டிஎன்பிஎல் தொடரை உலகளவில் ஃபேமஸ் பண்ண இப்டி செய்யாதீங்க – அஸ்வினை விமர்சித்த முன்னாள் வீரர்

- Advertisement -

கோடைகாலத்தில் தமிழக கிரிக்கெட் ரசிகர்களை மகிழ்விக்கும் வகையில் நடைபெற்று வரும் 2023 டிஎன்பிஎல் டி20 தொடரில் இதுவரை நடைபெற்ற 6 போட்டிகளில் முடிவில் நடப்பு சாம்பியன் சேப்பாக் மற்றும் நெல்லை ஆகிய அணிகள் பங்கேற்ற 2 போட்டிகளிலும் 2 வெற்றிகளை பதிவு செய்து புள்ளி பட்டியலில் முதலிரண்டு இடங்களில் உள்ளன. அதே போல தமிழகத்தின் ஜாம்பவானாக ரசிகர்களால் போற்றப்படும் ரவிச்சந்திரன் அஸ்வின் தலைமை தாங்கும் திண்டுக்கல் டிராகன்ஸ் தங்களுடைய முதல் போட்டியிலேயே வெற்றியை பதிவு செய்து புள்ளி பட்டியலில் 3வது இடத்தில் இடத்தில் அசத்தி வருகிறது.

இங்கிலாந்தில் நடைபெற்ற முடிந்த 2023 டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனலில் ஐசிசி தரவரிசையில் உலகின் நம்பர் ஒன் பவுலராக இருந்தும் ரோகித் சர்மாவின் தவறான அணி தேர்வு காரணமாக தோல்வியை சந்தித்த இந்திய அணிக்காக விளையாடும் வாய்ப்பு பெறாத அவர் லண்டனிலிருந்து திரும்பியதும் ஓய்வெடுக்காமல் இத்தொடரில் நேரடியாக களமிறங்கியுள்ளார். அந்த வகையில் திருச்சிக்கு எதிராக நடைபெற்ற தங்களுடைய முதல் போட்டியில் 4 ஓவர்களில் 1 மெய்டன் உட்பட 26 ரன்கள் மட்டும் கொடுத்த அவர் 2 விக்கெட்டுகளை எடுத்து வெற்றியில் சிறப்பாக பங்காற்றினார். இருப்பினும் அந்த போட்டியில் திருச்சிக்காக விளையாடிய ராஜ்குமார் அவர் வீசிய ஒரு பந்தை எதிர்கொண்டு தவற விட்டார்.

- Advertisement -

ஃபேமஸ் பண்ணாதீங்க:
அப்போது பேட்டில் பட்டது போல் தெளிவான சத்தம் கேட்டதால் அஸ்வின் அவுட் கேட்ட நிலையில் நடுவரும் கொடுத்தார். இருப்பினும் அதை ஏற்றுக் கொள்ளாத ராஜ்குமார் ரிவ்யூ எடுத்த நிலையில் 3வது நடுவர் சோதித்த போது பேட் தரையில் உரசும் சமயத்தில் பந்து கடந்து சென்றதால் அந்த சத்தம் வந்தது தெரிய வந்தது. அதன் காரணமாக கள நடுவர் கொடுத்த தீர்ப்பை 3வது நடுவர் மாற்றி வழங்கியதால் அதிருப்தியடைந்த அஸ்வின் உடனடியாக மீண்டும் ரிவ்யூ எடுத்தார்.

அதாவது நடுவர்கள் கொடுக்கும் எந்த திருப்தியளிக்காத தீர்ப்பையும் மீண்டும் பரிசீலனை செய்யலாம் என்ற ஐபிஎல் 2023 தொடரில் பின்பற்ற புதிய விதிமுறை டிஎன்பிஎல் தொடரிலும் கொண்டு வரப்பட்டது. அதை முதல் ஆளாக பயன்படுத்திய அஸ்வின் ரிவியூவுக்கு மீண்டும் ரிவியூ செய்த நிலையில் 2வது முறையாக சோதித்த 3வது நடுவர் அதே தீர்ப்பை வழங்கினார். மொத்தத்தில் கிரிக்கெட்டின் நுணுக்கங்களை ஆழமாக பேசக்கூடிய அஸ்வின் நடுவர்களுக்கே சவால் கொடுக்கும் வகையில் அப்படி நடந்து கொண்டது ரசிகர்களை திரும்பி பார்க்க வைத்தது.

- Advertisement -

இந்நிலையில் டிஎன்பிஎல் தொடரை உலக அளவில் பிரபலப்படுத்தும் வகையில் அந்த தருணத்தில் ரவிச்சந்திரன் அஸ்வின் நடந்து கொண்டதாக முன்னாள் வீரர் ஆகாஷ் சோப்ரா விமர்சித்துள்ளார். குறிப்பாக முதல் தருணத்திலேயே சோதிக்கப்பட்ட போது அவுட் இல்லை என்று தெளிவாகத் தெரிந்தும் மீண்டும் ரிவ்யூ எடுத்தது தேவையற்றது என தெரிவிக்கும் அவர் இது பற்றி சமீபத்திய பேட்டியில் பேசியது பின்வருமாறு. “அஸ்வின் அண்ணாவின் சிறிய செய்கை டிஎன்பிஎல் தொடரை உலக வரைபடத்தில் கொண்டு வந்துள்ளது. அப்போட்டியில் மிகச் சிறப்பாக பவுலிங் செய்த அவர் விக்கெட்டுகளையும் எடுத்தார். மேலும் அந்த தருணத்தில் அவுட் கேட்ட போது நடுவரும் சாதகமாக தீர்ப்பு வழங்கினார்”

“அதனால் அஸ்வின் மற்றும் அவருடைய அணியினர் மகிழ்ச்சியடைந்தனர். ஆனால் பேட்ஸ்மேன் ரிவ்யூ எடுத்த போது 3வது நடுவர் சிறப்பாகவே செயல்பட்டார். குறிப்பாக விதிமுறைகளை பயன்படுத்தி அவர் கோணங்களையும் பேட்டில் அந்த சமயத்தில் பந்து உரசியதா என்பதையும் சரி பார்த்தார். இருப்பினும் அந்த குறிப்பிட்ட சமயத்தில் பந்து தரையில் உரசியதால் ஸ்பைக் ஏற்பட்டது. அதன் காரணமாக அவுட் இல்லை என்று அறிவித்த நடுவரின் முடிவு வரவேற்கத்தக்கது. ஆனால் அதை மீண்டும் அஸ்வின் ரிவ்யூ எடுத்ததை என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை”

இதையும் படிங்க:சென்னைல்லாம் ஒரு ஊராங்க, 2023 உலக கோப்பையில் விளையாட முடியாது – பாகிஸ்தான் புகார், கலாய்க்கும் ரசிகர்கள்

“எனவே டிஎன்பிஎல் நிர்வாக அதிகாரிகள் அது போன்ற மறு ரிவியூ எடுக்க முடியாது என்ற விதிமுறையை கொண்டு வர வேண்டும். ஏனெனில் நீங்கள் அதை செய்ய முடியாது. காரணம் நீங்கள் ரிவ்யூவை 15 நொடிகளுக்குள் எடுக்க வேண்டும். அத்துடன் நீங்கள் 3வது நடுவர் கொடுத்த தீர்ப்பை அவரையே மறுபரிசலனை செய்து மதிப்பிடுமாறு கேட்கிறீர்கள்” என்று கூறினார்.

Advertisement