பாகிஸ்தான் போட்டியில் அரை சதமடித்து விமர்சன வாய்களை நொறுக்க போறாரு – விராட் கோலி பற்றி ஜாம்பவான் கணிப்பு

kohli 1
- Advertisement -

இந்தியாவின் நம்பிக்கை நட்சத்திரம் விராட் கோலி கடந்த 2019க்குப்பின் சதமடிக்கவில்லை என்பதற்காக கடுமையான விமர்சனங்களை சந்தித்து வருகிறார். இத்தனைக்கும் கடந்த 10 வருடங்களாக 3 வகையான இந்திய அணியிலும் தனது அபார பேட்டிங் திறமையால் 23000+ ரன்களையும் 70 சதங்களையும் குவித்து ஏராளமான வெற்றிகளை பெற்றுக் கொடுத்து 33 வயதிலேயே தன்னை ஜாம்பவானாக நிரூபித்துள்ள அவர் இடையிடையே 40, 70 போன்ற ரன்களை அடித்தாலும் அனைவரும் பார்ம் அவுட் என்றே கருதுகிறார்கள்.

Virat-Kohli

- Advertisement -

போதாகுறைக்கு ஐபிஎல் 2022 தொடரில் 3 கோல்டன் டக் அவுட்டானது, சமீபத்திய இங்கிலாந்து சுற்றுப்பயணத்தில் ஒரு அரைசதம் கூட அடிக்காதது என கேப்டன்ஷிப் பதவிகளை ராஜினாமா செய்து சாதாரண வீரராக விளையாடும் அவர் எதிர்பார்த்ததை விட சுமாராக செயல்படுவதால் பொறுமையிழந்த கபில் தேவ் போன்ற முன்னாள் வீரர்கள் அணியிலிருந்து நீக்குமாறு வெளிப்படையாக விமர்சித்துள்ளார்கள்.

இருப்பினும் இரவனால் பகலும் வரும் சச்சின் டெண்டுல்கர் போன்றவர்களும் வரலாற்றில் இதுபோன்ற தருணங்களை சந்தித்துள்ளார்கள் என்ற வகையில் பிரைன் லாரா, ரிக்கி பாண்டிங், ஏபி டிவில்லியர்ஸ் போன்ற ஏராளமான வெளிநாட்டு ஜாம்பவான் முன்னாள் வீரர்கள் விமர்சனத்தை மிஞ்சும் ஆதரவை விராட் கோலிக்கு கொடுத்து வருகிறார்கள். மேலும் இங்கு முன்னாள் வீரர்கள் என்ற பெயருடன் விமர்சிக்கும் பலர் 70 சதங்களை கனவில் கூட நினைத்து பார்க்க முடியாது என்ற வகையில் விமர்சனங்களுக்கு கெவின் பீட்டர்சன் தக்க பதிலடி கொடுத்தார்.

kohli 1

திரும்பும் விராட்:
அதுபோக ஓடிஓடி ரன்கள் சேர்த்த களைப்பு ஆட்டத்தில் தெரிவதால் சில மாதங்கள் ஓய்வெடுத்து புத்துணர்ச்சியுடன் ஃபார்முக்கு திரும்புமாறு ரவி சாஸ்திரி போன்ற முன்னாள் வீரர்கள் கொடுத்த ஆலோசனைகளை பின்பற்றாத விராட் கோலி இங்கிலாந்து சுற்றுப்பயணத்தில் மட்டும் பங்கேற்று விட்டு வெஸ்ட் இண்டீஸ், ஜிம்பாப்வே தொடரில் ஓய்வெடுத்தார். இதுவே ஐபிஎல் தொடராக இருந்தால் இப்படி ஓய்வெடுப்பாரா என்று அதற்காக தனி விமர்சனத்தை சந்தித்த அவர் அந்த அத்தனை சத்தங்களையும் காதில் வாங்கி வைத்துக்கொண்டு விரைவில் நடைபெறும் ஆசிய கோப்பையில் அணிக்கு திரும்புகிறார்.

- Advertisement -

சுமார் ஒரு மாதம் ஓய்வெடுத்து புத்துணர்ச்சியுடன் திரும்பும் அவர் இந்த ஆசிய கோப்பையில் மிகச் சிறப்பாக செயல்பட்டு விமர்சனங்களை அடித்து நொறுக்கி டி20 உலக கோப்பையில் எந்தவித கேள்வியுமின்றி இடம் பிடிப்பாரா என்பதை பார்க்க ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர். இந்நிலையில் ஆகஸ்ட் 28ஆம் தேதியன்று பாகிஸ்தானுக்கு எதிரான முதல் போட்டியில் இந்தியா களமிறங்கும் போது அதில் விளையாடும் விராட் கோலி தனது 100வது டி20 போட்டியில் விளையாட உள்ளார்.

shastri

வாய்கள் மூடிக்கொள்ளும்:
அந்த போட்டியில் நிச்சயமாக அரைசதம் அடித்து இதுநாள்வரை விமர்சித்தவர்களின் வாய்களை விராட் கோலி மூட வைப்பார் என்று முன்னாள் ஜாம்பவான் வீரர் மற்றும் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி கூறியுள்ளார். இது பற்றி ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சியில் அவர் பேசியது பின்வருமாறு. “அவரிடம் நான் பேசவில்லை ஆனால் பார்முக்கு திரும்புவது ஒன்றும் ராக்கெட் சயின்ஸ் கிடையாது. பணிச்சுமையால் ஏற்படும் மனதளவிலான தாக்கம் உலகத்தரம் வாய்ந்தவர்களையும் தடுமாற வைப்பதால் அவர்களுக்கும் ஓய்வு தேவை. மேலும் இந்த உலகில் எந்த ஒரு வீரரும் இதுபோன்ற மோசமான தருணத்தை சந்திக்காமல் இருந்ததில்லை”

“இந்த தருணத்தில் என்ன விஷயங்களை சிறப்பாக செய்திருக்க முடியும் என்று அவர் சிந்தித்திருப்பார். அவர் என்ன சரியாக செய்யவில்லை? எதை சரியாக செய்தோம் என்பதில் கவனம் செலுத்த வேண்டும். தேவையில்லாத அம்சங்களை அவரது மன நிலையில் அவர் வர அனுமதித்தது என்ன? என்பதை யோசித்து செயல்பட வேண்டும். எதிர்கால நடவடிக்கைகள் என்ன என்பதை தீர்மானிக்க இது உங்களுக்கு ஒரு வாய்ப்பாகும். ஷாட் செலக்சன், எந்த வகையான திட்டம், எப்போது கியரை மாற்ற வேண்டும், சற்று அதிகப்படியான நேரம் கொடுத்திருக்க வேண்டுமா என்பது போன்ற திட்டங்களை அவர் சிந்தித்து வைத்திருப்பார். தற்போது அதை அவர் செயல்படுத்த வேண்டிய நேரம் வந்துவிட்டது”

shastri

“தற்போது அவர் அமைதியான மனதுடன் விளையாடப் போகிறார். ஏனெனில் அவருக்குள் இருந்த சூடு தணிந்துள்ளது. சமீப காலங்களில் விலகியிருந்த நீங்கள் தற்போது மீண்டும் பார்முக்கு திரும்ப முடியும். குறிப்பாக இந்த தொடரின் முதல் போட்டியிலேயே அவர் அரை சதமடித்தால் எஞ்சிய தொடரில் அவர் மீதான விமர்சன வாயை மூடிக் கொள்ளும். இதற்கு முன் நடந்தது முடிந்து போனது. மேலும் பொதுமக்களின் நினைவுகள் மிகவும் குறுகியது. எனவே இது இரு வகையான வழிகளில் வேலை செய்யும். அந்த மாதிரியான அமைதியை பெற்றுள்ள நீங்கள் அதை எடுத்துக் கொள்வதற்கு அவருக்கு இங்கு நல்ல வாய்ப்பு கிடைத்துள்ளது” என்று கூறினார். கடைசியாக துபாயில் பாகிஸ்தானை சந்தித்தபோது எஞ்சிய இந்திய வீரர்கள் தடுமாறிய போதிலும் விராட் கோலி மட்டுமே அரைசதம் அடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement