வென்றும் ஜிம்பாப்வே தொடரின் நோக்கமே வேஸ்ட் ஆகிடுச்சு – அணி நிர்வாகத்தை விளாசும் முன்னாள் வீரர், எதற்குனு பாருங்க

IND vs ZIM Championsa
- Advertisement -

ஜிம்பாப்வேவுக்கு எதிராக அதன் சொந்த மண்ணில் பங்கேற்று வந்த 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் அபாரமாக செயல்பட்ட இந்தியா 3 – 0 என்ற கணக்கில் ஒயிட்வாஷ் செய்து கோப்பையை வென்றுள்ளது. ஆகஸ்ட் 18, 20 ஆகிய தேதிகளில் நடைபெற்ற முதலிரண்டு போட்டிகளில் எளிதாக வென்று முன்கூட்டியே தொடரை கைப்பற்றிய இந்தியா நேற்று நடைபெற்ற கடைசி போட்டியில் முதலில் பேட்டிங் செய்து 289/8 ரன்கள் சேர்த்தது. அதிகபட்சமாக சுப்மன் கில் 130 ரன்களும், இஷான் கிசான் 50 ரன்களும் குவிக்க ஜிம்பாப்வே சார்பில் பந்துவீச்சில் அதிகபட்சமாக ப்ராட் எவன்ஸ் 5 விக்கெட்டுகளை சாய்த்தார்.

Shuman Gill

- Advertisement -

அதை தொடர்ந்து 290 ரன்களை துரத்திய அந்த அணிக்கு டாப் ஆர்டரில் சீன் வில்லியம்ஸ் 45 ரன்களைத் தவிர எஞ்சிய வீரர்கள் சொற்ப ரன்களில் அவுட்டாகி ஏமாற்றினர். இருப்பினும் மிடில் ஆர்டரில் களமிறங்கிய நம்பிக்கை நட்சத்திரம் சிகந்தர் ராசா 9 பவுண்டரி 3 சிக்சருடன் சதமடித்து 115 ரன்கள் குவித்து கடைசி வரை வெற்றிக்கு போராடினார். ஆனால் கடைசி நேரத்தில் சுதாரித்து பந்துவீசிய இந்தியா அவரை அவுட் செய்து 49.3 ஓவரில் 276 ரன்களுக்கு சுருட்டி திரில் வெற்றி பெற்றது. இந்த வெற்றிக்கு சதமடித்து 130 ரன்கள் குவித்து முக்கிய பங்காற்றிய சுப்மன் கில் ஆட்ட நாயகன் மற்றும் தொடர் நாயகன் விருதை தட்டிச் சென்றார்.

நோக்கமே வேஸ்ட்:
முன்னதாக பலவீனமான எதிரணி என்பதாலேயே ரோகித் சர்மா உள்ளிட்ட முக்கிய வீரர்களுக்கு ஓய்வளிக்கப்பட்ட இந்த தொடரில் கேஎல் ராகுல் தலைமையில் பெரும்பாலும் இளம் வீரர்களை தேர்வுக்குழு தேர்வு செய்தது. ஆனால் இளம் வீரர்களுக்கான வாய்ப்பாக நடைபெற்ற இந்த ஜிம்பாப்வே தொடரில் எந்த ஒரு இந்திய வீரரும் அறிமுகமாக களமிறங்கும் வாய்ப்பை பெறவில்லை என்பதிலிருந்தே 3 – 0 என்ற கணக்கில் வென்றாலும் இந்தத் தொடரின் உண்மையான நோக்கம் நிறைவேறவில்லை என்று கூறலாம்.

Rahul-Tripathi

குறிப்பாக கடந்த சில வருடங்களாக ஐபிஎல் மற்றும் உள்ளூர் தொடரில் நல்ல ரன்களை எடுத்து வாய்ப்புக்காக தவமாய் தவமிருந்த ராகுல் திரிபாதி மற்றும் 2021 விஜய் ஹசாரே கோப்பை தொடரில் 3 சதங்கள் உட்பட 600+ ரன்கள் குவித்த ருதுராஜ் கைக்வாட் ஆகியோருக்கு வாய்ப்பு கிடைக்காது நிறைய ரசிகர்களை அதிருப்தியடைய வைத்தது. இதில் கடந்த அயர்லாந்து தொடரில் தேர்வு செய்யப்பட்டு பெஞ்சில் அமர்ந்திருந்த ராகுல் திரிப்பாதிக்கு இப்போதும் வாய்ப்பு கிடைக்கவில்லை.  மறுபுறம் கடந்த ஜனவரியில் முதல் முறையாக ஒருநாள் அணியில் தேர்வான ருதுராஜ் கடந்த 8 மாதங்களாக பெஞ்சில் அமர்ந்து வருகிறார்.

- Advertisement -

தேர்வு எதற்காக:
இப்படி இளம் வீரர்களுக்கு வாய்ப்புக் கொடுக்க விரும்பவில்லையெனில் எதற்காக அவர்களை தேர்வு செய்தீர்கள் என்று முன்னாள் இந்திய வீரர் ஆகாஷ் சோப்ரா கேள்வி எழுப்பியுள்ளார். அதிலும் முதலிரண்டு போட்டிகளில் வென்று தொடரை கைப்பற்றிய பின்பும் கடைசி போட்டியிலும் வாய்ப்பளிக்காதது அணி நிர்வாகத்தின் சுயநல எண்ணத்தை காட்டுவதாக விமர்சித்துள்ள அவர் இது பற்றி தனது யூடியூப் பக்கத்தில் பேசியது பின்வருமாறு.

Ruturaj Gaikwad

“ரசிகர்கள் அனைவரும் ருதுராஜ் கைக்வாட், ராகுல் திரிபாதி உட்பட அனைவருக்கும் நீங்கள் வாய்ப்பு கொடுப்பீர்கள் என்று எதிர்பார்த்து காத்திருந்தனர் ஆனால் அவ்வாறு நடக்கவில்லை. குறிப்பாக ராகுல் திரிபாதியை அணியில் தேர்வு செய்த நீங்கள் களமிறங்கி விளையாட வாய்ப்பு கொடுக்கவில்லையெனில் பின்னர் எதற்காக தேர்வு செய்தீர்கள்?”

- Advertisement -

“அதிலும் சம்பிரதாய கடைசி போட்டியிலும் அவருக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை. ருதுராஜ்க்கும் அதே நிலைமைதான். முதலிரண்டு போட்டிகளில் வென்ற பின்பு நீங்கள் பேட்டிங் வரிசையை ராகுல் – ஷிகர் தவான், இஷான் கிசான், சஞ்சு சாம்சன், தீபக் ஹூடா என மாற்றாமல் அப்படியே வைத்திருந்தீர்கள். சுப்மன் கில் மட்டும் 3வது இடத்தில் மாறி விளையாடினார்” என்று கூறினார்.

Aakash Chopra

அதேபோல் முதலிரண்டு போட்டிகளில் பேட்டிங் தேர்வு செய்யாத ராகுல் 3வது போட்டியில் முதலில் பேட்டிங் செய்தாலும் பயந்துகொண்டே விளையாடியதாலேயே எளிதாக கிடைக்க வேண்டிய வெற்றி கடினமாக போராடி கிடைத்ததாக கூறும் ஆகாஷ் சோப்ரா இது பற்றி மேலும் பேசியது பின்வருமாறு.

இதையும் படிங்க: பாகிஸ்தான் போட்டியில் அரை சதமடித்து விமர்சன வாய்களை நொறுக்க போறாரு – விராட் கோலி பற்றி ஜாம்பவான் கணிப்பு

“டாஸ் வென்று நீங்கள் முதலில் பேட்டிங் செய்தால் தோற்று விடுவீர்கள் என்று அர்த்தமல்ல. கடைசி வரை சென்ற இந்த போட்டியை நீங்கள் சற்று சிறப்பாக பேட்டிங் செய்திருந்தால் எளிதாக வென்றிருக்கலாம். எப்போதும் நீங்கள் உங்கள் மீது சவாலுடன் விளையாட வேண்டும். அப்போது தான் உங்களுக்கு பெரிய போட்டிகளில் விளையாடும் தன்னம்பிக்கை கிடைக்கும். சவாலை எதிர்கொள்வது வெளியிலிருந்து கிடைக்காது இது போன்ற சூழ்நிலைகளில் நீங்களே ஏற்படுத்திக் கொண்டு சாதிக்க வேண்டும்” என்று கூறினார்.

Advertisement