- Advertisement -
இந்திய கிரிக்கெட்

சஞ்சு சாம்சன் நல்லாதான் ஆடுறாரு. ஆனாலும் அவர்கிட்ட பெரிய மைனஸ் இருக்கு – ஆகாஷ் சோப்ரா ஓபன்டாக்

இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு இடையே நடைபெற்று முடிந்த முதலாவது ஒருநாள் போட்டியில் 250 ரன்கள் என்கிற இலக்கினை துரத்திய இந்திய அணியானது இறுதிவரை போராடி 240 ரன்கள் குவித்து ஒன்பது ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது. இந்த போட்டியில் இந்திய அணி சார்பாக இறுதிவரை நின்று போராடிய சஞ்சு சாம்சங் 63 பந்துகளில் 89 ரன்கள் அடித்து அசத்தியிருந்தார். அதில் 9 பவுண்டரிகளும், 3 சிக்ஸர்களும் அடக்கம்.

சமீப காலமாகவே டி20 போட்டிகளில் மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் சஞ்சு சாம்சனுக்கு டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் வாய்ப்பு மறுக்கப்பட்டது. அதனை தொடர்ந்து ரசிகர்கள் அவருக்கு ஆதரவாக குரல்களை எழுப்பி வந்த வேளையில் அவருக்கு இந்திய ஏ அணியில் விளையாடும் வாய்ப்பு கிடைத்தது.

- Advertisement -

அதோடு மட்டுமின்றி தற்போது ஷிகார் தவான் தலைமையிலான இந்திய அணியிலும் இடம் கிடைத்தது. அதனை சரியாக பயன்படுத்திய சஞ்சு சாம்சன் தென்னாப்பிரிக்க அணிக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் அற்புதமான ஆட்டத்தை வெளிப்படுத்தியுள்ளார். கடந்த பல ஆண்டுகளாகவே மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் அவர் இந்திய அணியில் நிரந்தர இடம் பிடிக்க வேண்டும் என்று அனைவரும் கூறிவருகின்றனர்.

இவ்வேளையில் இந்திய அணியின் முன்னாள் வீரரான ஆகாஷ் சோப்ரா சஞ்சு சாம்சன் பேட்டிங்கில் செய்யும் ஒரு சிறிய தவறினை சுட்டிக்காட்டி பேசி உள்ளார். இது குறித்து அவர் கூறுகையில் : சஞ்சு சாம்சன் உண்மையில் மிகச் சிறப்பாகவே பேட்டிங் செய்கிறார். அவர் பாராட்டுதலுக்கு தகுதியானவர். ஆனாலும் அவரது பேட்டிங்கில் சிறிய குறையும் உள்ளது.

- Advertisement -

பல்வேறு மாநிலங்களிலும் அவருக்கு ரசிகர்கள் இருக்கிறார்கள். சமீபகாலமாகவே அவர் மிகச்சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்தாலும் அவர் பேட்டிங் செய்யும்போது கால்கள் போதிய அளவிற்கு நகர்வது இல்லை. ஆனாலும் அதை சமாளித்து நன்றாக ரன்களை குவிக்கிறார். இருப்பினும் அவருடைய கால் நகராதது எளிதில் அவருடைய விக்கெட்டை இழக்கவும் வாய்ப்பளிக்கும்.

இதையும் படிங்க : டி20 உ.கோ விட அந்த தொடருக்கு வீரர்களை தேர்வு செய்யறது தான் ரொம்ப கஷ்டம் – வி.வி.எஸ் லக்ஷ்மணன்

எனவே அந்த ஒரு குறையை அவர் நிவர்த்தி செய்தால் பெரிய வீரராக மாறுவார். அதே போன்று முதல் ஒருநாள் போட்டியின் போது கடைசி கட்டத்தில் ஆவேஷ் கானிடம் 5 பந்துகளை கொடுக்காமல் அவரே பேட்டிங் செய்திருந்தால் நிச்சயம் இந்திய அணி அந்த ஒன்பது ரன்களையும் சேர்த்து வெற்றிக்கு சென்றிருக்கும். அந்த தவறை சஞ்சு சாம்சன் செய்துவிட்டார் என ஆகாஷ் சோப்ரா கூறியது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -
Published by