
ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக நடைபெற்று வரும் ஐந்து போட்டிகள் கொண்ட பார்டர் கவாஸ்கர் டெஸ்ட் கிரிக்கெட் தொடரின் முதல் போட்டியில் வெற்றி பெற்ற இந்திய அணி அடுத்ததாக நடைபெற்ற இரண்டாவது போட்டியில் தோல்வியை சந்தித்தது. மேலும் பிரிஸ்பேன் நகரில் நடைபெற நடைபெற்று முடிந்த மூன்றாவது போட்டியிலும் சறுக்களை சந்தித்த இந்திய அணியை மழை காப்பாற்றியதன் காரணமாக அந்த போட்டி டிராவில் முடிவடைந்தது.
இந்த ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான தொடரில் இந்திய அணி வெற்றி பெற்று தொடரை கைப்பற்றினால் மட்டுமே உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப் போட்டிக்கு செல்லும் என்கிற கட்டாயம் இருக்கும் வேலையில் இந்த தொடரில் இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளரான பும்ரா மட்டுமே இந்திய அணியின் வெற்றிக்கு மிக முக்கியமான காரணமாக திகழ்ந்து வருகிறார்.
இதுவரை நடைபெற்றுள்ள மூன்று டெஸ்ட் போட்டிகளின் முடிவில் 21 விக்கெட்டுகளை கைப்பற்றி இந்த தொடரில் அதிக விக்கெடுகளை கைப்பற்றிய பவுலராகவும் திகழ்கிறார். இந்திய அணியின் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளரான பும்ராவின் செயல்பாடு இந்த தொடரிலும் பிரமாதமாக இருந்து வருவது ஆஸ்திரேலிய அணிக்கு மிகப்பெரிய தலைவலியாக மாறியுள்ளது.
தொடர்ச்சியாக அவரது பிரமாதமான பந்துவீச்சில் ஆஸ்திரேலியா வீரர்கள் விக்கெட்டுகளையும் இழந்து வருகின்றனர். அந்த அளவிற்கு அவரது பந்துவீச்சு அட்டகாசமாக இருந்து வருகிறது. இந்நிலையில் பும்ராவின் பந்துவீச்சு இந்த தொடரில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தி வரும் வேளையில் அவர் குறித்த சில கருத்துக்களை ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கேப்டனான ஆரோன் பின்ச் பகிர்ந்துள்ளார்.
இதுகுறித்து பேசிய அவர் கூறுகையில் : ஜஸ்ப்ரீத் பும்ரா உலகத்தரம் வாய்ந்த பந்துவீச்சாளர் என்பது நாம் அறிந்ததே. அதுமட்டும் இன்றி காலம் காலமாக பார்த்து வரும் வேகப்பந்து வீச்சாளர்களில் இவரும் ஒரு மகத்தான வேகப்பந்து வீச்சாளர். தற்போதே அவர் லெஜெண்ட் பவுலர்களின் பட்டியலில் தான் இருக்கிறார்.
இதையும் படிங்க : கஷ்டப்படாதீங்க.. இதை மட்டும் பண்ணுங்க போதும்.. அறிமுக வீரருக்கு அறிவுரை வழங்கிய – பேட் கம்மின்ஸ்
ஒருவேளை நான் மீண்டும் பின்னோக்கி சென்று பும்ராவிடம் ஏதாவது ஒன்று கூற வேண்டும் என்றால் மீண்டும் எனக்கு எதிராக பந்துவீச வராதீர்கள் பும்ரா என்று அவரிடம் சொல்ல வேண்டும். அந்த அளவிற்கு அவர் மிகச் சிறப்பான பந்துவீச்சாளர். அவரை எதிர்த்து விளையாடுவது உண்மையிலேயே கடினம் என்று ஆரோன் பின்ச் பாராட்டியுள்ளது குறிப்பிடத்தக்கது.