டி20 உலகக்கோப்பை அணியில் அந்த இந்திய வீரர் இடம் பிடிப்பது ரொம்ப கஷ்டம் – சபா கரீம் ஓபன்டாக்

Karim
- Advertisement -

அடுத்த மாதம் ஆஸ்திரேலியாவில் துவங்கவுள்ள டி20 உலக கோப்பை தொடருக்காக தற்போது அனைத்து அணிகளும் தீவிரமாக தயாராகி வருகின்றன. இந்த உலகக் கோப்பை தொடருக்கான அனைத்து அணிகளும் செப்டம்பர் 15-ஆம் தேதிக்குள் அறிவிக்கப்பட வேண்டும் என ஐசிசி கெடு விதித்துள்ளதால் தற்போது ஒவ்வொரு நாடாக தங்களது டி20 உலகக்கோப்பை அணியை வெளியிட்டு வருகின்றனர். அந்த வகையில் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்று வரும் ஆசிய கோப்பை தொடரில் பங்கேற்ற பெரும்பாலான வீரர்கள் இந்த உலகக்கோப்பை தொடருக்கான இந்திய அணியில் இடம் பிடிப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Bhuvneswar Kumar INDIA

- Advertisement -

இவ்வேளையில் ஒரு செட்டிலான அணியாக சென்ற இந்திய அணி தற்போது சிறிது சறுக்களை இந்த ஆசியக்கோப்பை தொடரில் சந்தித்துள்ளது. இதன் காரணமாக இந்திய அணியில் சில மாற்றங்களும் செய்யப்படலாம் என்று தெரிகிறது. இந்நிலையில் சமீபகாலமாகவே காயம் காரணமாக அவதிப்பட்டு வந்த இந்திய அணியில் நட்சத்திர ஆல் ரவுண்டரான ரவீந்திர ஜடேஜா ஐபிஎல் தொடருக்கு பிறகு மீண்டும் தற்போது கம்பேக் கொடுத்து அசத்தலான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார்.

ஆசிய கோப்பை தொடரிலும் இடம் பிடித்த ஜடேஜா மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த வேளையில் ஹாங்காங் அணிக்கு எதிரான போட்டியின் போது ஏற்பட்ட காயம் காரணமாக தற்போது அணியிலிருந்து வெளியேறி அறுவை சிகிச்சையும் மேற்கொண்டுள்ளார். அதன் காரணமாக எதிர்வரும் டி20 உலக கோப்பை தொடரிலும் ஜடேஜா விளையாட மாட்டார் என்ற தகவல் வெளியாகியது.

Ravindra Jadeja

அதனை தொடர்ந்து இந்திய அணியின் பயிற்சியாளரான டிராவிட் டி20 உலக கோப்பைக்கு இன்னும் நாட்கள் இருப்பதினால் ஜடேஜா விஷயத்தில் என்ன வேண்டுமானாலும் நடக்கலாம் என்று தெரிவித்திருந்தார். இந்நிலையில் இந்திய அணியின் முன்னாள் தேர்வுக்குழு தலைவரான சபா கரீம் ரவீந்திர ஜடேஜா மீண்டும் டி20 உலக கோப்பை அணியில் இணைவது மிகவும் கடினம் என்று தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் கூறுகையில் :

- Advertisement -

ரவீந்திர ஜடேஜாவிற்கு ஏற்பட்டுள்ள சூழல் மிகவும் மோசமான ஒன்று. ஏனெனில் அவர் எப்போதெல்லாம் காயத்திலிருந்து மீண்டு வந்து சிறப்பாக விளையாடுகிறாரோ அப்போதெல்லாம் மீண்டும் ஒருமுறை அவருக்கு காயம் ஏற்பட்டு விடுகிறது. அவர் தற்போது அவருடைய கிரிக்கெட் கரியரின் இக்கட்டான நிலையில் உள்ளார். இருந்தாலும் அவர் மீண்டு வந்து சிறப்பாக விளையாடக்கூடிய ஒரு வீரர்தான்.

இதையும் படிங்க : டி20 உலகக்கோப்பையை வெல்ல பாகிஸ்தான் டீம் போட்டுள்ள மாஸ்டர் பிளான் – பாக் ரசிகர்கள் மகிழ்ச்சி

ஆனாலும் அவருக்கு ஏற்பட்டுள்ள காயம் விரைவில் குணமடைந்து அவர் உலக கோப்பைக்குள் கம்பேக் கொடுப்பது என்பது கடினமான ஒன்று. என்னை பொறுத்தவரை அவரால் மீண்டும் வர முடிந்தாலும் பழையபடி சிறப்பாக செயல்பட முடியாது. எனவே எதிர்வரும் டி20 உலக கோப்பையில் ஜடேஜா இடம் பெறுவது மிகவும் கடினம் என சபா கரீம் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement