- Advertisement -
உலக கிரிக்கெட்

பாகிஸ்தான் டீமோட வீக்னஸ்ஸே அவருதான். அவருக்கு ஸ்பின் விளையாட தெரியாது – ஆகாஷ் சோப்ரா கருத்து

இந்தியாவில் எதிர்வரும் அக்டோபர் மற்றும் நவம்பர் மாதங்களில் ஐசிசி-யின் 50 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரானது நடைபெற உள்ளது. கடந்த 2011 ஆம் ஆண்டிற்கு பிறகு இந்தியாவில் முழுக்க முழுக்க இந்த தொடர் நடைபெற இருப்பதினால் இந்த தொடரின் மீதான எதிர்பார்ப்பு இந்திய ரசிகர்கள் மத்தியில் உச்சத்தை தொட்டுள்ளது. அதே வேளையில் இந்த தொடர்களில் கலந்து கொள்ளும் அனைத்து அணிகளும் தங்களது அணியின் வீரர்களை தற்போது தீவிரமாக தேர்வு செய்து வருகின்றனர்.

அந்த வகையில் இந்தியாவில் நடைபெற இருக்கும் இந்த உலகக் கோப்பை தொடரில் தங்களது ஆதிக்கத்தை செலுத்த வேண்டும் என்கிற முனைப்புடன் பாகிஸ்தான் அணியும் தங்களது அணியின் வீரர்களை தயார்படுத்தி வருகிறது. எதிர்வரும் ஆசிய கோப்பை தொடரில் இந்திய அணியை எதிர்த்து விளையாட இருக்கும் பாகிஸ்தான அணி அதன் பிறகு இந்தியாவில் நடைபெறவுள்ள இந்த 50 ஓவர் உலக கோப்பையில் கலந்து கொள்ள இருக்கிறது.

- Advertisement -

ஏற்கனவே இந்த உலகக் கோப்பை தொடருக்கான அட்டவணை வெளியாகியதில் இருந்தே இந்திய மண்ணில் நிச்சயம் நாங்கள் வெற்றி பெற முயற்சிப்போம் என பல்வேறு பாகிஸ்தான் முன்னாள் வீரர்களும் தங்களது கருத்துக்களை தெரிவித்து வரும் வேளையில் தற்போது பாகிஸ்தான அணியில் இடம் பெற்றுள்ள வீரரான பக்கர் சமான் அந்த அணியின் வீக்னஸ் என இந்திய அணியின் முன்னாள் வீரரான ஆகாஷ் சோப்ரா தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் கூறுகையில் : பக்கர் சமான் ஆசிய மைதானங்களில் தடுமாறக்கூடிய ஒரு பேட்ஸ்மேன் தான். ஏனெனில் இதுவரை அவர் 72 போட்டியில் விளையாடி 3000 ரன்களுக்கு மேல் மட்டுமே அடித்துள்ளார்.

- Advertisement -

அதோடு ஆசிய மைதானங்களில் சுழற்பந்துவீச்சு மிகவும் எடுபடும் என்பதனால் சுழற்பந்துவீச்சுக்கு எதிராக தடுமாற்றத்துடன் விளையாடும் அவர் இந்த உலகக் கோப்பை தொடரில் பாகிஸ்தான் அணியின் வீக்னஸ் ஆகவே இருப்பார். ஏனெனில் பலமுறை அவர் சுழற்பந்து வீச்சுக்கு எதிராக எளிதாக தனது விக்கெட்டை இழந்திருக்கிறார் என்று ஆகாஷ் சோப்ரா கூறினார்.

இதையும் படிங்க : PAK vs AFG : ஆப்கானிஸ்தானை அடியோடு சாய்த்த பாகிஸ்தான் – ஆஸ்திரேலியாவை முந்தி உலகின் மாஸ் அணியாக சாதனை

மேலும் தொடர்ந்து பேசிய அவர் : அதே வேளையில் இமாம் உல் ஹக் மற்றும் பாபர் அசாம் ஆகியோர் ஒருநாள் கிரிக்கெட்டில் மிகச் சிறந்த வீரர்கள் அதுமட்டுமின்றி அவர்களிடம் சதாப் கான், முகமது நவாஸ் போன்ற பேட்டிங் தெரிந்த சுழற்பந்து வீச்சாளர்களும் இருப்பது அந்த அணிக்கு பலம் என ஆகாஷ் சோப்ரா தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -
Published by