இந்தியாவுக்கு எதிராக இன்னும் பாபர் அசாம் ஒரு அரை சதம் கூட அடிக்கல – பாகிஸ்தானுக்கு முன்னாள் இந்திய வீரர் மாஸ் பதிலடி

Babar Azam Bowled 2
- Advertisement -

ஆசிய கோப்பை 2023 கிரிக்கெட் தொடரில் செப்டம்பர் 10ஆம் தேதி நடைபெறும் முக்கியமான சூப்பர் 4 போட்டியில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோத உள்ளன. இந்த போட்டியில் சிறப்பாக செயல்பட்டு வெற்றி வாகை சூடி ஃபைனலுக்கு தகுதி பெறுவதற்கான வாய்ப்பை அதிகரிக்க இரு அணிகளும் முழு மூச்சுடன் போராடும் என்பதால் ரசிகர்களிடம் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. அதில் தற்சமயத்தில் உலகின் நம்பர் ஒன் அணியாக இருக்கும் பாகிஸ்தான் ஹரிஷ் ரவூப், ஷாஹீன் அப்ரிடி, நாசீம் ஷா போன்ற அதிரடியான வேகப்பந்து வீச்சாளர்களால் பவுலிங் துறையில் மிகவும் வலுவான அணியாக திகழ்கிறது.

இருப்பினும் அந்த அணியின் பேட்டிங் துறையில் கேப்டன் பாபர் அசாம் மற்றும் முகமது ரிஸ்வான் ஆகியோர் சிறப்பாக செயல்பட்டால் தான் வெற்றி காண முடியும் என்ற நிலைமை இருக்கிறது என்றே சொல்லலாம். அதற்கு எடுத்துக்காட்டாக இதே தொடரின் லீக் சுற்றில் நேபாளுக்கு எதிரான போட்டியில் பகார் ஜமான், இமாம் போன்ற முக்கிய பேட்ஸ்மேன்கள் ஏமாற்றத்தை கொடுத்த போது தடுமாறிய பாகிஸ்தானை பாபர் அசாம் தான் 151 ரன்கள் அடித்து காப்பாற்றியதை பயன்படுத்தி கடைசியில் இப்திகார் அகமதும் சதமடித்து பெரிய இலக்கை நிர்ணயிக்க உதவினார்.

- Advertisement -

அரை சதம் அடிக்கல:
ஆனாலும் பாகிஸ்தான் அளவுக்கு நெருப்பாக இல்லாத இந்திய பவுலர்களை சமாளித்து பெரிய ரன்கள் அடிப்பதற்கு பாபர் அசாம் மட்டுமே போதும் என்று அந்நாட்டு ரசிகர்கள் மற்றும் முன்னாள் வீரர்கள் சர்வ சாதாரணமாக பேசி வருகின்றனர். இந்நிலையில் ஒருநாள் கிரிக்கெட்டில் இத்தனை வருடங்கள் கழித்தும் இந்தியாவுக்கு எதிராக ஒரு அரை சதம் கூட அடிக்காத பாபர் அசாமை வழக்கம் போல முன்கூட்டியே அவுட்டாக்கினாலே பாகிஸ்தானின் பேட்டிங் துறையை கட்டுப்படுத்தி விடலாம் என்று முன்னாள் வீரர் ஆகாஷ் சோப்ரா தெரிவித்துள்ளார்.

இது பற்றி தனது யூடியூப் பக்கத்தில் அவர் பேசியது பின்வருமாறு. “பாகிஸ்தான் பேட்டிங் வரிசையில் பஃகார் ஜமான் இன்னும் ரன்கள் அடிக்கவில்லை. எனவே பாகிஸ்தானை சமாளிப்பதற்கு நீங்கள் அவர் மீது தொடர்ந்து அழுத்தத்தை ஏற்படுத்த வேண்டும். இருப்பினும் தற்போது முன்னேற்றத்தை கண்டு வரும் அவர்கள் உலகக் கோப்பை செமி ஃபைனலுக்கு தகுதி பெற்றதை மறக்கக்கூடாது. அதனால் நாம் ஃபைனலுக்கு சென்றால் அவர்களும் வருவார்கள்”

- Advertisement -

“எனவே நீங்கள் அவர்களின் ஒரு முக்கிய வீரருக்கு எதிராக எப்போதுமே உங்கள் கையை ஓங்கி வைத்திருக்க வேண்டும். குறிப்பாக ஒருநாள் கிரிக்கெட்டில் இதுவரை இந்தியாவுக்கு எதிராக ஒரு அரை சதம் கூட அடிக்காத பாபர் அசாம் மீது தொடர்ந்து அழுத்தத்தை போட வேண்டும். அதே போல இமாம்-உல்-ஹக் போன்றவருக்கும் ஆரம்பத்திலேயே நீங்கள் அழுத்தத்தை கொடுத்தால் அது முகமது ரிஸ்வான், இப்திகார் அகமது, ஆஹா சல்மான் ஆகியோரை தடுமாற வைக்கும்” என்று கூறினார்.

இதையும் படிங்க: ரசிகர்களின் கண்துடைச்சு ஏமாத்துற வேலைய எப்போ தான் நிறுத்துவீங்க – பிசிசிஐயை மீண்டும் விளாசிய வெங்கடேஷ் பிரசாத்

அவர் கூறுவது போல ஒருநாள் கிரிக்கெட்டில் இதுவரை இந்தியாவுக்கு எதிராக 5 இன்னிங்ஸில் களமிறங்கியுள்ள பாபர் அசாம் ஒரு அரை சதம் கூட அடிக்காமல் வெறும் 158 ரன்களை 31.60 என்ற சராசரியில் மட்டுமே எடுத்துள்ளார். சொல்லப்போனால் உலகின் மற்ற அணிகளை காட்டிலும் இந்தியாவுக்கு எதிராக தான் அவர் இவ்வளவு குறைவான சராசரியை வைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement