CWC 2023 : சேவாக் மாதிரியே ஆடுறாரு.. இந்திய அணிக்காக ரோஹித் அதை நிறைய தியாகம் பண்ணிட்டாரு.. கவாஸ்கர் பாராட்டு

Sunil Gavaskar 2
- Advertisement -

பரபரப்பாக நடைபெற்று வரும் ஐசிசி உலகக் கோப்பை 2023 கிரிக்கெட் தொடரில் சொந்த மண்ணில் 2011 போல கோப்பையை வெல்லும் முனைப்புடன் விளையாடி வரும் ரோகித் சர்மா தலைமையிலான இந்தியா 2 போட்டிகளில் 2 வெற்றிகளை பதிவு செய்துள்ளது. குறிப்பாக நேற்று ஆப்கானிஸ்தானுக்கு எதிராக டெல்லியில் நடைபெற்ற போட்டியில் 8 விக்கெட் வித்தியாசத்தில் வென்ற இந்தியா புள்ளி பட்டியலில் 2வது இடத்திற்கு முன்னேறியது.

அப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ஆப்கானிஸ்தான் நிர்ணயித்த 273 ரன்களை துரத்திய இந்தியாவுக்கு கேப்டன் ரோகித் சர்மா அதிரடியாக விளையாடி 16 பவுண்டரி 5 சிக்சருடன் 131(16) ரன்கள் குவித்து 35 ஓவரிலேயே எளிதாக வெற்றி பெற உதவினார். அத்துடன் உலகக்கோப்பையில் அதிக சதங்கள் அடித்த வீரர், வேகமாக 100 ரன்கள் தொட்ட இந்திய வீரர், சர்வதேச கிரிக்கெட்டில் அதிக சிக்ஸர்கள் அடித்த வீரர் போன்ற நிறைய சாதனைகளையும் அவர் படைத்தார்.

- Advertisement -

கவாஸ்கர் பாராட்டு:
மேலும் சமீப காலங்களில் தடுமாற்றமாக செயல்பட்டு விமர்சனத்திற்குள்ளான அவர் கடந்த ஜனவரிக்கு பின் ஒருநாள் கிரிக்கெட்டில் முதல் முறையாக சதமடித்து முக்கிய நேரத்தில் நல்ல ஃபார்முக்கும் திரும்பியுள்ளது இந்திய அணியை வலுப்படுத்துவதாக அமைகிறது. இந்நிலையில் எப்போதுமே நல்ல துவக்கத்தை பெறும் ரோகித் சர்மா 60, 70 ரன்களை கடந்ததும் வீரேந்திர சேவாக் போல் அதிரடியை குறைக்காமல் அணியின் நலனுக்காக அதே வேகத்தில் விளையாடி நிறைய சதங்களை தியாகம் செய்ததாக சுனில் கவாஸ்கர் பாராட்டியுள்ளார்.

அதாவது 70, 80 ரன்கள் தொட்டதும் சதத்தை பற்றி கவலைப்பட்டு மெதுவாக விளையாடாமல் அணியின் நலனுக்காக தொடர்ந்து அதே வேகத்தில் விளையாடும் ரோஹித் நல்ல துவக்கத்தை கொடுத்து வருவதாக தெரிவிக்கும் அவர் இது பற்றி ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சியில் பேசியது பின்வருமாறு. “அவர் சதமடித்ததற்காக நான் மகிழ்ச்சியடைகிறேன். ஏனெனில் அவர் நிறைய சதங்களை தவற விட்டுள்ளார். ஏனெனில் அவர் ரிஸ்க் எடுத்து விளையாடுகிறார்”

- Advertisement -

“அதாவது அரை சதமடித்து 60, 70 ரன்களை கடந்தாலும் அணியின் நலனுக்காக நல்ல துவக்கத்தை கொடுப்பதற்காக அவர் தொடர்ந்து அதே வேகத்தில் விளையாடுகிறார். எடுத்துக்காட்டாக இன்று 8 என்ற ரன்ரேட்டில் இந்தியா இலக்கை ஏற்றுவதற்கு அவர் உதவினார். அந்த வகையில் அதிக ஸ்ட்ரைக் ரேட்டில் விளையாடுவது உங்களின் ரன் ரேட்டை அதிகரிக்க உதவும். அந்த புள்ளிகள் தான் நீங்கள் செமி ஃபைனலுக்கு தகுதி பெறவும் உதவும்”

இதையும் படிங்க: CWC 2023 : 50 ஆவரேஜ்.. சச்சினை மீண்டும் முந்திய கிங் கோலி.. ஐசிசி தொடர்களில் தனித்துவ உலக சாதனை

“எனவே அந்த நோகத்திற்காக விளையாடும் ரோகித் சில சதங்களை தவற விட்டுள்ளார். ஆனால் இன்று நம்மை மகிழ்வித்த அவர் அடித்த சில சிக்ஸர்கள் நம்ப முடியாததாக இருந்தது. வீரேந்திர சேவாக்கும் இதே போல விளையாடுவார். குறிப்பாக 60, 70, 80 ரன்கள் கடந்தாலும் அதிரடியை நிறுத்தாமல் விளையாடுவார். தற்போது ஜனவரிக்கு பின் அவர் சதமடித்துள்ளதற்காக மகிழ்ச்சியடைகிறேன். அது இந்தியாவுக்கும் அவசியமாகும். அவர் கொடுக்கும் நல்ல துவக்கத்தாலேயே இந்தியா பெரிய ஸ்கோர் குவிக்கிறது” என்று கூறினார்.

Advertisement