளில் இந்திய அணி முறையே 5 விக்கெட் மற்றும் 99 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது. அதனால் 2 – 0* என்ற கணக்கில் கோப்பையை கைப்பற்றியுள்ள இந்தியா சொந்த மண்ணில் தங்களை வலுவான அணி என்பதையும் உலகின் நம்பர் ஒன் அணி என்பதை மீண்டும் நிரூபித்துள்ளது.

முன்னதாக உலகக் கோப்பைக்காக அறிவிக்கப்பட்ட ரோகித் சர்மா தலைமையிலான 15 பேர் கொண்ட இந்திய அணியில் சுழல் பந்து வீச்சு துறையில் அக்சர் பட்டேல், ரவீந்திர ஜடேஜா, குல்தீப் யாதவ் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர். இருப்பினும் அந்த மூவருமே லெக் அல்லது இடது கை ஸ்பின்னர்களாக இருப்பதால் எதிரணியில் இருக்கும் இடது கை பேட்ஸ்மேன்களை திணறடிக்க ஆஃப் ஸ்பின்னர் தேவை என்று சில முன்னாள் வீரர்கள் அதிருப்தியை வெளிப்படுத்தினர்.

- Advertisement -

வாய்ப்பு கிடைக்காது:
அந்த சமயம் பார்த்து ஆசிய கோப்பையில் அக்சர் படேல் காயமடைந்ததால் ஏற்கனவே இடதுகை பேட்ஸ்மேன்களை அதிக முறை அவுட்டாக்கி உலக சாதனை படைத்துள்ள அஸ்வின் அனுபவமிக்கவர் என்பதால் சுமார் 2 வருடங்கள் கழித்து இத்தொடரில் தேர்வு செய்யப்பட்டார். அதில் முதல் போட்டியில் 611 நாட்கள் கழித்து விக்கெட்டுகளை எடுத்து அவர் 2வது போட்டியில் 3 விக்கெட்டுகளை எடுத்து வெற்றியின் முக்கிய பங்காற்றினார்.

அதனால் உலகக்கோப்பை அணியில் கடைசி நேரத்தில் ரிசர்வ் வீரராகவும் தேர்வு செய்யப்பட்டுள்ள அவருக்கு நேரடியாக வாய்ப்பு கிடைக்குமா என்ற எதிர்பார்ப்பு காணப்படுகிறது. இந்நிலையில் இத்தொடரில் அசத்துவதால் ஆலோசகர் பதவி கிடைக்குமே தவிர 15 பேர் உலகக்கோப்பை இந்திய அணியில் அஸ்வினுக்கு வாய்ப்பு கிடைப்பது கடினம் என்று முன்னாள் ஆஸ்திரேலிய கேப்டன் ஆரோன் பின்ச் கூறியுள்ளார். இது பற்றி ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சியில் அவர் பேசியது பின்வருமாறு.

- Advertisement -

“இது உலகக் கோப்பை தொடரில் மைதானங்கள் எப்படி இருக்கும் என்பதை பொறுத்து அமையும் என்று நினைக்கிறேன். அந்த சமயத்தில் நீங்கள் அணியின் பின் முனையை பற்றி சிந்திக்க வேண்டும் என்பது சிறந்த உலகக்கோப்பை அணியை தேர்ந்தெடுப்பதற்கான திறமைகளில் ஒன்றாக இருக்கும். ஆனால் நீங்கள் அதைப் பற்றி அதிகம் சிந்திக்க முடியாது. ஏனெனில் நீங்கள் அங்கு செல்ல வேண்டும்”

இதையும் படிங்க: என்னா மனுஷன்யா.. தனது இடத்தை ஆக்கிரமித்த அஷ்வினை.. பெரிய வார்த்தை சொல்லி பாராட்டிய சஹால் – இதுக்கெல்லாம் மனசு வேணும்

“அந்த சூழ்நிலையில் அவர் 15 பேர் கொண்ட அணியில் இடம் பிடிக்க தடுமாறிவார் என்று நான் நினைக்கிறேன். இருப்பினும் ஏராளமான கிரிக்கெட்டை விளையாடியுள்ள அவரிடம் இந்த ஆஸ்திரேலிய தொடரில் எஞ்சிய வீரர்கள் நிறைய கற்றுக் கொள்ளலாம். ஏனெனில் டி20 உட்பட எந்த வகையான போட்டியாக இருந்தாலும் அஸ்வின் முக்கிய தருணங்களில் சிறப்பாக செயல்படும் தன்மையை கொண்டவர். எனவே உலகக்கோப்பை அணியில் அவர் ஆலோசகராக இருந்தால் நான் ஆச்சரியப்படப் மாட்டேன். ஆனால் துரதிஷ்டவசமாக அவர் 15 பேர் கொண்ட அணியில் இருப்பார் என்று எனக்கு தோன்றவில்லை” என கூறினார்.

Advertisement