அடுத்த ஆண்டு கண்டிப்பா தோனி ஐ.பி.எல் தொடரில் ஆடமாட்டார். காரணத்தோடு சொன்ன – ஆகாஷ் சோப்ரா

Chopra
- Advertisement -

மும்பை வான்கடே மைதானத்தில் நாளை பதினைந்தாவது ஐபிஎல் தொடருக்கான முதல் லீக் போட்டி துவங்க உள்ளது. இந்த தொடரின் முதல் போட்டியில் நடப்பு சாம்பியனான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, கொல்கத்தா அணியை எதிர்கொள்ள தயாராக உள்ளது. இந்த ஐபிஎல் தொடருக்கான சென்னை அணியின் கேப்டனாக தோனி தொடர்ந்த வேளையில் நேற்று யாரும் எதிர்பாராத விதமாக திடீரென தனது கேப்டன் பதவியில் இருந்து அவர் விலகினார்.

Dhoni

- Advertisement -

அதனை தொடர்ந்து தற்போது சென்னை அணியின் புதிய கேப்டனாக ஜடேஜா நியமிக்கப்பட்டுள்ளார். இவ்வாறு திடீரென கேப்டன் பதவியில் இருந்து தோனி விலகியது ரசிகர்கள் மத்தியில் பெரிய வருத்தத்தை ஏற்படுத்தியது. ஏனெனில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தலைவராக தோனி இதுவரை சிறப்பாக செயல்பட்டு நான்கு முறை சாம்பியன் பட்டத்தை கைப்பற்றி கொடுத்துள்ளார்.

அதுமட்டுமின்றி ஐபிஎல் தொடரின் ஆரம்ப காலத்திலிருந்தே இதுவரை சென்னை அணி ஒரு பலம் வாய்ந்த அணியாக பார்ப்பதற்கு முக்கிய காரணமாக கேப்டன் தோனி இருந்தார் என்றால் அது மிகையல்ல. அந்த வகையில் சென்னை அணியின் மிகப்பெரிய பில்லராக இருந்த தோனி தற்போது கேப்டன் பதவியில் இருந்து வெளியேறியது அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.

dhoni 1

இந்நிலையில் தோனி எடுத்த இந்த முடிவு அவர் இந்த ஆண்டு ஐபிஎல் தொடரோடு ஓய்வு பெறுவதற்கான அறிகுறி என்று இந்திய அணியின் முன்னாள் வீரரான ஆகாஷ் சோப்ரா தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில் : தோனி தற்போது சென்னை அணியின் ராஜா இல்லை என்பதையும் அவர் சிஎஸ்கே அணியின் ராஜ்யத்திற்கு சேவை செய்யும் ஒரு சாதாரண வீரராக மாறி உள்ளார் என்பதையும் உணர்ந்துள்ளார்.

- Advertisement -

என்னதான் கேப்டன் பதவியில் இருந்து தோனி விலகியிருந்தாலும் அவர்தான் சென்னை அணியின் நிரந்தர ராஜா. ஆனாலும் தோனியின் இந்த திடீர் பதவி விலகல் அவரது ஓய்வு முடிவு குறித்து யோசிக்கப்பட்ட பிறகே எடுக்கப்பட்டிருக்க வேண்டும். சென்னை அணியின் எதிர்காலத்தை கணக்கில் கொண்டும், அணியின் மேன்மையை கணக்கில் கொண்டும் ஜடேஜாவை அவர் ஏற்கனவே ஏலத்தின் போது முதல் வீரராக தக்க வைத்தார்.

இதையும் படிங்க : அவரை விட வேற யாரும் அந்த இடத்திற்கு கரெக்ட்டா இருக்க மாட்டாங்க – ஜடேஜாவை வாழ்த்திய ரெய்னா

அதனை தொடர்ந்து தற்போது தான் பதவி வகித்து வந்த கேப்டன் பொறுப்பையும் அவர் தஜடேஜாவிடம் ஒப்படைத்துள்ளதால் நிச்சயம் அவர் இந்த ஆண்டு இறுதியில் ஓய்வு பெறுவார் என்று ஆகாஷ் சோப்ரா கூறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement