இவரை மட்டும் இந்திய அணியில் இருந்து நீக்குனா அது நியாயமே இல்ல பாத்துக்கோங்க – ஆகாஷ் சோப்ரா பேட்டி

Chopra
Advertisement

இந்தியா மற்றும் தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையே வரும் 26-ஆம் தேதி 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரானது துவங்க உள்ளது. அதனை தொடர்ந்து ஜனவரி மாதம் 19ஆம் தேதி 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரும் நடைபெற உள்ளது. இந்த தொடருக்கான இந்திய டெஸ்ட் அணி ஏற்கனவே அறிவிக்கப்பட்டு தென்னாபிரிக்கா சென்று அடைந்த வேளையில் இதுவரை இந்த தொடருக்கான ஒருநாள் அணி அறிவிக்கப்படவில்லை.

Dekock

இந்த ஒருநாள் தொடருக்கான இந்திய அணியின் அறிவிப்பில் விஜய் ஹசாரே தொடரில் சிறப்பாக விளையாடிய ருதுராஜ் கெய்க்வாட் மற்றும் வெங்கடேஷ் ஐயர் ஆகியோர் தேர்வு செய்யப்படுவார்கள் என்று ஒரு தகவல் வெளியாகியுள்ளது. இந்நிலையில் இந்திய அணியின் முன்னாள் வீரர் ஆகாஷ் சோப்ரா இந்திய அணியின் தொடக்க வீரர் ஷிகர் தவானை இந்த தொடருக்கான அணியில் தேர்வு செய்ய வேண்டும் என்று தனது ஆதரவினை தெரிவித்துள்ளார்.

- Advertisement -

இதுகுறித்து அவர் கூறுகையில் : நடைபெற்று முடிந்த விஜய் ஹசாரே தொடரில் ஷிகர் தவான் 5 போட்டிகளில் 58 ரன்கள் மட்டுமே குவித்துள்ளார் என்று அவரை நீக்கி விடக்கூடாது. ஏனெனில் கடந்த பல ஆண்டுகளாக இந்திய அணிக்காக அவர் தன்னை ஒரு பெரிய பிளேயராக நிரூபித்துள்ளார். அதுமட்டுமின்றி ஐசிசி தொடர்களில் எப்போதுமே இந்திய அணிக்காக அதிக ரன்களை அடித்து மிஸ்டர் ஐசிசி என்றும் பெயர் பெற்றவர்.

Dhawan

அவரை இந்திய அணியில் இருந்து நீக்கினால் அது நியாயம் கிடையாது. என்னை பொறுத்தவரை அவர் பிட்டாக இருந்தால் 2023 ஆம் ஆண்டு நடைபெற இருக்கும் 50 வது உலக கோப்பை தொடரிலும் அவர் துவக்க வீரராக விளையாடலாம். அந்த அளவிற்கு அவர் தனது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார்.

இதையும் படிங்க : வார்னர், பாண்டியா, ஷ்ரேயாஸ் 3 வீரர்களையும் மெகா ஏலத்திற்கு முன் எடுத்து கெத்து காட்டவுள்ள – ஐ.பி.எல் அணி

கடந்த ஜூலை மாதம் முதல் இந்திய அணி பெரிய அளவிலான ஒருநாள் போட்டிகளில் கலந்து கொண்டு விளையாடவில்லை. அதனால் தவானுக்கு நிச்சயம் இந்திய அணியில் வாய்ப்பு கொடுத்து மீண்டும் விளையாட வைக்க வேண்டும் என்று ஆகாஷ் சோப்ரா கூறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement