2023 உ. கோ : இந்திய அணியில் சூப்பர்ஸ்டார்கள் இருக்கலாம் ஆனா அது இல்ல, இம்முறை ஜெயிக்க போவது நாங்க தான் – பாக் வீரர் சவால் பேட்டி

IND-vs-PAK
- Advertisement -

உலக கிரிக்கெட் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்துக்கொண்டிருக்கும் ஐசிசி 2022 உலகக்கோப்பை வரும் அக்டோபர் 5 முதல் இந்தியாவில் துவங்குகிறது. வரலாற்றில் முதல் முறையாக முழுவதுமாக இந்திய மண்ணில் நடைபெறும் இத்தொடருக்கான அட்டவணை வெளியிடப்பட்டுள்ள நிலையில் கோப்பையை வெல்வதற்காக நடப்புச் சாம்பியன் இங்கிலாந்து, ஆஸ்திரேலியா உள்ளிட்ட உலகின் டாப் 10 அணிகள் மொத்தம் 48 போட்டிகளில் மோதுகின்றன. அதில் சொந்த மண்ணில் வலுவான அணியாக இந்தியா 2011 போல கோப்பையை வென்று கடந்த 10 வருடங்களாக ஐசிசி தொடர்களில் சந்தித்து வரும் தொடர் தோல்விகளை நிறுத்துமா என்ற எதிர்பார்ப்பு உச்சகட்டமாக காணப்படுகிறது.

அதற்கு நிகராக அக்டோபர் 14ஆம் தேதி அகமதாபாத் நகரில் பரம எதிரி பாகிஸ்தானுக்கு எதிராக நடைபெறும் போட்டியில் வென்று காலம் காலமாக வைத்துள்ள கௌரவத்தை இந்தியா காப்பாற்றுமா என்ற எதிர்பார்ப்பும் இந்திய ரசிகர்களிடம் நிலவுகிறது. மறுபுறம் 1992 முதல் இதுவரை சந்தித்த 7 போட்டிகளிலும் தொடர்ந்து தோல்விகளை சந்தித்துள்ள பாகிஸ்தான் உலக கோப்பையை வெல்லாவிட்டாலும் அந்த அனைத்து வரலாற்றுத் தோல்விகளுக்கும் இம்முறை இந்தியாவை அதன் சொந்த மண்ணில் தோற்கடித்து பழி தீர்க்க வேண்டும் என்பதே அந்நாட்டை சேர்ந்த பெரும்பாலான முன்னாள் வீரர்கள் மற்றும் ரசிகர்களின் குறிக்கோளாக இருந்து வருகிறது.

- Advertisement -

இந்தியாவை வீழ்த்துவோம்:
இருப்பினும் தற்போதைய அணியில் இருக்கும் பாபர் அசாம் போன்ற அனைவருமே ஐபிஎல் தொடரில் விளையாடாத காரணத்தால் பாகிஸ்தானுக்கு இந்த உலகக் கோப்பையில் இந்தியாவின் கால சூழ்நிலைகள் முற்றிலும் புதிதாகவும் சவாலாகவும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதே போல 30 வருடங்களாக வெற்றி காண முடியவில்லை என்ற எக்ஸ்ட்ரா அழுத்தமும் அந்த அணி மீதிருப்பதால் சொந்த மண்ணில் மீண்டும் இந்தியா சாதிக்கும் என்று இந்திய ரசிகர்கள் நம்புகின்றனர்.

இந்நிலையில் இந்திய அணியில் விராட் கோலி, ரோஹித் சர்மா போன்ற சூப்பர் ஸ்டார்கள் இருந்தாலும் அதில் பெரும்பாலானவர்கள் ஃபார்ம் இல்லாமலும் பும்ரா, கேஎல் ராகுல், ஸ்ரேயாஸ் ஐயர் போன்றவர்கள் ஃபிட்னஸ் இல்லாமலும் தடுமாறுவதாக முன்னாள் பாகிஸ்தான் வீரர் ஆகிப் ஜாவேத் கூறியுள்ளார். அத்துடன் இந்திய அணியில் பெரும்பாலும் மூத்த வயதுடைய வீரர்களாக இருப்பதால் இளமையும் அனுபவமும் கலந்த பாகிஸ்தானுக்கு எதிராக பதில் சொல்ல முடியாமல் திண்டாடப் போவதாகவும் கூறும் அவர் இம்முறை இந்தியாவை அவர்களுடைய சொந்த மண்ணில் தோற்கடிப்பது உறுதி என்று சவாலாக பேசியுள்ளார்.

- Advertisement -

இது பற்றி பிரபல இணையத்தில் அவர் பேசியது பின்வருமாறு. “பாகிஸ்தான் அணி மிகவும் பேலன்ஸ் நிறைந்ததாக இருக்கிறது என்று நினைக்கிறேன். குறிப்பாக வயது அடிப்படையில் பாகிஸ்தானில் இருக்கும் வீரர்கள் சிறப்பாக இருக்கின்றனர். மறுபுறம் இந்திய அணியில் தற்போது சூப்பர்ஸ்டார்கள் நிறைந்திருக்கிறார்கள். அதன் காரணமாக தடுமாறப்போகும் அவர்கள் புதிய கலவையை உருவாக்குவதற்கு புதிய வீரர்களை கண்டுபிடிக்க வேண்டிய நிலைமையில் உள்ளனர். எனவே இது இந்தியாவை அவர்களுடைய சொந்த மண்ணில் பாகிஸ்தான் தோற்படிப்பதற்கு மிகச் சிறந்த வாய்ப்பு என்று நான் கருதுகிறேன்” என்று கூறினார்.

அத்துடன் ஷாஹின் அப்ரிடி, நசீம் ஷா ஆகியோரை விட டெத் ஓவர்களில் மிரட்டலாக பந்து வீசும் ஜமான் கான் 2023 ஆசிய கோப்பை பாகிஸ்தான் அணியில் தேர்வு செய்யப்பட்டுள்ளதால் இந்திய அணிக்கு சவாலை கொடுப்பார் என்று தெரிவிக்கும் அவர் இது பற்றி மேலும் பேசியது பின்வருமாறு. “வெள்ளைப்பந்து கிரிக்கெட்டில் ஜமான் கானிடம் இருக்கும் நுணுக்கங்களை சமீபத்தைய கனடா தொடரில் நாம் பார்த்தோம். சொல்லப்போனால் தற்சமயத்தில் உலக அளவில் அவர் மிகச்சிறந்த டெத் பவுலர்களில் ஒருவராக இருக்கிறார்”

இதையும் படிங்க:50 ஓவர் உலகக்கோப்பை : ஷ்ரேயாஸ் இல்லனா 4 ஆவது இடத்தில் அவரை தேர்வு செய்யுங்க – தவான் கருத்து

“நான் அவரை நசீம் ஷா’வை விட அதிகமாக மதிப்பிடுகிறேன். ஷாஹின், ஹரிஷ், ஜமான் ஆகியோருடன் நாசிம் ஷா எதிரணியை தோற்கடிக்கக் கூடிய உங்களுடைய பந்து வீச்சு கூட்டணியில் கட்டாயம் இருக்க வேண்டும்” என்று கூறினார். அப்படி எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ள நிலையில் உலக கோப்பைக்கு முன்பாக இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் ஆசிய கோப்பையில் 2 முறை மோதும் என்று எதிர்பார்க்கப்படுவது குறிப்பிடப்பட்டது.

Advertisement