அவர் சொன்னா சொன்னது தான். அடுத்த ஆண்டு தோனி விளையாடுவது குறித்து முக்கிய அறிவிப்பை வெளியிட்ட – காசி விஸ்வநாதன்

Kasi-Viswanathan
- Advertisement -

இந்தியாவில் இந்த ஆண்டு நடைபெற்று முடிந்த 2023-ஆம் ஆண்டிற்கான ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் இறுதி போட்டியில் குஜராத் அணியை வீழ்த்திய சிஎஸ்கே அணியானது ஐந்தாவது முறையாக சாம்பியன் பட்டத்தை வென்று ஐபிஎல் வரலாற்றில் அதிக முறை சாம்பியன் பட்டத்தை வென்ற மும்பை இந்தியன்ஸ் அணியின் சாதனையை சமன் செய்துள்ளது. இந்நிலையில் அடுத்த ஆண்டிற்கான ஐபிஎல் தொடரானது அடுத்த ஆண்டு கோடை காலத்தில் நடைபெற உள்ளது.

இந்நிலையில் அதற்கு முன்னதாக வீரர்களின் ஏலமானது டிசம்பர் 19-ஆம் தேதி துபாயில் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டு அதற்குள் ஒவ்வொரு அணியும் தங்களது அணியில் தக்கவைக்கப்பட்ட வீரர்கள் மற்றும் விடுவிக்கப்பட்ட வீரர்களின் பட்டியலையும் நவம்பர் 26-ஆம் தேதிக்குள் அறிவிக்க வேண்டும் என்று ஐபிஎல் நிர்வாகம் கெடு விதித்திருந்தது.

- Advertisement -

அந்த வகையில் கடந்த நவம்பர் 26-ஆம் தேதி அனைத்து அணிகளும் தங்களது அணியில் இருந்து வெளியேற்றப்பட்ட வீரர்களின் பட்டியலையும், தக்கவைக்கப்பட்ட வீரர்களின் பட்டியலையும் வெளியிட்டு இருந்தது. அந்த வகையில் சென்னை அணியில் இருந்து மொத்தமாக எட்டு வீரர்கள் வெளியேற்றப்பட்ட நிலையில் எதிர்வரும் ஐபிஎல் மினி ஏலத்தில் சில வீரர்களை எடுக்க சென்னை அணி திட்டமிட்டுள்ளது.

அந்த வகையில் சி.எஸ்.கே அணி வெளியிட்ட தக்கவைக்கப்பட்ட வீரர்களின் பட்டியலில் எம்.எஸ் தோனி தான் கேப்டனாக தொடர்கிறார் என்றும் சிஎஸ்கே அணி உறுதி செய்திருந்தது. கடந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் விளையாடும் போது கடைசி கட்டத்தில் முழங்காலில் ஏற்பட்ட காயத்தினால் அவதிப்பட்ட தோனி மைதானத்தில் சிரமப்பட்டதையும் நம்மால் பார்க்க முடிந்தது. அதோட ஐபிஎல் தொடர் முடிந்த கையோடு மும்பை சென்ற அவர் அறுவை சிகிச்சை மேற்கொண்டு தற்போது அதிலிருந்து மீண்டு வரும் முயற்சிகளில் ஈடுபட்டு வருகிறார்.

- Advertisement -

இந்நிலையில் எதிர்வரும் 2024-ஆம் ஆண்டு ஐ.பி.எல் தொடருக்கான சிஎஸ்கே அணியில் அவர் விளையாடுவாரா? என்ற கேள்வி எழுந்துள்ள வேளையில் அதற்கான விளக்கத்தை தற்போது சென்னை அணியின் சி.இ.ஓ காசி விஸ்வநாதன் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் கூறுகையில் : எங்கள் அணியின் தலைவரான தோனி ஒரு வார்த்தையை வழங்கி உறுதி கொடுத்து விட்டால் அந்த வார்த்தையிலிருந்து எப்போதுமே பின்வாங்க மாட்டார்.

இதையும் படிங்க : ஸ்டம்பிங் செய்யப்பட்ட பந்துக்கு நோபால் கொடுத்தது ஏன்? இஷான் கிஷன் செய்த தவறால் கிடைத்த தோல்வி – ரூல்ஸ் சொல்வது என்ன?

அந்த வகையில் அவர் ஏற்கனவே என்னிடம் அடுத்த ஐபிஎல் தொடருக்கான ஆயுத்த பணிகளை மேற்கொள்வதாக கூறிவிட்டார். எனவே நிச்சயம் தோனி தான் எங்களது அணிக்கு தலைமை தாங்குவார். தற்போது அவர் பிட்டாக இருப்பதாக நினைக்கிறேன். மேலும் காயத்திலிருந்து மெல்ல மெல்ல மீண்டு வரும் அவர் நிச்சயம் அடுத்த ஐபிஎல் தொடருக்குள் முழுமையாக குணமடைந்து எங்களது அணியின் கேப்டனாக தொடர்வார் என்றும் “தலைவன் எப்போதுமே தலைவன்” தான் என தோனி விளையாடுவதை காசி விஸ்வநாதன் உறுதி செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement