ஏசியன் கேம்ஸ் தொடருக்கான இந்திய அணியில் சஞ்சு சாம்சன் தேர்வுசெய்யப்படாதது ஏன் – விளக்கம் இதோ

Sanju-Samson
- Advertisement -

சீனாவில் நடைபெறவுள்ள ஏசியன் கேம்ஸ் தொடரில் இந்திய அணி முதல்முறையாக கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்க இருக்கிறது. இந்திய கிரிக்கெட் நிர்வாகமான பிசிசிஐ வெளியிட்ட அறிவிப்பில் : ஏசியன் கேம்ஸ் தொடரில் இம்முறை ஆண்கள் அணி மற்றும் பெண்கள் அணி என இரண்டு அணிகளுமே கலந்து கொள்ளும். அதில் ஆண்கள் கிரிக்கெட்டுக்கான அணியாக இரண்டாம் தர அணியே இந்த தொடரில் பங்கேற்கும்.

ruturaj

- Advertisement -

ஏனெனில் இந்தியாவில் எதிர்வரும் 50 ஓவர் உலக கோப்பையை கருத்தில் கொண்டும், அவர்களது பணிச்சுமையை கருத்தில் கொண்டும் முதன்மை அணிக்கு ஓய்வில் தரப்பட உள்ளதால் ருதுராஜ் கெய்க்வாட்டின் தலைமையில் 15 பேர் கொண்ட இளம் இந்திய அணியை அறிவித்துள்ளோம் என பிசிசிஐ தெரிவித்திருந்தது.

இந்நிலையில் இந்த ஏசியன் கேம்ஸ் தொடருக்கான இந்திய அணியை வழிநடத்துவார் என்று எதிர்பார்க்கப்பட்ட ஷிகார் தவானும், அனுபவ வீரர் அஸ்வினுக்கும் இந்த அணியில் வாய்ப்பு தரப்படவில்லை. அதேபோன்று சஞ்சு சாம்சனுக்கும் இந்த தொடரில் வாய்ப்பு வழங்கப்படவில்லை.

Sanju Samson

இரண்டாம் தர இந்திய அணியில் முக்கிய வீரராக சஞ்சு சாம்சன் தேர்வு செய்யப்படுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட வேளையில் அவர் இந்த தொடரில் தேர்வு செய்யப்படாததற்கு என்ன காரணம் என்பது குறித்த தகவல் வெளியாகி உள்ளது. அந்த வகையில் : சஞ்சு சாம்சன் உலகக் கோப்பை தொடருக்கான அணியின் போட்டியில் இருப்பதினால் நிச்சயம் அவர் உலகக்கோப்பை தொடருக்கான முதன்மை அணியில் இடம் பிடிப்பார் என்று தெரிகிறது.

- Advertisement -

ஏனெனில் ரிஷப் பண்ட் இன்னும் காயத்திலிருந்து குணமடையாததால் இஷான் கிஷன் மற்றும் சஞ்சு சாம்சன் ஆகியோர் கே.எல் ராகுலுடன் விக்கெட் கீப்பருக்கான இடத்தில் போட்டியில் நீடிக்கின்றனர். எனவே சஞ்சு சாம்சன் உலகக் கோப்பை தொடரில் இடம் பிடிப்பார் என்பது உறுதியாகியுள்ளது. அப்படி அவர் உலகக்கோப்பை தொடருக்கான அணியில் இடம்பெறப்போவதாலே ஏசியன் கேம்ஸ் அணியில் தேர்வு செய்யப்படவில்லை என்று கூறப்படுகிறது.

இதையும் படிங்க : வீடியோ : போனில் பேசுவதை நிறுத்தி விட்டு சாதனை போட்டிக்கு முன் விராட் கோலி – இந்திய வீரர்களை வாழ்த்திய பிரைன் லாரா

தற்போது வெஸ்ட் இண்டீஸ் நாட்டிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணியிலும் தேர்வாகியுள்ள சஞ்சு சாம்சன் அடுத்தடுத்து போட்டியில் பங்கேற்ப இருப்பதினாலும் அவரை ஏசியன் கேம்ஸ் தொடரில் தேர்வு செய்யவில்லை என்று கூறப்படுகிறது. ருதுராஜ் கெய்க்வாட் தலைமையிலான இந்த ஏசியன் கேம்ஸ் தொடரில் ஐபிஎல் தொடரில் அசத்திய பல இளம் வீரர்களுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement