ப்ரித்வி ஷா போன்று சுப்மன் கில் இந்த விடயத்தில் தவறு செய்ய மாட்டாரு – அஜய் ஜடேஜா நம்பிக்கை

Ajay
- Advertisement -

இந்தியா மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதலாவது டெஸ்ட் போட்டி தற்போது பரபரப்பான சூழ்நிலையை எட்டியுள்ளது. ஏனெனில் இந்த போட்டியின் முதல் இன்னிங்ஸில் 404 ரன்களை குவித்த இந்திய அணியானது இரண்டாவது இன்னிங்ஸில் 258 ரன்களுக்கு டிக்ளேர் செய்தது. அதேபோன்று பங்களாதேஷ் அணி முதல் இன்னிங்சில் 150 ரன்களை அடித்த வேளையில் தற்போது இரண்டாவது இன்னிங்சில் 513 ரன்கள் அடித்தால் வெற்றி என்று இலக்கினை நோக்கி விளையாடி வருகிறது.

Shreyas-Iyer-1

- Advertisement -

அந்த வகையில் இன்றைய நான்காம் நாள் ஆட்டநேர முடிவில் பங்களாதேஷ் அணியானது ஆறு விக்கெட்டுகளை இழந்து 272 ரன்களை அடித்துள்ளதால் கடைசி நாள் ஆட்டத்தில் இந்திய அணி 4 விக்கெட்டுகளை கைப்பற்றினால் எளிதில் வெற்றி பெறும். அதே வேளையில் பங்களாதேஷ் அணி வெற்றிபெற 241 ரன்கள் தேவைப்படுகிறது.

இதனால் நாளைய கடைசி நாள் ஆட்டம் பெரும் சுவாரஸ்யத்தையும், எதிர்பார்ப்பையும் ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் இந்த போட்டியின் இரண்டாவது இன்னிங்சில் தனது அற்புதமான ஆட்டத்தை வெளிப்படுத்திய இந்திய அணியின் துவக்க வீரர் சுப்மன் கில் 152 பந்துகளில் 110 ரன்கள் குவித்து சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் தனது முதலாவது சதத்தை பதிவு செய்தார்.

Shubman Gill

அவரது இந்த அற்புதமான சதம் குறித்து பேசியுள்ள இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் அஜய் ஜடேஜா கூறுகையில் : டெஸ்ட் கிரிக்கெட்டில் சதம் என்பது ஒரு மிகப்பெரிய தருணம். இந்த ஸ்கோர் வெறும் ரன்கள் மட்டுமல்ல. ஒரு தேர்வில் தேர்ச்சி பெறுவதைப் போன்றது. இந்த சதம் அத்தகைய பெருமை வாய்ந்தது.

- Advertisement -

அவரது இந்த சதத்தின் மூலம் நேற்றைய ஆட்டத்தை காப்பாற்றியுள்ளார் என்று கூறலாம். இந்த சதத்தின் மூலம் அவரின் ஆட்டம் இன்னும் மேம்பட்டு இன்னும் பல சாதனைகளை புரிவார் என்று நம்புகிறேன்.

இதையும் படிங்க : 11 ஓவரில் 144 ரன்களை எரிமலையாக சேசிங் செய்த ஜெகதீசன், இயற்கையால் தமிழக வெற்றியை பறித்த ஹைதெராபாத் கேப்டன்

இவருடன் ஒரே சமயத்தில் இந்திய அணியில் நுழைந்த ப்ரித்திவி ஷா தன்னுடைய முதல் டெஸ்ட் போட்டியில் சதம் அடித்த பிறகு அதனை தொடர்ந்து அடுத்தடுத்து சொதப்பி அடுத்த கட்டத்துக்கு முன்னேற முடியாமல் சரிவை சந்தித்தார். ஆனால் சுப்மன் கில் எந்த ஒரு தவறையும் செய்யாமல் சொதப்பாமல் நிச்சயம் அடுத்தடுத்த கட்டங்களுக்கு நகர்வார் என நம்புவதாக அஜய் ஜடேஜா கூறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement