இந்த வேர்லடுகப்ல ரோஹித்தோட பெயர் தான் எழுதி வச்சிருக்கு.. ஏன் தெரியுமா? – ஆகாஷ் சோப்ரா அதிரடி

Aakash-Chopra
- Advertisement -

ரோகித் சர்மா தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணியானது சொந்த மண்ணில் நடைபெற்று வரும் ஐசிசி-யின் 13-வது 50 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி இறுதி போட்டிக்கு முன்னேறியுள்ளது. இந்த தொடரின் லீக் போட்டிகளில் 9 ஆட்டங்களிலும் வெற்றி பெற்ற இந்திய அணி அரையிறுதி போட்டியில் நியூசிலாந்து அணிக்கு எதிராக 70 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றது. அதனை தொடர்ந்து நடைபெற்ற இரண்டாவது அரையிறுதியில் தென்ஆப்பிரிக்கா அணியை வீழ்த்திய ஆஸ்திரேலிய அணியும் இறுதி போட்டிக்கு தகுதி பெற்றுள்ளது.

அதன்படி இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான உலகக் கோப்பை தொடரின் இறுதி போட்டியானது நவம்பர் 19-ஆம் தேதி நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெற உள்ளது. இந்த போட்டியில் வெற்றி பெறும் அணி சாம்பியன் பட்டத்தை கைப்பற்றும் என்பதனால் இந்த போட்டியின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் உச்சத்தை தொட்டுள்ளது.

- Advertisement -

இந்நிலையில் இந்த உலகக் கோப்பை தொடரின் இறுதிப்போட்டியில் இந்திய அணி வெற்றி பெறுவது உறுதி என்றும் நிச்சயம் ரோகித் சர்மா கோப்பையை வென்ற கேப்டனாகவே தனது பெருமையை நிலை நாட்டுவார் என்று இந்திய அணியின் முன்னாள் வீரராக ஆகாஷ் சோப்ரா நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் கூறுகையில் : இந்திய அணி டாசில் வெற்றி பெற்று முதலில் பேட்டிங் செய்தால் கேப்டன் ரோகித் சர்மா அதிரடியான ஆட்டத்தை விளையாடுவது ஒரு பாசிட்டிவான விடயம். ஒரு கேப்டனாக திறமை இருந்தாலும் கூடவே அதிர்ஷ்டமும் இருக்க வேண்டும். அந்த வகையில் இம்முறை ரோகித் சர்மா அதிர்ஷ்டம் வாய்ந்த கேப்டனாகவே இருந்து வருகிறார்.

- Advertisement -

என்னை பொறுத்தவரை நிச்சயம் இந்த உலகக் கோப்பையில் அவர் பெயர் பொறிக்கப்பட்டுள்ளது. நிச்சயம் அவர் இந்த உலகக் கோப்பையை கேப்டனாக கையில் ஏந்துவார். கடந்த முறை உலக கோப்பை நடைபெற்ற போது ரோகித் சர்மா 5 சதங்களை விளாசியிருந்தார். ஆனாலும் இந்திய அணி வெற்றி பெறவில்லை.

இதையும் படிங்க : ஆஸியிடம் அந்த வம்சாவளி இருக்கு.. அதை மறந்து கனவு காணாதீங்க இந்தியா.. எச்சரித்த இயன் பிஷப்

ஆனால் இம்முறை அவர் அணியின் நலனுக்காக அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி வெற்றிக்காக மட்டுமே போராடுவதால் நிச்சயம் அவர் இந்த உலகக் கோப்பையில் வெற்றி பெற்று கோப்பையை வென்ற கேப்டன் வரிசையில் கபில் தேவ், தோனிக்கு அடுத்து தனது பெயரின் பதிப்பார். நிச்சயம் யாராலும் மறக்க முடியாத கேப்டனாக கோப்பையை வென்று சாதித்த பிறகே அவர் அடுத்த கட்டத்திற்கு செல்வார் என ஆகாஷ் சோப்ரா கூறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement