இந்திய வீரர் ஷர்துல் தாகூருக்கு விரைவில் திருமணம். என்ன தேதி? – அவரது காதல் மனைவி யார் தெரியுமா?

Shardul-Thakur
- Advertisement -

இந்திய அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளரான ஷர்துல் தாகூர் கடந்த 2017-ஆம் ஆண்டு இந்திய அணிக்காக அறிமுகமாகி இதுவரை 8 டெஸ்ட் போட்டிகள், 39 ஒருநாள் போட்டிகள் மற்றும் 25 டி20 போட்டிகளில் விளையாடியுள்ளார். 31 வயதாகும் ஷர்துல் தாகூர் இந்திய அணிக்காக தனது அபாரமான பந்துவீச்சை வெளிப்படுத்தியதோடு சிஎஸ்கே அணியிலும் சிறப்பாக செயல்பட்டதால் அவருடைய ரசிகர்கள் வட்டம் சற்று பெரிதானது என்று கூறலாம். இந்நிலையில் அவர் காதல் திருமணம் செய்ய இருப்பது தற்போது ரசிகர்கள் மத்தியில் பெரிய அளவு பேசப்படும் விடயமாக மாறியுள்ளது.

Shardul-Thakur

- Advertisement -

எப்போதுமே இந்திய கிரிக்கெட் வீரர்கள் தங்களது திருமணத்தை அறிவிக்கும் போது ரசிகர்கள் மத்தியில் அந்த விடயம் பெரிய வரவேற்பினை பெறும். ஏனெனில் கிரிக்கெட் பிரியர்கள் அதிகமாக இருக்கும் இந்திய நாட்டில் ஒரு கிரிக்கெட் வீரரின் திருமணம் என்பது சாதாரண ஒன்றாக இருக்காது. மிகப்பெரிய பரபரப்பை ஏற்படுத்தும் ஒரு விடயமாக இருக்கும்.

அந்த வகையில் தற்போது ஷர்துல் தாகூரின் திருமண அறிவிப்பு வெளியானதும் இந்த விடயமானது ரசிகர்கள் மத்தியில் அதிக அளவு கவனத்தை ஈர்த்துள்ளது. அந்த வகையில் அவர் திருமணம் செய்யப்போகும் அந்த காதலி யார்? எப்போது அவர்களின் திருமணம் எப்போது? குறித்த உறுதியான தகவல்கள் வெளியாகியுள்ளன.

Shardul Thakur 1

அந்த வகையில் மும்பையைச் சேர்ந்த “ஆல் தி பேக்ஸ்” என்ற நிறுவனத்தை நடத்தி வரும் மித்தாலி பருல்கர் என்பவருடன் நீண்ட கால நண்பராக இருந்து தற்போது காதல் ஜோடியாக திருமணம் செய்து கொள்ள இருக்கின்றனர். கடந்த நவம்பர் மாதம் மும்பையில் அவர்களுக்கு நிச்சயதார்த்தம் முடிந்த வேளையில் தற்போது அடுத்ததாக அவர்கள் பிப்ரவரி 27-ஆம் தேதி அவர்கள் திருமணம் செய்து கொள்ள இருப்பதாக உறுதி செய்துள்ளனர்.

- Advertisement -

இந்த திருமணமானது மும்பையில் உள்ள கர்ஜத்தில் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. முதலில் கோவாவில் ஒரு இடத்தில் திருமணம் செய்ய விரும்பினாலும் அங்கு இருக்கும் போக்குவரத்து சிக்கல் மற்றும் இதர பல காரணங்களால் இந்த திருமணம் அங்கு நடத்தப்படாமல் தற்போது மும்பையில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளதாக இருவரும் தெரிவித்துள்ளனர்.

இதையும் படிங்க : வீடியோ : சூறாவளி பயிற்சிகளை ஆரம்பித்த ஜஸ்பிரித் பும்ரா – மாஸ் கம்பேக் எப்போது? முழுவிவரம் இதோ

மேலும் பிப்ரவரி 24ஆம் தேதி வரை கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்கும் அவர் பிப்ரவரி 25-ஆம் தேதி திருமணம் நிகழ்ச்சியில் பங்கேற்று பிப்ரவரி 27-ஆம் தேதி அவர் திருமணம் செய்து கொள்கிறார் என்ற உறுதியான தகவல் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement