சூறாவளி பயிற்சிகளை ஆரம்பித்த ஜஸ்பிரித் பும்ரா – மாஸ் கம்பேக் எப்போது? முழுவிவரம் இதோ

- Advertisement -

இந்தியாவைச் சேர்ந்த நட்சத்திர கிரிக்கெட் வீரர் ஜஸ்பிரித் பும்ரா தற்சமயத்தில் 3 வகையான இந்திய அணியிலும் முதன்மை வேகப்பந்து வீச்சாளராக உருவெடுத்துள்ளார். உள்ளூர் கிரிக்கெட்டில் சிறப்பாக செயல்பட்டதால் கடந்த 2016ஆம் ஆண்டு சர்வதேச கிரிக்கெட்டில் அறிமுகமான அவர் தன்னுடைய வித்தியாசமான பவுலிங் ஆக்சனை வைத்து கிட்டத்தட்ட உலகின் அனைத்து பேட்ஸ்மேன்களையும் அதிரடியான வேகத்தால் திணறடித்து நிறைய வெற்றிகளை பெற்றுக் கொடுத்து இந்தியாவின் புதிய நம்பிக்கை நட்சத்திரமாக உருவெடுத்தார். அதனால் நல்ல திறமையும் தரமும் கொண்டுள்ள அவர் குறுகிய காலத்திலேயே இதர வீரர்களை பின்னுக்கு தள்ளி இந்தியாவின் நம்பர் ஒன் வேகப்பந்து வீச்சாளராக உருவெடுத்தார்.

குறிப்பாக டி20 கிரிக்கெட்டில் பவர் பிளே முதல் டெத் ஓவர்கள் வரை அனைத்து தருணங்களிலும் பந்து வீசும் திறமை பெற்ற அவர் யார்கர் பந்துகளால் போட்டியின் அனைத்து நேரங்களிலும் விக்கெட்டுகளை எடுத்து வெற்றியை இந்தியாவின் பக்கம் கொண்டு வரக்கூடிய கருப்பு குதிரையாக பார்க்கப்படுகிறார். அதனாலேயே உலகக் கோப்பை போன்ற முக்கிய தொடர்களில் விளையாட வேண்டும் என்பதற்காகவே சமீப காலங்களாகவே பணிச்சுமையை நிர்வகிக்கும் வகையில் முக்கியமற்ற தொடர்களில் அவருக்கு இந்திய அணி நிர்வாகம் தாமாக ஓய்வு கொடுத்து வருகிறது.

- Advertisement -

அந்த வகையில் இந்த வருடம் பெரும்பாலான தொடர்களில் ஓய்வெடுத்த அவர் ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற 2022 டி20 உலக கோப்பைக்கு முன்பாக கடைசி நேரத்தில் காயமடைந்து வெளியேறினார். அதனால் எதிர்பார்க்கப்பட்டது போலவே உலக கோப்பையில் இந்தியா ஏமாற்றத்துடன் நாக் அவுட் சுற்றில் தோற்று வெளியேறியது. குறிப்பாக இங்கிலாந்துக்கு எதிராக ஒரு விக்கெட்டை கூட எடுக்க முடியாத அளவுக்கு பந்து வீச்சு மோசமாக இருந்தது.

அதனால் அவர் இல்லாதது இந்தியாவின் தோல்விக்கு முக்கிய காரணமாக அமைந்த நிலையில் முதுகு பகுதியில் காயமடைந்த பும்ரா குணமடைவதற்கு 6 மாதங்கள் தேவைப்படும் என்ற செய்திகள் வெளியாகின. அதை அறிந்த ரசிகர்கள் நாட்டுக்காக இவர் காயமடைந்து விடுவார் ஆனால் அடுத்ததாக வழக்கம் போல 6 மாதங்கள் கழித்து 2023 ஐபிஎல் தொடர் துவங்கும் போது முழுமையாக குணமடைந்து மும்பை இந்தியன்ஸ் அணிக்காக விளையாடுவார் என்று சமூக வலைதளங்களில் சரமாரியாக விமர்சித்தார்கள்.

- Advertisement -

ஏனெனில் 2019 முதல் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக ஐபிஎல் தொடரில் ஒரு போட்டியை மட்டுமே தவற விட்ட அவர் அதே காலகட்டத்தில் இந்தியா விளையாடிய 70% டி20 போட்டிகளில் பங்கேற்காமல் ஓய்வெடுத்தார். இருப்பினும் யாராவது வேண்டுமென்று நாட்டுக்காக விளையாடாமல் காயமடைவார்களா? என்று அவருக்கு உண்மையான ஆதரவுகளும் குவிந்தன. இந்நிலையில் காயத்திலிருந்து குணமடைவதற்காக பெங்களூருவில் உள்ள தேசிய கிரிக்கெட் அகாடமியில் முகாமிட்டுள்ள பும்ரா தேவையான சிகிச்சைகளுக்கு பின் களத்தில் பயிற்சிகளை எடுக்க துவங்கியுள்ளார்.

தமக்கே உரித்தான வித்தியாசமான பௌலிங் ஆக்சனை வைத்து பந்து வீசத் துவங்கியுள்ள அவர் “முழு வேகத்தில்” என்ற தலைப்புடன் அந்த பயிற்சிகளை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அந்த வீடியோவை பார்த்து நிறைய இந்திய ரசிகர்கள் மிகவும் மகிழ்ச்சியடைந்துள்ளார்கள். ஏனெனில் தற்போது வங்கதேசத்துக்கு எதிராக நடைபெற்று வரும் டெஸ்ட் தொடரில் பங்கேற்க முடியாத அவர் அடுத்ததாக வரும் பிப்ரவரி மாதம் சொந்த மண்ணில் நடைபெறும் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான வரலாற்று சிறப்புமிக்க பார்டர் – கவாஸ்கர் கோப்பையில் களமிறங்குவதற்கு அதிக வாய்ப்புள்ளது.

இதையும் படிங்க:  ப்ரித்வி ஷா போன்று சுப்மன் கில் இந்த விடயத்தில் தவறு செய்ய மாட்டாரு – அஜய் ஜடேஜா நம்பிக்கை

தற்போது 2 – 0 (2) என்ற கணக்கில் வங்கதேச டெஸ்ட் தொடரை வென்றாக வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டுள்ள இந்தியா ஆஸ்திரேலியாவுக்கு எதிரான தொடரை குறைந்தபட்சம் 3 – 0 (4) என்ற கணக்கில் வென்றால் மட்டுமே 2023 ஜூன் மாதம் லண்டன் ஓவல் மைதானத்தில் நடைபெறும் டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கு தகுதி பெற முடியும். எனவே அதில் பும்ரா போன்ற முக்கிய பவுலர் பங்கேற்பது இந்தியாவின் வெற்றி வாய்ப்பை அதிகப்படுத்தும். அந்த நிலையில் தற்போது பயிற்சிகளை துவங்கியுள்ள அவர் நிச்சயமாக ஆஸ்திரேலிய தொடரில் களமிறங்கி கம்பேக் கொடுப்பார் என்று நம்பப்படுகிறது.

Advertisement