- Advertisement -
இந்திய கிரிக்கெட்

உங்க மாதிரி ஃபிக்சிங் பண்ணலயே.. பும்ராவை கலாய்த்த பாகிஸ்தான் ரசிகரை நோஸ்கட் செய்த ஆகாஷ் சோப்ரா

பாகிஸ்தான் கிரிக்கெட் அணி இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இன்னிங்ஸ் மற்றும் 47 ரன்கள் வித்தியாசத்தில் தோற்றது. அத்துடன் 147 வருட டெஸ்ட் கிரிக்கெட்டில் முதல் இன்னிங்ஸில் 500+ ரன்கள் குவித்தும் கடைசியில் இன்னிங்ஸ் தோல்வியை சந்தித்த முதல் அணியாகவும் பாகிஸ்தான் மோசமான உலக சாதனை படைத்தது. இது போக சமீபத்தில் வங்கதேசத்திடம் முதல் முறையாக பாகிஸ்தான் டெஸ்ட் கிரிக்கெட்டில் தோற்றது.

மேலும் சமீபத்திய ஐசிசி தொடர்களில் ஜிம்பாப்வே, அமெரிக்க போன்ற கத்துக் குட்டிகளிடம் பாகிஸ்தான் அவமான தோல்விகளை சந்தித்தது. அதனால் பாபர் அசாம், சாகின் அப்ரிடி நாசிம் ஷா ஆகிய 3 முக்கிய வீரர்களை ஓய்வு என்ற பெயரில் பாகிஸ்தான் வாரியம் கழற்றி விட்டுள்ளது. குறிப்பாக இங்கிலாந்துக்கு எதிரான முதல் போட்டியில் 186 ரன்களில் கொடுத்த கேட்ச்சை பாபர் அசாம் தவற விட்டதை பயன்படுத்திய ஜோ ரூட் 262 ரன்கள் குவித்தார்.

- Advertisement -

கலாய்த்த ரசிகர்:

மேலும் தார் ரோட் போல இருந்த பிட்ச்சில் பாபர் அசாம் அரை சதம் கூட அடிக்கவில்லை. அதனால் பாபர் அசாம் உள்ளிட்ட அந்த 3 வீரர்களையும் பாகிஸ்தான் வாரியம் அதிரடியாக ஓய்வு கொடுப்பதாகச் சொல்லி கழற்றி விட்டுள்ளது. இந்நிலையில் பாகிஸ்தான் போன்ற ஆசிய நாடுகளில் சுமாராக செயல்படும் வீரர்களை ஓய்வு என்ற பெயரில் கழற்றி விடுவது வாடிக்கையாகி விட்டதாக முன்னாள் இந்திய வீரர் ஆகாஷ் சோப்ரா ட்விட்டரில் பதிவிட்டார்.

இது பற்றி அவர் பதிவிட்டது பின்வருமாறு. “ஆசியாவில் நாம் வீரர்களை நீக்குவதில்லை. மாறாக அவர்களுக்கு ஓய்வு கொடுக்கிறோம். உண்மையில் நாம் கேட்ச்களை தவறவிடுவதில்லை. மாறாக பந்துக்கு களத்தில் ஓய்வு கொடுக்கிறோம்” என்று பாபர் அசாம் போன்ற பாகிஸ்தான் வீரர்கள் அடிக்கடி எளிதான கேட்சை தவற விடுவதை கலாய்க்கும் வகையில் பதிவிட்டார்.

- Advertisement -

சூதாட்டம் பண்ணலையே:

அதைப் பார்த்த ஒரு பாகிஸ்தான் ரசிகர் “ஆசியாவில் நாம் நோபால் பந்துகளை வீசுவதில்லை. வெள்ளைக்கோட்டை மட்டுமே கொஞ்சமாக தாண்டுகிறோம்” என்று அவருக்கு பதிலடி கொடுத்தார். குறிப்பாக 2017 சாம்பியன்ஸ் ட்ராபி ஃபைனலில் ஜஸ்ப்ரித் பும்ரா நோபால் போட்டதை பயன்படுத்திய ஃபக்கார் ஜமான் சதமடித்து இந்தியாவுக்கு தோல்வியை கொடுத்தார்.

இதையும்படிங்க: 19க்கு 0.. 2019க்கு பழி வாங்கிய பாகிஸ்தான்.. இந்தியாவையும் நாக் அவுட்டாக்கிய நியூசிலாந்து 2016க்குப்பின் வெற்றி

அதை கலாய்க்கும் வகையில் அந்த பாகிஸ்தான் ரசிகர் ஜஸ்ப்ரித் பும்ரா நோ-பால் வீசிய புகைப்படத்துடன் மேற்குறிப்பிட்ட வாசகத்துடன் ஆகாஷ் சோப்ராவுக்கு பதிலடி கொடுத்தார். அதற்கு “நீங்கள் இந்த வழியில் சென்றிருக்கக்கூடாது” என்று பாகிஸ்தான் வீரர் முகமது அமீர் வேண்டுமென்றே நோபால் போட்டு சூதாட்டம் செய்த புகைப்படத்துடன் அந்த பாகிஸ்தான் ரசிகரின் மூக்கை உடைக்கும் வகையில் ஆகாஷ் சோப்ரா பதிலடி கொடுத்துள்ளார்.

- Advertisement -