என்னா மனுஷன்யா.. தனது இடத்தை ஆக்கிரமித்த அஷ்வினை.. பெரிய வார்த்தை சொல்லி பாராட்டிய சஹால் – இதுக்கெல்லாம் மனசு வேணும்

Yuzvendra Chahal
- Advertisement -

ஆஸ்திரேலியாவுக்கு எதிராக சொந்த மண்ணில் நடைபெற்று வரும் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் இதுவரை நடைபெற்ற முதலிரண்டு போட்டிகளில் இந்திய கிரிக்கெட் அணி அடுத்தடுத்த வெற்றிகளை பெற்றுள்ளது. அதனால் 2 – 0* என்ற கணக்கில் ஆரம்பத்திலேயே கோப்பையை கைப்பற்றியுள்ள இந்தியா விராட் கோலி போன்ற முதன்மை வீரர்கள் இல்லாமலேயே ஆஸ்திரேலியாவை வீழ்த்தி தங்களை சொந்த மண்ணில் வலுவான மற்றும் உலகின் நம்பர் ஒன் அணி என்பதை நிரூபித்துள்ளது.

அதே போல விரைவில் சொந்த மண்ணில் நடைபெறும் 2023 உலகக் கோப்பையை வெல்வதற்கு தயாராக இருக்கிறோம் என்பதையும் உலக அணிகளுக்கு இந்திய அணி காண்பித்துள்ளது என்று சொல்லலாம். முன்னதாக அறிவிக்கப்பட்ட ரோகித் சர்மா தலைமையிலான 15 பேர் கொண்ட இந்திய உலகக் கோப்பை அணியில் முதன்மை ஸ்பின்னராக தேர்வு செய்யப்படுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட யுஸ்வேந்திர சஹால் சமீபத்திய வெஸ்ட் இண்டீஸ் ஒருநாள் தொடரில் சுமாராக செயல்பட்டதால் கழற்றி விடப்பட்டார்.

- Advertisement -

பெரிய மனசு பாராட்டு:
கடந்த 2016இல் அறிமுகமாகி நல்ல செயல்பாடுகளை வெளிப்படுத்தி வெள்ளைப்பந்து கிரிக்கெட்டில் முதன்மை ஸ்பின்னராக உருவெடுத்த அவர் 2019 உலகக்கோப்பையில் விளையாடினார். இருப்பினும் அதன் பின் ஃபார்மை இழந்து தடுமாறியதால் கழற்றி விட்டப்பட்ட அவருக்கு பதிலாக 4 வருடங்கள் கழித்து 2021 டி20 உலகக் கோப்பையில் அனுபமிக்க ரவிச்சந்திரன் அஸ்வின் நேரடியாக தேர்வானார்.

அதன் தொடர்ச்சியாக 2022 டி20 உலகக்கோப்பையிலும் அஸ்வின் தேர்வு செய்யப்பட்டதால் சஹாலுக்கு விளையாடும் 11 பேர் அணியில் வாய்ப்பு கிடைக்கவில்லை. மறுபுறம் 2022 ஐபிஎல் தொடரில் ஊதா தொப்பியை வென்று கம்பேக் கொடுத்த சஹால் இந்த உலக கோப்பையில் தேர்வு செய்யப்படுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட போதிலும் கடந்த சில தொடர்களில் சுமாராக செயல்பட்டதால் கழற்றி விடப்பட்டுள்ளார்.

- Advertisement -

இது ஒருபுறமிருக்க 2023 உலகக் கோப்பை அணியில் ஏற்கனவே தேர்வாகியுள்ள குல்தீப், ஜடேஜா ஆகியோர் இடது கை ஸ்பின்னர்களாக இருப்பதால் எதிரணியில் இருக்கும் இடது கை பேட்ஸ்மேன்களை திணறடிக்க ஆஃப் ஸ்பின்னர் தேவை என்ற நோக்கத்துடன் ஒருநாள் கிரிக்கெட்டில் 2 வருடங்கள் கழித்து ரவிச்சந்திரன் அஸ்வின் நேரடியாக தொடரில் தேர்வாகியுள்ளார். அதில் முதல் போட்டியில் 611 நாட்கள் கழித்து விக்கெட் எடுத்த அவர் 2வது போட்டியில் 3 விக்கெட்டுகளை எடுத்து வெற்றியில் முக்கிய பங்காற்றினார்.

அதை பார்த்த சஹால் தன்னுடைய ட்விட்டரில். “ரவிச்சந்திரன் அஸ்வின் என்ற பெயரே போதும். லெஜெண்ட்” என பதிவிட்டு வேற லெவலில் பாராட்டியுள்ளார். அதை பார்க்கும் ரசிகர்கள் உங்களுடைய இடத்தை பிடித்துள்ள அஸ்வின் மீது ஹர்பஜன் சிங் போன்ற சிலரை போல் வன்மத்தை காட்டாமல் லெஜெண்ட் என்று பாராட்டுவதற்கு பெரிய மனம் வேண்டும் என்று சஹாலுக்கு பாராட்டு தெரிவிப்பதுடன் சீக்கிரம் கம்பேக் கொடுங்கள் என்றும் வாழ்த்து தெரிவிக்கின்றனர்.

Advertisement