என்னா கேப்டன்ஷிப்யா இது.. இந்தியாவுக்கு தோல்வியை கொடுக்கும் முடிவை எடுத்த சூர்யகுமாரை விமர்சித்த ஆகாஷ் சோப்ரா

- Advertisement -

இந்தியாவுக்கு எதிராக சொந்த மண்ணில் நடைபெற்று வரும் 5 போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடரின் முதல் 2 போட்டிகளில் அடுத்தடுத்த தோல்விகளை சந்தித்த ஆஸ்திரேலியா 3வது போட்டியில் வென்று பதிலடி கொடுத்துள்ளது. குறிப்பாக 2023 உலகக்கோப்பை ஃபைனலில் தோல்வியை பரிசளித்த அந்த அணி கௌகாத்தியில் நேற்று நடைபெற்ற 3வது போட்டியில் 5 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியாவை தோற்கடித்தது.

அப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்தியா ருதுராஜ் கைக்வாட் 123* ரன்கள் குவித்த உதவியுடன் 223 ரன்களை இலக்காக நிர்ணயித்தது. அதை துரத்திய ஆஸ்திரேலியாவுக்கு முக்கிய வீரர்கள் ஏமாற்றத்தை கொடுத்த போதிலும் நட்சத்திர வீரர் கிளன் மேக்ஸ்வெல் அதிரடியாக விளையாடி 104* ரன்கள் விளாசி கடைசி பந்தில் இந்தியாவுக்கு தோல்வியை கொடுத்தார்.

- Advertisement -

சுமாரான கேப்டன்ஷிப்:
அதனால் ரவி பிஷ்னோய் அதிகபட்சமாக 2 விக்கெட்களை எடுத்தும் இந்தியா தோல்வியை தவிர்க்க முடியவில்லை. இந்நிலையில் இப்போட்டியில் 6வது பவுலரை சூரியகுமார் யாதவ் பயன்படுத்தாதது இந்தியாவின் தோல்விக்கு முக்கிய காரணமாக இருந்ததாக முன்னாள் வீரர் ஆகாஷ் சோப்ரா தெரிவித்துள்ளார். மேலும் டிராவிஸ் ஹெட்க்கு எதிராக இந்திய பவுலர்கள் ஒரு பவுன்சர்கள் கூட வீசாதது ஆச்சரியத்தை கொடுத்ததாக தெரிவிக்கும் அவர் இது பற்றி பேசியது பின்வருமாறு.

“அக்சர் படேல் 19வது ஓவரை வீசினார். பிரசித் கிருஷ்ணா அதிகப்படியான ரன்களை வாரி வழங்கியும் 18வது மற்றும் 20வது ஓவர்களை வீசினார். ஆனால் இந்தியா 6வது பவுலரை பயன்படுத்தவில்லை. குறிப்பாக 68 ரன்களை கொடுத்த பிரசித் கிருஷ்ணாவை பயன்படுத்திய நீங்கள் 6வது பவுலரை பெயருக்காக கூட பயன்படுத்தவில்லை. மேலும் முதல் 3 ஓவர்களை சிறப்பாக வீசிய அக்சர் படேலை 19வது ஓவரை வீச வைக்கும் அளவுக்கு ஏன் காத்திருக்க வைக்க வேண்டும்”

- Advertisement -

“அந்த வகையில் 6வது பவுலரை பயன்படுத்தாததும் ஒரு ஸ்பின்னரை 19வது ஓவரில் பயன்படுத்தியதும் ரன்களை வாரி வழங்கிய பிரசித் கிருஷ்ணாவை முக்கியமான 18 20வது ஓவர்களில் பயன்படுத்திய தவறு இப்போட்டியில் நடைபெற்றது. 223 ரன்களை சேசிங் செய்வது எளிதல்ல. ஆனாலும் ட்ராபிஸ் ஹெட் அதிரடியான துவக்கத்தை கொடுத்தார். ஆனால் அவருக்கு எதிராக ஏன் ஒரு பவுன்சர்கள் கூட வீசப்படவில்லை என்பது என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை”

இதையும் படிங்க: அவர் சொன்னா சொன்னது தான். அடுத்த ஆண்டு தோனி விளையாடுவது குறித்து முக்கிய அறிவிப்பை வெளியிட்ட – காசி விஸ்வநாதன்

“ஐசிசி தொடர்களில் அவருக்கு எதிராக பவுன்சர்களை வீசாதது தோல்வியை கொடுத்ததாக பேசிய நாம் இப்போதும் அதை செய்யவில்லை” என்று கூறினார். அந்த வகையில் நிறைய ரசிகர்களும் இப்போட்டியில் சூரியகுமார் யாதவ் கேப்டன்ஷிப் சுமாராக இருந்ததாக விமர்சித்து வருகிறார்கள். இதைத்தொடர்ந்து இத்தொடரின் 4வது போட்டி வரும் டிசம்பர் 1ஆம் தேதி நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement