சுப்மன் கில் அடிச்ச செஞ்சுரியால இன்னொருத்தருக்கு கெட்ட காலம் பொறந்துடிச்சி – ஆகாஷ் சோப்ரா எச்சரிக்கை

Aakash-Chopra-and-Shubman-Gill
- Advertisement -

இந்தியா மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கு இடையேயான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதலாவது டெஸ்ட் போட்டியானது கடந்த 14-ஆம் தேதி சட்டகிராம் நகரில் துவங்கி நடைபெற்று வருகிறது. இந்த போட்டியின் இரண்டாவது இன்னிங்ஸில் இந்திய அணியின் இளம் துவக்க ஆட்டக்காரரான சுப்மன் கில் அசத்தலான ஆட்டத்தை வெளிப்படுத்தி 152 பந்துகளில் 10 பவுண்டரி மற்றும் 3 சிக்ஸர்கள் என 110 ரன்கள் குவித்து சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் தனது முதல் சதத்தை பதிவு செய்து அசத்தியுள்ளார்.

Shubman Gill

- Advertisement -

இந்த டெஸ்ட் தொடருக்கு முன்பாக நடைபெற்ற ஒருநாள் தொடரில் காயமடைந்த இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா டெஸ்ட் தொடரின் முதல் போட்டியில் விளையாட முடியாத சூழலில் அவருக்கு பதிலாக மாற்று வீரராக களமிறங்கிய சுப்மன் கில் முதல் இன்னிங்சில் 20 ரன்கள் எடுத்து ஏமாற்றத்தை அளித்து இருந்தாலும் இரண்டாவது இன்னிங்ஸில் தனது முதிர்ச்சியான ஆட்டத்தை வெளிப்படுத்தி டெஸ்ட் கிரிக்கெட்டில் தனது முதல் சதத்தை பதிவு செய்து அசத்தியுள்ளார்.

அவரது இந்த சிறப்பான ஆட்டத்தை தொடர்ந்து அவர் இந்திய டெஸ்ட் அணியின் நிரந்தர துவக்க வீரராக இனிவரும் போட்டிகளில் களம் இறக்கப்பட வேண்டும் என்று பலரும் அவரை பாராட்டி வருகின்றனர். இந்நிலையில் சுப்மன் கில் அடித்த இந்த சதமானது தற்போது கே.எல் ராகுலின் துவக்க வீரர் இடத்திற்கு ஆபத்தினை உண்டாக்கியுள்ளதாக இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் ஆகாஷ் சோப்ரா தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் கூறுகையில் :

KL Rahul

சுப்மன் கில் தற்போது சதம் அடித்து உள்ளதால் கே.எல் ராகுல் பெரிய பிரச்சினையில் சிக்கியுள்ளார். ஏனெனில் இந்த போட்டியின் முதல் இன்னிங்ஸில் 22 ரன்களை மட்டுமே எடுத்த அவர் இரண்டாவது இன்னிங்சிலும் 23 ரன்களை மட்டுமே அடித்தார். இப்படி அடுத்தடுத்து இரண்டு குறைந்த ஸ்கோரை அடித்துள்ளார். முதல் இன்னிங்ஸில் இன்சைடு எட்ஜ் மூலம் ஆட்டம் இழந்தார். அதனைத்தொடர்ந்து இரண்டாவது இன்னிங்ஸில் ஷார்ட் பாலுக்கு ஆட்டம் இழந்துள்ளார்.

- Advertisement -

ஆனால் அதேவேளையில் சுப்மன் கில் தனது மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி சதம் அடித்துள்ளார். இதன் காரணமாக ஒருவேளை ரோகித் அடுத்த போட்டிக்கு திரும்பினால் கே.எல் ராகுல் தான் கட்டாயம் பின் தள்ளப்படுவார். சுப்மன் கில் தனக்கு கிடைத்த அந்த துவக்க வீரர் வாய்ப்பை தற்போது இரு கைகளாலும் பற்றியுள்ளார் என்று நினைக்கிறேன். இது இந்திய அணிக்கு ஒரு ஆரோக்கியமான தலைவலியை உண்டாக்கும்.

இதையும் படிங்க : இந்திய வீரர் ஷர்துல் தாகூருக்கு விரைவில் திருமணம். என்ன தேதி? – அவரது காதல் மனைவி யார் தெரியுமா?

தற்போது அவர் விளையாடி வரும் விதத்தை பார்க்கும் போது நீண்ட தூரம் அவரால் இந்திய அணியில் பயணிக்க முடியும் என்று ஆகாஷ் சோப்ரா கூறியுள்ளார். மேலும் சமீப காலமாகவே சற்று மந்தமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் கே.எல் ராகுலுக்கு தற்போது சிறிது ஓய்வு தேவை என்றும் அவர் உள்ளூர் போட்டிகளில் பங்கேற்று சற்று சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய பின்னர் அவரை முதன்மை அணியில் தேர்வு செய்யலாம் என்பதும் சிலரது கருத்தாக உள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement