சும்மா பேசாதீங்க குறை சொல்லாதீங்க, அதுக்காக வேணும்னே கேட்ச் ட்ராப் பண்ணுவாங்களா? அஷ்வினுக்கு ஆகாஷ் சோப்ரா பதிலடி

- Advertisement -

வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக அதன் சொந்த மண்ணில் நடைபெற்று வரும் 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடரின் முதல் போட்டியில் இன்னிங்ஸ் வெற்றி பெற்ற இந்தியா ஆரம்பத்திலேயே முன்னிலை பெற்று 2025 டெஸ்ட் சாம்பியன்ஷிப் கோப்பை பயணத்தை வெற்றியுடன் துவக்கியது. டாமினிக்கா நகரில் நடைபெற்ற அந்த போட்டியில் அறிமுக போட்டியிலேயே 171 ரன்கள் குவித்த யசஸ்வி ஜெய்ஸ்வால் ஆட்டநாயகன் விருது வென்று நிறைய சாதனைகளை படைத்து வெற்றியில் பங்காற்றினார். அதற்கு நிகராக மொத்தமாக 12 விக்கெட்களை சாய்த்த ரவிச்சந்திரன் அஸ்வின் வெஸ்ட் இண்டீஸை இரண்டரை நாட்களில் சுருட்டுவதற்கு முக்கிய பங்காற்றினார்.

அத்துடன் அனில் கும்ப்ளே, ஹர்பஜன் சிங் ஆகியோரின் சாதனைகளையும் தகர்த்த அவர் தன்னை நம்பர் ஒன் பவுலர் என்பதை நிரூபித்து 2023 டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனலில் வாய்ப்பு கொடுக்காமல் தவறு செய்து விட்டீர்களே என்று இந்திய அணி நிர்வாகம் வருந்தும் அளவுக்கு மிகச் சிறப்பாக செயல்பட்டார் என்றே சொல்லலாம். முன்னதாக கடந்த 10 வருடங்களாக இந்திய டெஸ்ட் அணியில் 450க்கும் மேற்பட்ட விக்கெட்களும் 3000க்கும் மேற்பட்ட ரன்களை எடுத்து சச்சினை விட அதிக தொடர் நாயகன் விருதுகள் வென்று வெற்றிகளில் பங்காற்றியும் இதுவரை தமக்கு விளையாடும் 11 பேர் அணியில் நிலையான இடம் கிடைக்காததால் ஓய்வுக்குப்பின் ஏன் பவுலராக வந்தோம் என்று நினைத்து வருந்தப் போவதாக அஸ்வின் ஆதங்கத்துடன் கூறியிருந்தார்.

- Advertisement -

ஆகாஷ் சோப்ரா பதிலடி:
அதை விட ஒரு காலத்தில் நண்பர்களாக இருந்த இந்திய அணியினர் தற்போது சீனியர்களாக மாறி தங்களது இடத்தை பாதுகாப்பதற்காக ஒருவருக்கொருவர் உதவுவதில்லை என்றும் அவர் கூறியது அனைவரையும் திரும்பி பார்க்க வைத்தது. இந்நிலையில் ஆஸ்திரேலிய அணியில் இருப்பவர்கள் உடைமாற்றும் அறையில் அதிகமாக பேசிக்கொள்ள மாட்டார்கள் என்றாலும் களத்தில் கண்ணாக செயல்பட்டு வெற்றிகளை குவித்து வருவதாக அஸ்வினின் அந்த கருத்துக்கு முன்னாள் வீரர் ஆகாஷ் சோப்ரா பதிலளித்துள்ளார்.

அதாவது ஒன்று சேர்ந்து விளையாடுவதற்கு நண்பர்களாக இருக்க வேண்டுமென்ற அவசியமில்லை என தெரிவிக்கும் அவர் ஒருவேளை நீங்கள் வீசும் பந்தில் கேட்ச் கிடைத்தால் அதை இந்திய அணியில் இருப்பவர்கள் பிடிப்பதில்லையா? என்று அஷ்வினுக்கு பதிலடியும் கொடுத்துள்ளார். அதாவது நாட்டுக்காக விளையாடுபவர்கள் குடும்பத்தை போல ஒற்றுமையாக இருந்தால் தான் வெற்றி காண முடியும் என்ற அவசியமில்லை என தெரிவிக்கும் அவர் அனைவரும் தங்களது வேலையை சரியாக செய்தாலே சாதிக்க முடியும் என்று கூறியுள்ளார்.

- Advertisement -

இது பற்றி தனது யூடியூப் பக்கத்தில் அவர் பேசியது பின்வருமாறு. “ஆஸ்திரேலியாவை சேர்ந்தவர்கள் அதிகமாக பேசிக் கொள்ள மாட்டார்கள். ஆனால் களத்திற்குள் வந்ததும் அவர்கள் யாராலும் தடுத்து நிறுத்த முடியாத அளவுக்கு செயல்படுவார்கள். குறிப்பாக அந்த அணியில் இருக்கும் நட்சத்திர வீரர்கள் ஒருவரை ஒருவர் சார்ந்து சிறப்பாக விளையாடுவார்கள். அதை விட ஷேன் வார்னே வீசும் பந்தில் வரும் கேட்ச்சை பிடிக்க மாட்டேன் என்று இயன் ஹீலி சொல்ல மாட்டார். அதே போல ஷேன் வார்னேவை பிடிக்காத ஒருவர் ஆஸ்திரேலிய அணியில் இருந்தாலும் அவரது பந்தில் வரும் ரன் அவுட்டை செய்ய மாட்டேன் என்று நிச்சயமாக சொல்ல மாட்டார்”

“மாறாக அனைவரும் தங்களுடைய சிறந்த முயற்சிகளை செய்து ஆஸ்திரேலியாவின் வெற்றிக்கு போராடுவார்கள். இது அனைத்து அணிகளிலும் நடைபெறும் விஷயங்களுக்கான சிறிய எடுத்துக்காட்டாகும். அதாவது அணியில் இருப்பவர்கள் பெரிய அளவில் நட்பாக இருப்பதற்கு அது ஒன்றும் குடும்பம் கிடையாது. அத்துடன் தொண்டையை நெறுக்கும் அளவுக்கு போட்டி இருக்கும் அணியே வெற்றிகரமாக செயல்படும். அதனால் வெற்றிகரமாக செயல்படுவதற்கு ஒரு அணி குடும்பத்தைப் போல் இருக்க வேண்டும் என்று அவசியமில்லை”

இதையும் படிங்க:ஏசியன் கேம்ஸ் தொடருக்கான இந்திய அணியில் சஞ்சு சாம்சன் தேர்வுசெய்யப்படாதது ஏன் – விளக்கம் இதோ

“குறிப்பாக உங்களுடைய சக வீரர்கள் அணியில் உங்களது இடத்தை பற்றி கவலைப்பட தேவையில்லை. நானும் டெல்லிக்காக நிறைய வருடங்கள் விளையாடியுள்ளேன். அங்கே அனைவரும் நட்பாக இருந்தாலும் தொண்டையை நெறுக்கும் அளவுக்கு போட்டி எப்போதுமே இருந்தது. அதனால் அனைவரும் ரன்கள் அடிக்க வேண்டுமென்று விரும்பும் நீங்கள் முதலில் பெரிய ரன்களை அடிக்க வேண்டும்” என்று கூறினார்.

Advertisement