மைக்கேல் பெவன் மாதிரி பிளேயரான அவருக்கு 2023 உ.கோ டீம்லயே சான்ஸ் கொடுக்கலாம் – இளம் வீரரை புகழ்ந்த எம்எஸ்கே பிரசாத்

- Advertisement -

வெஸ்ட் இண்டீஸ்க்கு எதிராக நடைபெற்று வரும் 5 போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடரில் முதலிரண்டு போட்டிகளில் தோற்றாலும் முக்கியமான 3வது போட்டியில் வென்ற இந்தியா தொடரை வெல்லும் வாய்ப்பை தக்க வைத்துள்ளது. முன்னதாக இத்தொடரில் நல்ல ஃபார்மில் இருக்கும் சுப்மன் கில், இஷான் கிசான், சஞ்சு சாம்சன் போன்ற நட்சத்திர இளம் வீரர்கள் சவாலான பிட்ச்சில் சுமாராக பேட்டிங் செய்து பின்னடைவை ஏற்படுத்திய நிலையில் அறிமுகமாக களமிறங்கும் வாய்ப்பை பெற்ற திலக் வர்மா 39, 51 என முதலிரண்டு போட்டிகளிலும் அதிகபட்ச ஸ்கோர் அடித்து வெற்றிக்கு போராடினார்.

அதே வேகத்தில் 3வது போட்டியில் மிகச் சிறப்பாக செயல்பட்டு 49* ரன்கள் அடித்த அவர் வெற்றியில் முக்கிய பங்காற்றி சர்வதேச டி20 கிரிக்கெட்டில் தங்களுடைய முதல் 3 போட்டிகளில் அதிக ரன்கள் அடித்த இந்திய வீரர் என்ற சூரியகுமார் சாதனையை சமன் செய்து 20 வயதில் அதிகபட்ச ஸ்கோர் பதிவு செய்த இந்திய வீரர் என்ற ரோகித் சர்மாவின் சாதனையை உடைத்தார். சர்வதேச தரத்துக்கு நிகரான ஐபிஎல் தொடரில் மும்பை அணியில் கடந்த 2 வருடங்களாக விளையாடும் வாய்ப்பை பெற்று தலா 300க்கும் மேற்பட்ட ரன்களை அடித்ததால் இந்தியாவுக்காக விளையாடும் வாய்ப்பை பெற்றுள்ள அவர் தற்போது அதிலும் அசத்த துவங்கி நிறைய பாராட்டுகளை பெற்று வருகிறார்.

- Advertisement -

மைக்கேல் பெவன் மாதிரி:
குறிப்பாக இளம் வயதிலேயே மிகவும் முதிர்ச்சியுடன் செயல்படுவதாக பாராட்டும் முன்னாள் வீரர்கள் அவருக்கு ஒருநாள் போட்டிகளில் வாய்ப்பு கொடுக்கலாம் என்று கோரிக்கை வைக்கின்றனர். அதன் உச்சமாக 2023 உலகக்கோப்பை அணியில் 4வது இடத்தில் விளையாடும் ஸ்ரேயாஸ் ஐயர் காயமடைந்துள்ள பிரச்சனைக்கும் மிடில் ஆர்டரில் இடது கை பேட்ஸ்மேன் இல்லாத பிரச்சனைக்கும் தீர்வாக திலக் வர்மாவை தேர்வு செய்ய வேண்டும் என ரவிச்சந்திரன் அஸ்வின் வெளிப்படையாகவே கேட்டுக் கொண்டார்.

இந்நிலையில் டி20 மட்டுமல்லாமல் ஏற்கனவே உள்ளூர் லிஸ்ட் ஏ ஒருநாள் கிரிக்கெட்டில் நல்ல புள்ளி விவரங்களை வைத்துள்ள திலக் வர்மா ஆஸ்திரேலிய ஜாம்பவான் மைக்கேல் பெவன் சாயலில் விளையாடுவதால் தாராளமாக 2023 உலகக் கோப்பையில் தேர்வு செய்யலாம் என முன்னாள் தேர்வுகுழு தலைவர் எம்எஸ்கே பிரசாத் கூறியுள்ளார். தங்கள் மாநிலத்தைச் சேர்ந்த இளம் வீரர் பற்றி புள்ளிவிவரங்களுடன் அவர் தாறுமாறாக புகழ்ந்து பேசியது பின்வருமாறு. “ஹைதராபாத் அணிக்காக அவருடைய லிஸ்ட் ஏ ரெக்கார்டை பாருங்கள். அவர் 25 லிஸ்ட் ஏ போட்டிகளில் 55 என்ற சராசரியை வைத்துள்ளார்”

- Advertisement -

“அதில் 5 சதங்கள் 5 அரை சதங்கள் அடங்கும். அப்படியானால் அவர் தாம் அடிக்கும் 50% அரை சதங்களை சதங்களாக மாற்றுகிறார். அத்துடன் 100க்கும் மேற்பட்ட ஸ்ட்ரைக் ரேட்டும் இருக்கிறது. இந்த சமயத்தில் நாம் ஸ்ரேயாஸ் ஐயர் ஃபிட்டாக இருக்கிறாரா இல்லையா என்பதை தெரிந்து கொள்ள வேண்டும். ஒருவேளை அவர் காயத்தால் விலகும் பட்சத்தில் தற்போதைய சூழ்நிலையில் திலக் வர்மா தான் அந்த இடத்திற்கு சரியானவராக இருக்கிறார்”

“ஏனெனில் சுழல் மற்றும் வேகம் ஆகிய 2 வகையான பந்துகளையும் சிறப்பாக எதிர்கொள்ளும் அவரிடம் தேவையான சமயத்தில் கியரை மாற்றி அதிரடியாக விளையாடும் திறமையும் இருக்கிறது. அவை அனைத்தையும் விட தற்போது நமக்கு டாப் ஆர்டரில் ஒரு இடது கை பேட்ஸ்மேன் இல்லை. எனவே இது போன்ற அம்சங்கள் அவருக்கு சாதகமாக செல்கிறது. மேலும் அவரால் மிகவும் எளிதாக சூழ்நிலைக்கேற்றார் போல் உட்பட்டு விளையாட முடிகிறது. குறிப்பாக நிலைமையை புரிந்து கொண்டு ஸ்ட்ரைக்கை மாற்றும் அவர் ரன்கள் எடுப்பதை நிறுத்தாமல் நங்கூரமாகவும் விளையாடுகிறார். குறிப்பாக அவர் மைக்கேல் பெவன் போன்றவராக செயல்படுகிறார்”

இதையும் படிங்க:என்னைக்கு யுவி போனாரோ அன்னைக்கு இந்தியாவுக்கு ஆரம்பிச்ச அந்த பிரச்சனை இன்னும் தீரல – 2023 உ.கோ முன்பாக ரோஹித் கவலை

“மேலும் உள்ளூர் ஒருநாள் போட்டிகளில் அவருடைய பேட்டிங் சராசரி 55 – 60 என்ற அளவில் இருக்கிறது. எனவே ஸ்ரேயாஸ் ஐயர் விலகினால் அவர் இந்திய அணியில் சேர்க்கப்படுவதற்கான வாய்ப்பு பிரகாசமாகியுள்ளது” என்று கூறினார். அவர் கூறுவது போல 25 உள்ளூர் ஒருநாள் போட்டிகளில் திலக் வர்மா 1236 ரன்களை 56.18 என்ற சராசரியிலும் 101.64 என்ற ஸ்ட்ரைக் ரேட்டிலும் எடுத்துள்ளது குறிப்பிடப்பட்டது.

Advertisement