50 ஓவர் உலகக்கோப்பை : ஷ்ரேயாஸ் இல்லனா 4 ஆவது இடத்தில் அவரை தேர்வு செய்யுங்க – தவான் கருத்து

Dhawan
- Advertisement -

இந்தியாவில் இந்த ஆண்டு ஐசிசி-யின் 50 ஓவர் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரானது நடைபெற உள்ளது. இன்னும் சில மாதங்களில் துவங்க இருக்கும் இந்த உலகக் கோப்பை தொடருக்கான இந்திய அணியின் வீரர்களை இன்னும் பிசிசிஐ தேர்வு செய்யாமல் இருக்கிறது. ஏனெனில் இந்திய அணியின் முக்கிய வீரர்களான ரிஷப் பண்ட், பும்ரா, கே.எல் ராகுல், ஸ்ரேயாஸ் ஐயர் போன்ற பல வீரர்கள் காயமடைந்துள்ளனர்.

மேலும் தற்போதைய இந்திய அணியில் இடம் பெற்றுள்ள வீரர்களின் பார்மும் சறுக்கலை சந்தித்துள்ளதால் எப்படிப்பட்ட வீரர்களை இந்திய அணியின் நிர்வாகம் தேர்வு செய்யும் என்பதில் சந்தேகம் எழுந்துள்ளது. மேலும் காயம் அடைந்த வீரர்கள் மீண்டும் அணிக்கு சரியான நேரத்தில் திரும்புவார்களா? என்ற கேள்வியும் எழுந்துள்ளது.

- Advertisement -

இதன் காரணமாக உலககோப்பை அணித்தேர்வில் சிக்கல் நீடிக்கிறது. இந்நிலையில் இந்திய அணியின் நான்காவது இடத்தில் விளையாடும் பேட்ஸ்மேன் குறித்த கேள்வியே தற்போது அனைவரது மத்தியிலும் பேசப்படும் விடயமாக மாறியுள்ளது.

ஏனெனில் கடந்த 2019-ஆம் ஆண்டு நான்காவது இடத்தில் இறங்கும் வீரரை சரியாக தேர்வு செய்யாதது தான் தோல்விக்கு காரணமாக அமைந்தது. எனவே இம்முறையாவது சரியான வீரரை நான்காவது இடத்தில் விளையாட வைக்க வேண்டும் என்ற பேச்சு நிலவி வரும் வேளையில் தற்போது வரை 4-ஆவது இடத்தில் விளையாடப்போவது யார் என்று உறுதி செய்யப்படவில்லை.

- Advertisement -

ஷ்ரேயாஸ் ஐயர் மற்றும் கே.எல் ராகுல் ஆகியோர் காயம் காரணமாக இடம்பெறாமல் போனால் அவர்களது இடத்தில் சஞ்சு சாம்சன் மற்றும் சூரியகுமார் யாதவ் ஆகியோரே அந்த இடத்தில் விளையாட வைக்க வேண்டும் என்று பலரும் கூறி வருகின்றனர். இந்நிலையில் இந்திய அணியின் முன்னணி வீரரான ஷிகர் தவான் எதிர்வரும் உலகக்கோப்பை தொடரில் ஸ்ரேயாஸ் ஐயர் ஒருவேளை விளையாட முடியாமல் போனால் அந்த இடத்தில் சூரியகுமார் யாதவ் தான் விளையாட வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க : ஏசியன் கேம்ஸ் தொடரில் தனது பெயர் இடம்பெறாதது குறித்து முதல்முறையாக – மனம்திறந்த ஷிகர் தவான்

இதுகுறித்து பேசிய அவர் கூறுகையில் : கடந்து சில ஆண்டுகளாகவே சூரியகுமார் யாதவ் இந்திய அணிக்காக சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார். மேலும் பல ஆண்டுகள் அனுபவம் வாய்ந்தவர் நிச்சயம் இந்த உலக கோப்பை தொடரில் இந்திய அணிக்காக சிறப்பாக செயல்படுவார் என்று நம்புவதாக ஷிகர் தவான் கூறியது குறிப்பிடத்தக்கது. அதோடு உலககோப்பை தொடரில் ரோஹித் சர்மாவின் ஆட்டத்தை காணவும் காத்திருப்பதாக தவான் கூறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement