உங்களுக்கு என்ன ஆச்சு? இது நமக்கு தெர்ஞ்ச அஸ்வினே இல்ல.. ஆகாஷ் சோப்ரா ஏமாற்றம்

Aakash Chopra 3
- Advertisement -

தங்களுடைய சொந்த மண்ணில் இங்கிலாந்துக்கு எதிராக நடைபெற்ற பெரும் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடரின் முதல் போட்டியில் இந்தியா தோல்வியை சந்தித்தது. இருப்பினும் இரண்டாவது போட்டியில் வெற்றி கண்ட இந்தியா தொடரை சமன் செய்துள்ளது. இந்த போட்டியில் கேப்டன் ரோஹித் சர்மா போன்ற நட்சத்திர வீரர்கள் சுமாராக செயல்படுவது இந்திய அணிக்கு பெரிய பின்னடைவாக அமைந்து வருகிறது.

இத்தொடரில் நட்சத்திர அனுபவ சீனியர் ஸ்பின்னர் ரவிச்சந்திரன் அஸ்வின் 2 போட்டிகளில் 9 விக்கெட்டுகளை எடுத்துள்ளார். அதையும் சேர்த்து இதுவரை 499 விக்கெட்களை எடுத்துள்ள அவர் அடுத்த போட்டியில் 500 விக்கெட்டைகளை எடுத்து சாதனை படைப்பார் என்று நம்பப்படுகிறது. சொல்லப்போனால் கடந்த போட்டியில் முதல் இன்னிங்ஸில் ஒரு விக்கெட் கூட எடுக்காமல் தடுமாறிய அவர் சிறப்பாக விளையாடியிருந்தால் இந்நேரம் அந்த சாதனையை படைத்திருப்பார் என்றே சொல்லலாம்.

- Advertisement -

தடுமாறும் அஸ்வின்:
இந்நிலையில் சொந்த மண்ணில் எப்போதுமே எதிரணிகளுக்கு இரு மடங்கு சவாலை கொடுக்கக்கூடிய அஸ்வின் இத்தொடரில் இதுவரை தடுமாற்றமாக செயல்பட்டு வருவதாக முன்னாள் வீரர் ஆகாஷ் சோப்ரா ஏமாற்றத்தை வெளிப்படுத்தியுள்ளார். பொதுவாக எதிரணியினர் ஸ்வீப், ரிவர்ஸ் ஸ்வீப் அடிக்கும் போது உடனடியாக தன்னுடைய திட்டத்தை மாற்றக்கூடிய அஸ்வின் இந்த தொடரில் பேட்ஸ்மேன்களிடம் அடி வாங்குவதாக ஆகாஷ் சோப்ரா கூறியுள்ளார்.

இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு. “ஹைதராபாத் நகரில் நடந்த முதல் போட்டியில் ஆச்சரியப்படும் வகையில் அஸ்வின் அடி வாங்கினார். பொதுவாக அது போன்ற சூழ்நிலையில் அஸ்வின் வித்தியாசமான விஷயங்களை முயற்சிப்பார். ஆனால் அதை ஹைதராபாத் போட்டியில் நம்மால் பார்க்க முடியவில்லை. குறிப்பாக ஓலி போப் ஸ்வீப், ரிவர்ஸ் ஸ்வீப் படிக்கும் போது அவர் தன்னுடைய கோணத்தை மாற்றி பந்து வீசவில்லை”

- Advertisement -

“மாறாக ஒரே வகையில் பந்து வீசியதால் அஸ்வின் அடி வாங்கினார். அது நமக்கு தெரிந்த அஸ்வின் கிடையாது. விசாகப்பட்டினத்தில் நடந்த போட்டியில் கூட முதல் இன்னிங்ஸில் அவர் விக்கெட் எடுக்கவில்லை. அப்போட்டியில் இரண்டாவது இன்னிங்ஸில் கம்பேக் கொடுத்தாலும் முதல் இன்னிங்ஸில் அவருடைய செயல்பாடுகள் பலவீனமாக இருந்தது”

இதையும் படிங்க: தரமான பிளேயர் தான்.. ஆனா அவர் இல்லாமையும் இந்திய அணியால் ஜெயிக்க முடியும்.. டேல் ஸ்டைன் கருத்து

“அதிகமாக சுழலுக்கு சாதகமான மைதானங்களில் விளையாடிய நீங்கள் பேட்டிங்க்கு சாதகமான மைதானத்தில் விளையாடும் போது திடீரென பேட்ஸ்மேன்கள் உங்களுக்கு எதிராக அதிரடியாக விளையாடுவார்கள். எனவே அதில் அசத்துவதற்கு நீங்கள் எதிர்பார்ப்பதை விட சிறப்பாக செயல்பட வேண்டும். விரைவில் 500 விக்கெட்டுகளை எடுக்கப் போகும் அஸ்வின் அவற்றை கையாள்வார் என்று எதிர்பார்க்கிறேன். ஆனால் உண்மையாக இந்த தொடரில் ரவிச்சந்திரன் அஸ்வின் இன்னும் உதயமாகவில்லை” என்று கூறினார்.

Advertisement