ஏசியன் கேம்ஸ் தொடரில் தனது பெயர் இடம்பெறாதது குறித்து முதல்முறையாக – மனம்திறந்த ஷிகர் தவான்

Shikhar-Dhawan
- Advertisement -

ரோகித் சர்மா தலைமையிலான முதன்மை இந்திய கிரிக்கெட் அணியானது எதிர்வரும் ஆசிய கோப்பை மற்றும் 50 ஓவர் உலகக்கோப்பை தொடர்களில் பங்கேற்க உள்ளது. இதன் காரணமாக இளம் வீரர்களை கொண்ட இரண்டாம் தர அணி செப்டம்பர் மற்றும் அக்டோபர் மாதம் சீனாவில் நடைபெறவுள்ள ஏசியன் கேம்ஸ் தொடருக்காக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஏசியன் கேம்ஸ் தொடரில் இந்திய அணியை வழிநடத்த ஷிகர் தவான் தேர்வு செய்யப்படுவார் என்று அனைவராலும் எதிர்பார்க்கப்பட்டது.

ஏனெனில் முதன்மை அணியில் இருந்து கழட்டிவிடப்பட்ட ஷிகார் தவான் இரண்டாம் தர அணிக்கு கேப்டனாக சில தொடர்களில் செயல்பட்டு வந்தார். இந்திய அணியின் அனுபவ வீரரான அவர் நிச்சயம் ஏசியன் கேம்ஸ் தொடரில் கேப்டனாக அறிவிக்கப்படுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட வேளையில் அவருக்கு ஏசியன் கேம்ஸ் தொடரில் இடம் கிடைக்கவில்லை.

- Advertisement -

மேலும் ருதுராஜ் கெய்க்வாட் தலைமையிலான இளம் வீரர்களை கொண்ட இந்திய அணி அந்த தொடருக்காகவும் அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் 37 வயதான ஷிகர் தவான் ஏசியன் கேம்ஸ் தொடரில் தான் இடம்பெறவில்லை என்பது குறித்து முதல் முறையாக மனம் திறந்த பேட்டி ஒன்றினை அளித்துள்ளார்.

இது குறித்து அவர் கூறுகையில் : ஏசியன் கேம்ஸ் தொடரில் எனது பெயர் இடம்பெறாமல் போனதை பார்த்ததும் சற்று அதிர்ச்சியாகவே இருந்தது. இருந்தாலும் இந்திய அணியின் கிரிக்கெட் நிர்வாகம் புதிதாக ஏதோ யோசிக்கிறார்கள். எனவே அதனை நான் முழு மனதுடன் ஏற்றுக் கொள்கிறேன்.

- Advertisement -

ருதுராஜ் கெய்க்வாட் இளம் வீரர்களைக் கொண்ட இந்திய அணியின் கேப்டனாக அவர் நிச்சயம் சிறப்பாக செயல்படுவார் என ஷிகர் தவான் கூறினார். மேலும் தொடர்ந்து பேசிய அவர் : நான் நிச்சயம் இந்திய அணியின் கம்பேக்கிற்காக தயாராக இருப்பேன். இப்பொழுதும் என்னுடைய பேட்டிங் மற்றும் பிட்னஸ் ஆகியவற்றில் பயிற்சியையும் மேற்கொண்டு வருகிறேன்.

இதையும் படிங்க : மைக்கேல் பெவன் மாதிரி பிளேயரான அவருக்கு 2023 உ.கோ டீம்லயே சான்ஸ் கொடுக்கலாம் – இளம் வீரரை புகழ்ந்த எம்எஸ்கே பிரசாத்

தற்போதும் என்னுடைய ஆட்டம் என்னுடைய கண்ட்ரோலில் தான் இருக்கிறது. இன்னும் தொடர்ச்சியான பயிற்சி மேற்கொண்டு வருகிறேன். எப்பொழுது எனக்கு கம்பேக் வாய்ப்பு கிடைத்தாலும் அதனை நான் பயன்படுத்திக் கொள்வேன் என ஷிகர் தவான் கூறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement