PAK vs AFG : ஆப்கானிஸ்தானை அடியோடு சாய்த்த பாகிஸ்தான் – ஆஸ்திரேலியாவை முந்தி உலகின் மாஸ் அணியாக சாதனை

PAK vs AFG 6
- Advertisement -

விரைவில் நடைபெறும் 2023 ஆசிய மற்றும் உலகக் கோப்பைக்கு தயாராகும் வகையில் பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணிகள் இலங்கையில் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடரில் மோதின. அதில் முதல் போட்டியில் தங்களை 201 ரன்களுக்கு கட்டுப்படுத்திய ஆப்கானிஸ்தானை வெறும் 59 ரன்களுக்கு சுருட்டி அபார வெற்றி பெற்ற பாகிஸ்தான் 2வது போட்டியிலும் போராடி 1 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது. குறிப்பாக அந்த போட்டியில் 300 ரன்கள் அடித்து சிறப்பாக பந்து வீசி போராடிய ஆப்கானிஸ்தான் கடைசி நேரத்தில் சர்ச்சை ஏற்படும் அளவுக்கு சடாப் கானை மன்கட் செய்தும் இறுதியில் நசீம் ஷா 10* (5) ரன்கள் அடித்து வெற்றியை பறித்தார்.

PAk vs AFg 3

- Advertisement -

அதனால் ஆரம்பத்திலேயே கோப்பையை கைப்பற்றிய பாகிஸ்தான் ஆகஸ்ட் 26ஆம் தேதி ஹம்பன்தோட்டாவில் இந்திய நேரப்படி மதியம் 3 மணிக்கு நடைபெற்ற சம்பிரதாய கடைசி போட்டியிலும் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது. அதைத்தொடர்ந்து களமிறங்கிய அந்த அணி 50 ஓவர்களில் போராட்டமான பேட்டிங்கை வெளிப்படுத்தி 268/8 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக கேப்டன் பாபர் அசாம் 60, முகமது ரிஸ்வான் 67, சல்மான் ஆஹா 38* என முக்கிய பேட்ஸ்மேன்கள் தேவையான ரன்களை எடுக்க ஆப்கானிஸ்தான் சார்பில் அதிகபட்சமாக குல்பதின் நைப் மற்றும் பரீத் அஹ்மத் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை சாய்த்தனர்.

புதிய மாஸ் அணி:
அதை தொடர்ந்து களமிறங்கிய ஆப்கானிஸ்தான் மீண்டும் பாகிஸ்தானின் தரமான பந்து வீச்சுக்கு தாக்குப் பிடிக்க முடியாமல் ஆரம்ப முதலே சீரான இடைவெளிகளில் விக்கெட்டுகளை இழந்து 48.4 ஓவரில் வெறும் 209 ரன்கள் மட்டுமே எடுத்து போராடி தோற்றது. குறிப்பாக அந்த அணிக்கு ரகமதுள்ளா குர்பாஸ் 5, இப்ராஹிம் ஜாட்ரான் 0, கேப்டன் ஷாகிதி 13 என முக்கிய வீரர்கள் பெரிய ரன்களை எடுக்க தவறிய நிலையில் அதிகபட்சமாக கடைசி நேரத்தில் போராடிய முஜீப் உர் ரகுமான் அதிரடியாக 64 (37) ரன்கள் எடுத்தார்.

Moahmmed Rizwan

மறுபுறம் மீண்டும் தங்களுடைய சிறப்பான பவுலிங்கை பயன்படுத்தி 59 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி கண்ட பாகிஸ்தான் சார்பில் அதிகபட்சமாக சடாப் கான் 3 விக்கெட்களையும் ஷாஹின் அப்ரிடி, பஹிம் அஸ்ரப், முகமது நவாஸ் ஆகியோர் தலா 2 விக்கெட்களையும் சாய்த்தனர். அப்படி இந்த தொடரில் ஆரம்பம் முதலே கடுமையாக போராடிய ஆப்கானிஸ்தானை தங்களுடைய பலத்தால் அடியோடு வீழ்த்திய பாகிஸ்தான் 3 – 0 (3) என்ற கணக்கில் ஒயிட்வாஷ் வெற்றியுடன் கோப்பையை முத்தமிட்டது.

- Advertisement -

அதை விட இந்த அடுத்தடுத்த வெற்றிகளால் ஐசிசி ஒருநாள் தரவரிசையில் உலகின் புதிய நம்பர் ஒன் அணியாகவும் முன்னேறி பாகிஸ்தான் சாதனை படைத்துள்ளது. குறிப்பாக கடந்த போட்டியில் வென்றதால் ஆஸ்திரேலியா பெற்றிருந்த 118 புள்ளிகளை பெற்ற பாகிஸ்தான் முதலிடத்தை பகிர்ந்து கொண்டிருந்தது. ஆனால் தற்போது இந்த போட்டியில் வென்றதால் ஆஸ்திரேலியாவை ரேட்டிங் புள்ளிகள் அடிப்படையில் முந்தியுள்ள பாகிஸ்தான் அதிகாரப்பூர்வமாக உலகின் நம்பர் ஒன் அணியாக சாதனை படைத்துள்ளது.

Pak Shadab Khan

இதையும் படிங்க:தற்போதைக்கு இந்திய அணியில் அவருக்கு இடம் கொடுக்காததது சரியான முடிவு தான் – டேனிஷ் கனேரியா கருத்து

அதற்கு ஐசிசியும் வாழ்த்து தெரிவித்துள்ள நிலையில் ஒருநாள் போட்டிகளாக நடைபெறும் 2023 ஆசிய மற்றும் உலகக் கோப்பையில் உலகின் நம்பர் ஒன் அணியாக பாகிஸ்தான் களமிறங்க உள்ளது. அந்த வகையில் இந்தியா போன்ற எதிரணிகளுக்கு இப்போதே தாங்கள் கோப்பையை வெல்லப்போகும் பலமான அணி என்பதை காட்டும் வகையில் பாகிஸ்தான் செயல்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement