CWC 2023 : 50 ஆவரேஜ்.. சச்சினை மீண்டும் முந்திய கிங் கோலி.. ஐசிசி தொடர்களில் தனித்துவ உலக சாதனை

Virat Kohli 55
- Advertisement -

ஐசிசி உலக கோப்பை 2023 கிரிக்கெட் தொடரில் அக்டோபர் 11ஆம் தேதி நடைபெற்ற 9வது லீக் போட்டியில் ஆப்கானிஸ்தானை 8 விக்கெட் வித்தியாசத்தில் தோற்கடித்த இந்தியா தங்களின் 2வது வெற்றியை பதிவு செய்து புள்ளி பட்டியலில் 2வது இடத்திற்கு முன்னேறியது. டெல்லியில் நடைபெற்ற அப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ஆப்கானிஸ்தான் சராசரியான ஆட்டத்தை வெளிப்படுத்தி 50 ஓவரில் 272/8 ரன்கள் மட்டுமே எடுத்தது.

அதிகபட்சமாக கேப்டன் ஷாகிதி 80 ரன்கள் எடுக்க இந்தியா சார்பில் அதிகபட்சமாக 4 பும்ரா விக்கெட்டுகளை எடுத்தார். அதைத்தொடர்ந்து 273 ரன்களை துரத்திய இந்தியாவுக்கு கேப்டன் ரோகித் சர்மா சரவெடியாக விளையாடி 16 பவுண்டரி 5 சிக்சருடன் சதமடித்து 131 (84) ரன்கள் குவித்தார். அவருடன் இசான் கிசான் 47, விராட் கோலி 55* ஸ்ரேயாஸ் 25* ரன்கள் எடுத்ததால் 35 ஓவரிலேயே இந்தியா எளிதான வெற்றி பெற்றது.

- Advertisement -

கிங் கோலியின் சாதனை:
அதன் காரணமாக ரசித் கான் 2 விக்கெட்டுகள் எடுத்தும் ஆப்கானிஸ்தானால் வெற்றி காண முடியவில்லை. முன்னதாக இப்போட்டியில் இந்தியாவை வெற்றி பெற வைத்து நிறைய உலக சாதனைகளை படைத்த ரோகித் சர்மா ஆட்டநாயகன் விருதையும் வென்றார். அதே போல இப்போட்டியில் 55* ரன்கள் அடித்த விராட் கோலி ஒருநாள் கிரிக்கெட்டில் வெற்றிகரமாக சேசிங் செய்யப்பட்ட போட்டியில் அதிக முறை 50க்கும் மேற்பட்ட ரன்களை அடித்த வீரர் என்ற சச்சினின் சாதனையை தகர்த்து உலக சாதனை படைத்தார்.

அந்த பட்டியல் விரிவான பட்டியல்:
1. விராட் கோலி : 46*
2. சச்சின் டெண்டுல்கர் : 45
3. ரோஹித் சர்மா : 38*
4. ஜேக் காலிஸ்/ரிக்கி பாண்டிங் : தலா 37
5. ஆடம் கில்கிறிஸ்ட் : 33

- Advertisement -

அத்துடன் 50 ஓவர் ஐசிசி உலகக்கோப்பையில் 1138 ரன்கள் எடுத்துள்ள விராட் கோலி டி20 உலக கோப்பையில் 1141 ரன்கள் எடுத்துள்ளார். இதன் வாயிலாக 50 ஓவர் மற்றும் 20 ஓவர் ஆகிய 2 வகையான ஐசிசி உலக கோப்பை தொடர்களில் அதிக ரன்கள் அடித்த வீரர் என்ற சச்சின் டெண்டுல்கரின் சாதனையை தகர்த்த அவர் மற்றுமொரு புதிய உலக சாதனை படைத்துள்ளார். அந்த பட்டியல் (ரன்கள்):
1. விராட் கோலி : 2279*
2. சச்சின் டெண்டுல்கர் : 2278
3. குமார் சங்ககாரா : 2193

இதையும் படிங்க: CWC 2023 : கைகொடுத்த விராட் கோலி – நவீன்.. நெகிழ்ச்சியுடன் நேரலையில் வர்ணித்த கம்பீர்.. முக்கிய கோரிக்கை

அது போக 50 ஓவர் உலகக் கோப்பையில் 50.86 பேட்டிங் சராசரியை கொண்டுள்ள விராட் கோலி சாம்பியன்ஸ் டிராபியில் 88.16 சராசரியும் டி20 உலக கோப்பையில் 81.50 சராசரியும் கொண்டுள்ளார். இதன் வாயிலாக 3 விதமான ஐசிசி வெள்ளைப்பந்து தொடர்களில் தலா 50க்கும் மேற்பட்ட பேட்டிங் சராசரியை கொண்ட ஒரே வீரர் என்ற தனித்துவமான உலக சாதனையும் விராட் கோலி படத்துள்ளார். அவரை தவிர்த்து வேறு எந்த வீரரும் 3 விதமான ஐசிசி வெள்ளைப்பந்து தொடரில் 50 சராசரியை கொண்டிருக்கவில்லை.

Advertisement