IND vs AFG : நியாயப்படி பாத்தா ரோஹித்துக்கு ஆட்டநாயகனே கிடையாது – ஆகாஷ் சோப்ரா கருத்து

Aakash-Chopra
- Advertisement -

இந்தியா மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையேயான உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் 9-ஆவது லீக் ஆட்டமானது நேற்று டெல்லி நகரில் நடைபெற்று முடிந்தது. இந்த போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த ஆப்கானிஸ்தான அணியானது நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களின் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்து 272 ரன்கள் குவித்து ஓரளவு சிறப்பான செயல்பாட்டை வெளிப்படுத்தியது.

பின்னர் 273 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய இந்திய அணி துவக்கத்திலிருந்தே அதிரடியாக விளையாடி 35 ஓவர்களில் இரண்டு விக்கெட்டுகளை மட்டும் இழந்து 273 ரன்கள் குவித்து 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

- Advertisement -

இந்த போட்டியில் இந்திய அணி சார்பாக சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய ரோஹித் சர்மா 84 பந்துகளை சந்தித்து 16 பவுண்டரி மற்றும் 5 சிக்ஸர்கள் என 131 ரன்கள் குவித்து அசத்தினார். அவரது இந்த சிறப்பான ஆட்டம் காரணமாக இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மாவிற்கு ஆட்டநாயகன் விருது வழங்கப்பட்டது.

இந்நிலையில் நேற்றைய இந்த போட்டியில் ரோகித் சர்மாவிற்கு ஆட்டநாயகன் விருது வழங்கப்பட்டதை விட பம்ராவிற்கு வழங்கியிருந்தால் தான் சரியாக இருந்திருக்கும் என இந்திய அணியின் முன்னாள் வீரரான ஆகாஷ் சோப்ரா தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் கூறுகையில் :

- Advertisement -

என்னை பொருத்தவரை பும்ராவிற்கு தான் ஆட்டநாயகன் விருதினை வழங்கிருக்க வேண்டும் என்று கூறுவேன். ஏனெனில் தார் ரோடு போல இருந்த இந்த ஆடுகளத்தில் பந்துவீச்சாளர்கள் யாரும் பந்துவீசவே விரும்ப மாட்டார்கள். அப்படிப்பட்ட இந்த மைதானத்தில் பும்ரா புதிய பந்தில் விக்கெட்டை எடுத்தார். அதேபோன்று கடைசி கட்டத்திலும் விக்கெட்டுகளை கைப்பற்றினார்.

இதையும் படிங்க : CWC 2023 : சேவாக் மாதிரியே ஆடுறாரு.. இந்திய அணிக்காக ரோஹித் அதை நிறைய தியாகம் பண்ணிட்டாரு.. கவாஸ்கர் பாராட்டு

அதிலும் குறிப்பாக இந்த மைதானத்தில் 10 ஓவர் வீசி 39 ரன்களை மட்டுமே விட்டுக்கொடுத்து 4 விக்கெட்டை வீழ்த்துவது எல்லாம் பெரிய விடயம். எனவே என்னை பொறுத்தவரை பும்ரா தான் இந்த போட்டியின் ஆட்டநாயகன் என ஆகாஷ் சோப்ரா கூறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement