கோலியை தப்பு சொன்னீங்க. இப்போ ரோஹித் என்ன பண்றாரு? லெப்ட் அன்ட் ரைட் வாங்கிய – ஆகாஷ் சோப்ரா

Chopra
- Advertisement -

இந்திய அணியின் மூன்று வகையான கிரிக்கெட்டிற்கும் கேப்டனாக இருந்த விராட் கோலியின் தலைமையில் பல வெற்றிகளை இந்திய அணி பெற்றிருந்தாலும் முக்கியமான தொடர்களில் அதாவது ஐசிசி நடத்தும் தொடர்களில் தொடர்ச்சியாக தோல்விகளை சந்தித்ததால் அவர் மீது அழுத்தம் அதிகரித்தது. இதன் காரணமாக மூன்று வகையான கேப்டன் பதவியில் இருந்தும் வெளியேறிய விராட் கோலி தற்போது ஒரு வீரராக இந்திய அணியில் விளையாடி வருகிறார்.

Rohit-and-Kohli

- Advertisement -

அதே வேளையில் அவருக்கு பதிலாக கேப்டன் பொறுப்பினை ஏற்ற ரோஹித் சர்மாவின் தலைமையின் கீழ் இந்திய அணி தற்போது மிகச் சிறப்பாக விளையாடி வந்தாலும் ஆசிய கோப்பை தொடரினை இழந்துள்ளது. ஐபிஎல் தொடர்களில் ஐந்து முறை கோப்பையை வென்ற ரோஹித் சர்மா நிச்சயம் இந்திய அணிக்காக ஐசிசி கோப்பையை பெற்று தருவார் என்று நம்பிக்கையுடன் அவரது வழியில் தற்போது இந்திய அணி பயணித்து வருகிறது.

இருந்தாலும் இந்த ஆசிய கோப்பையில் ஏற்பட்டுள்ள தோல்வி அவரது கேப்டன்சியின் மீது பெரிய விமர்சனத்தை ஏற்படுத்தி உள்ளது. இது குறித்து இந்திய அணியின் முன்னாள் வீரரான ஆகாஷ் சோப்ரா அளித்த பேட்டியில் கூறியதாவது : கடந்த ஆண்டு ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்ற டி20 உலக கோப்பையின் போது இந்திய அணி தோல்வி அடைந்ததால் கோலியின் மீது விமர்சனங்கள் எழுந்தன.

Rohith

அதோடு கேப்டனை மாற்ற வேண்டும் என்ற கருத்தெல்லாம் இருந்தது. ஆனால் தற்போது என்ன நடந்திருக்கிறது. ரோகித் சர்மா தலைமையில் இந்திய அணி பல்வேறு தொடர்களை வெற்றி பெற்று இருந்தாலும் ஆசிய கோப்பையில் தோல்வியை சந்தித்திருக்கிறோம். எனவே இது கேப்டன் குறித்த பிரச்சினை கிடையாது. அணித்தேர்வில் உள்ள பிரச்சனை தான். டி20 உலக கோப்பையை அருகில் வைத்துக்கொண்டு இந்திய அணியில் ஏகப்பட்ட மாற்றங்கள் நிகழ்ந்து வருகின்றன.

- Advertisement -

குறிப்பாக துவக்க வீரர்களில் துவங்கி மிடில் ஆர்டரிலும் ஏகப்பட்ட மாற்றங்கள் நடைபெற்று வருகின்றன. எந்த வீரரும் அவர்களுடைய இடத்தில் இறங்குவது கிடையாது. அதேபோன்று பந்துவீச்சு யூனிட்டிலும் ஏகப்பட்ட வீரர்கள் அடிக்கடி மாற்றப்பட்டு வருகின்றனர்.

இதையும் படிங்க : டி20 உலகக்கோப்பை அணியில் அந்த இந்திய வீரர் இடம் பிடிப்பது ரொம்ப கஷ்டம் – சபா கரீம் ஓபன்டாக்

அணியில் தேவையில்லாமல் சில வீரர்களும் இருப்பதும், விளையாட வேண்டிய சில வீரர்கள் வெளியேயும் இருக்கின்றனர். இப்படி தொடர்ச்சியாக இந்திய அணியில் ஏற்படும் மாற்றங்கள் தான் தோல்விக்கு காரணமாக அமைகிறது என ஆகாஷ் சோப்ரா காட்டமான கருத்துக்களை பகிர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement